#பேரம்
கீரைக்காரரிடம் ஐந்து ரூபாய் குறைக்க அரை மணி நேரம் வாதாடி வீட்டுக்கு வந்தார் அந்த குடும்பத் தலைவி..
வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிந்தது அவருடைய மகன் தொலைத்து விட்டு வந்த சாப்பாட்டு பையின் கதை!!!!
#குறள்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
என்று பலகையில் எழுதபட்ட குறளின் முன்னால் நம்பிக்கையோடு காத்திருந்தான் அந்த பிச்சைகார சிறுவன் ..
காகாவிற்கு சோறு வைத்த கையோடு அந்த பையனை விரட்டிவிட்டார் அந்த வீட்டு பெரியம்மா!!!!
#டிக்கட்
பணி நிமித்தமாக வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த முருகனுக்கு கம்பளி துணி எடுத்து வைக்காததால் புது மனைவியை
திட்டிக் கொண்டே வந்தான்..
பரிசோதகர் வந்த பின்பே தெரிந்தது ட்ரெயின் டிக்கட்டை கழட்டி போட்ட சட்டையிலயே வீட்டில் விட்டு வந்தது..
#கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்த்ரேலிய அணியிடம் தோற்ற விரக்தியிலிருந்தார் அப்பா..
பையன் கால்பந்தாட்ட இறுதி போட்டியில் வென்ற கோப்பையை
மௌனமாக வாங்கி வைத்துக் கொண்டார்....பையனின் உற்சாகம் வடிந்து போனது!!!!
#உற்சாகம்
இரண்டு வயசாக இருக்கும் பொழுது வீட்டின் முன்செல்லும் பேருந்துகளுக்கு கைகாட்டி பழகியது...பதிலுக்கு ஓட்டுனர்களும் ஒலிப்பான் கொடுத்து உற்சாகபடுத்திவிட்டு போவார்கள்..
அந்த பேருந்துகள் செல்வதற்கு சாலை அகலபடுத்த தன் வீட்டை இடிக்கும் நிலை வந்த பொழுது பேருந்துகளை வெறுக்க ஆரம்பித்தான்..
Really superb👌👌👌
ReplyDelete