Wednesday, 2 December 2020
ஆண்மனம்
Tuesday, 21 April 2020
அரசியல் பயில்
#அரசியல் பயில்
அரசியல் ஈடுபடுவதற்கு ஏதாவதொரு கட்சி ,கொள்கையின் பொருட்டு உங்களை பிணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை....
எதன்பொருட்டும் மாறாத கொள்கை பிடிப்போ , தனி நபர் வழிபாடோ இல்லாத நபராக இருந்தால் போதுமானது......உலகம் எப்பொழுதும் சீர்திருத்தத்துக்கு உட்பட்டது என்ற பெரியாரின் கூற்றோடு பொருந்திக் கொண்டு இயங்க வேண்டும்....அரசியல் எப்பொழுதும் அதன் மகத்துவத்தை உள்ளடக்கி இருக்க தான் செய்கிறது..அரசியல்வாதிகளால் தான் அதன் மேன்மை தன்மை சிதைவுண்டு அதன் கோரபக்கத்தை மட்டும் சுவிகரீத்து பெரும்பான்மையான மக்கள் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு போடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர்.....
மக்கள் அரசியல் அதன் பரிமாணங்களை கடந்த இருபது ஆண்டுகளில் முற்றிலும் மாறியிருக்கிறது....
மக்கள் மத்தியில் கொள்கைகளும் ,தத்துவங்கள் பற்றியெல்லாம் எந்த கவலைகளும் தேவையில்லை...சமூகத்தில் புலங்கி கொண்டிருக்கும் இணையதளம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரத்தில் கச்சாப் பொருளாக எவைஎவை விமர்சிக்கப்படுகிறதோ அந்தந்த சமயங்களில் மக்களின் பிரதிபலிப்புகளாக ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தேர்தல்களில் மாறும்...இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பெரிய வரி சுரண்டலை பற்றியோ ,அரசியல் கொலைகளை பற்றியோ மற்றும் பணப்பரிமாற்றம் பற்றியெல்லாம் விவாதங்கள் ,உரையாடல்கள் நிகழாது அதன் உள்ளடக்கம் மக்கள் செய்திகளை விட அவர்கள் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளையே விரும்புகிறார்கள்...
இப்பொழுது அதிகம் பேசப்பட கூடிய செய்திகள் எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள்...
பிரியாணிக்கான சண்டை பற்றியும் ,கடப்பா கல்லை திருடிவிட்டு சென்றார்கள் ,காலில் விழுந்து அதிகாரத்திற்கு வந்தார் ,எதிர்கட்சி தலைவர் சட்டையை கிழித்துக் கொண்டாரென்று அனைவராலும் தீர்ப்பு சொல்லக்கூடிய தாங்கள் சரியென்று நிற்க கூடிய பக்கம் தங்களை அமர்த்திக் கொண்டு பேசக்கூடியவை தான் அதிகம்...தங்களால் நியாயம் வழங்ககூடிய அல்லது வாதாட வாய்ப்பிருக்க கூடிய செய்திகளையே அதிகம் விவாதிக்கிறார்கள்...
பொருளாதாரம் பற்றியோ ,அரசின் நடவடிக்கைகளால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்தோ ,வருவாய் வாய்ப்புகள்
பற்றியெல்லாம் சிந்தித்து வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை
வெறும் நான்கு சதவீதமாக தான் இருக்கும் மீதி இருக்ககூடிய தொன்னூற்றாரு சதவீதம் நபர்கள் அது பற்றிய அன்றாட புரிதல்கள் இல்லாதவர்கள் அவர்கள் யார் தங்களை ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள்....
இவர்களை தங்களுக்கு தகுந்தார் போல் மதம் ,சாதி ,குடி இப்படி ஏதாவது ஒன்றின் சிந்தனை மழுங்கடிக்ககூடிய பக்கங்களின் பின் நகர்த்தி விட்டு தங்கள் காரியதனங்களை அரசியல்வாதிகள் சாதித்துக் கொள்வார்கள்...அதற்கென்றே இணையதளத்தில் ஆதரவான பக்கங்களும் எண்ணிக்கைக்கு அதிகமாக இயங்கி கொண்டு இருக்கதான் செய்கின்றன...
கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் தருவாயில்
படேல் க்கு அத்தனை ஆயிரம் கோடியில் சிலை தேவையா என்று எதிர்கட்சிகள் கேட்பார்கள்...அதற்கு ஆளும் தரப்பின் படேல் இரும்பு மனிதர் அவர் இல்லையென்றால் இந்திய ஒன்றியம் இல்லையென்று பதில் சொல்லி இந்த கேள்விகளை இடக்கையில் புறம் தள்ளி விட்டு வேறு ஒன்றிற்கு நகர்ந்துவிடுவார்கள்...ரிசர்வ் என்ற வார்த்தைக்கு இருப்பு என்று அர்த்தம் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் எத்தனையோ இடர்பாடுகளின் பொழுதும் கைவைக்கபடாத ரிசர்வ் பேங்க் இருப்பு தொகை இலட்சம் கோடி அரசிற்கு என்று எடுத்துக் கொள்ளப்பட்டது..இந்த பேரிடர் காலத்தில் அதை பற்றிய விவாதங்கள் ,சரி கேள்விகள் அதிகம் வெளிவராது...
இதுதான் அரசியல்...
இந்த அரசியல்வாதிகளுக்கு எதை லைம்லைட்டில் வைக்க வேண்டும் எவற்றை ப்ளாக்ஹோல் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கின்றன..மக்களுக்கு மாற்றம் தரக்கூடிய
இந்த இணைய யுகத்திற்கு தகுந்த மாதிரியான தெளிவுகள் புகுத்தபட வேண்டும்...
அதற்கு அந்த ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க தெரிந்த எதன் நிமித்தமும் சமரசம் செய்து கொள்ளாத நான்கு சதவீதம் நபர்கள் மக்களுடன் களத்திற்கு வர வேண்டும்...
#இரகுநாத்பழனிச்சாமி
ஆசிரியர்
நல்ல உளவியியலாளர்களால் நல் ஆசிரியர்களாக சிறக்க முடியும்.....மருத்துவம் தவிர்த்து ஆசிரியப் பணிக்குரிய கல்வியியல் துறையில் மட்டுமே மனித மனங்கள் கையாள்வது குறித்து தனிபாடம் நடத்தபடுகின்றது....
இதன் உள்ளார்ந்த அர்த்தங்களை உற்று நோக்கினால் அதன் முக்கியத்துவமும் ஆசிரிய பணியின் மதிப்பீடும் நமக்கு விளங்கும்....பெற்றோர்களும் ,
ஆசிரிய பெருந்தகைகளும் தான் கற்கும் பருவத்தில் அதிகம் அவர்களுடன் பயணிப்பவர்கள்...
பெரும்பாலுமான அவர்களின் நடவடிக்கைகளும்,
உரையாடல்களையும் உட்கிரகித்து அதன்
கலவையாகவே சமூகத்தின் மனிதனாக பரிணமிக்கின்றான்...எனக்கு தெரிந்த சில நிகழ்வுகளை பதிவிடுவதன் வழியாக நீரில் எழும் குமிழ்களாக சில தெளிவுகள் வெளிப்படலாம்...அதன் வழியாக நானும் கற்றடைந்து கொள்ளலாம்....
ஆசிரியர் பாடம் நடத்தும் நுணுக்கங்களின் வழியாக வகுப்பில் வெறும் பகுதி மாணவர்களை மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியும்..மாறாக அவரின் பிரச்சனைகளை கையாளும் நுட்பங்களின் வழியாக தான் அணைவரின் கவன ஈர்ப்பையும் பெற முடியும்.......
மாணவர்களை கடுமையான தண்டனைகள் மூலமாக திருத்திவிடலாம் என்பது பற்றிய வாதம் அதிகமாக எழும் ..ஆனால் அவை முழுமையும் உண்மைக்பு புறம்பானது..கடுமையான தண்டனைகள் தான் தவறுகளை குறைக்கும் என்றால் வதைமுகாம்களும் ,
சிறைச்சாலைகளும் எண்ணிக்கையில் குறைந்திருக்க வேண்டுமே தவிர புதிது புதிதாக உற்பத்தி செய்யபட்டிருக்க வேண்டிய தேவை கிடையாது..மாறாக பெருகிவரும் குற்றங்களுக்கான காரணம் சக மனிதர்களுக்கிடையேயான உரையாடல் குறைந்து வருகின்றது என்பதே உண்மை....
சில பிரச்சனைகள் உடனடியாக பேசினால் தீர்வு..சிலவற்றை சிறிது நேரம் கழித்து ஆலோசித்தால் தீர்வு..சிலதை மௌனத்தால் நீர்த்துப் போகச் செய்வதே தீர்வு..என் பணி நிமித்தமாக உயர்நிலை பள்ளி வரை சென்றிருந்தேன்..அங்கு தலைமையாசிரியர் அறையில் மூன்று மாணவர்கள் வேகமாக வந்து புகார் ஒன்றை வாசித்தனர்..அம்மா , வகுப்பில் உள்ள அந்த பெண் என்னை காதலிப்பதாக எல்லாரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார்.. உடனே தலைமையாசிரியை முகத்தில் எந்தவிதமான அதிருப்தியும் காட்டாமல் அம்மாட்ட சொல்லிட்டைல ப்பா நான் பாத்துக்கரேன் கிளம்புங்கள்..என்றார்...
எனக்கு ஆச்சர்யமா இருந்தஇல்லது...நண்பனிடம் கேட்டேன்...என்ன அவுங்க கூப்ட்டு கண்டிக்கவாவது செய்திருக்கலாமே என்று...அதற்கு அவன் எல்லாப் பிரச்சனகளும் நிதானமாக தான் கையாளுவார்கள்..கோவப்பட்டு தண்டனைகள் கொடுத்தும் என்னவாக போகிறது என்பார்..நிறய பேசுவார்கள்..என்றான்..
பிறகு நானும் யோசித்தேன் எட்டாவது படிக்கின்ற மாணவன் தனக்கு இன்னும் புலப்படாத வார்த்தை ஒன்றை உச்சரிக்கிறான்..அதை பெரிய புகாராக எண்ணிக் கொண்டு அந்த சிறுமியை அழைத்து பாலியல் பற்றி பாடம் நடத்தி தவறென்று காயப்படுத்தி குற்ற உணர்வை உள்ளாக்க வேண்டிய அவசியமில்லை என்பதாகவே மனம்..சிந்தித்தது..இந்த பிரச்சனைக்கு நான் பாத்துக்கரேன் அடுத்தது போதுமான கண்காணிப்பு ஒன்றே போதும்...என்பதே சரி
ஏதோ ஒருவிதத்தில் நம்மை சீண்டிக் கொண்டிருப்பார்கள் அதில் களிப்படைவதை மனம் விரும்பும்..மாணவர் மனம் ஆசிரியர்களிடம் விரும்புவது எப்பொழுதும் எதிர்வினையை தான் ..அதை ஆற்றாமல் இருப்பதில் தான் நம் வெற்றி மீதமிருக்கிறது...மாணவர்களால் நம் முடிவுகளை எப்பொழுதுமே தீர்மானிக்க முடியாததில் இருக்கின்றது நம் திறன்... தொடர் உரையாடல் மூலமாக மாணவர் மனங்களின் அழுகல்களை நீர்த்து போகச் செய்ய முடியும்.. தொடர்ந்து பேசுவோம்
#இரகுநாத்பழனிச்சாமி
காவல்துறை
கண்ணியமிகுந்த காவல் துறை அதிகாரிகளே,
உங்களை வெறுப்பதற்கு முதலில்
என்னை மனித்துக் கொள்ளுங்கள்...உங்கள் மீது எனக்கு துளியளவும் அச்சமில்லை
அதேசமயம் புலங்காத வீட்டின் ஒற்றடையாக வெறுப்பு மண்டிக்கிடக்கிறது... அதிகாரமும் ,பணமும் அற்ற மிகச் சாதாரணமான என்னால் அதை தவிர வேறு ஒன்றை செய்யவும் இயலாது...
விபத்தில் அடிபட்டு அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற நிலையில் தன்னிலை மறந்து திரிந்து கொண்டிருந்த என்னிடமும் ,அம்மாவிடமும் கூட்டத்திலிருந்து விலக்கி நைச்சர்யமாக காதருகே கிசுகிசுத்து மயங்கி விழுந்து இறந்ததாக எழுதி எங்களிடமே கையெழுத்து பெற்று சென்ற அக்கிரமம் அரங்கேறியது.....உடற்கூறு சோதனையில் மூளையில் காயம்பட்டதாகவும் தலைக் காயம் தான் மரணத்திற்கு காரணமாக முடிவு வந்த பின்பும் எங்களால் அதை வைத்து ஒன்றும் செய்ய முடியவில்லை..என் அப்பாவின் மரணம் எதன் பொருட்டு என்று எங்கள் ஒருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை....
எங்களிடம் எழுதி
வாங்கியது தான் முதல் தகவல் அறிக்கை என்றும் அதில் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் வாக்குமூலங்களும் என்று பிறகுதான் அறிந்துகொண்டேன்..
எந்தந்த வகைகளில் தங்கள் பணிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிற்கிறதோ
அந்தந்த வார்த்தைகளில் எல்லாம்
அதாவது சக்கரை நோயும் ,சிறுநீரக கல் சிகிச்சை எடுத்ததெல்லாம் கோர்த்து எழுதி கொண்டு ஒருவாயாக குற்றத்தை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்தி காவல்துறையினர் விலகிக் கொண்டார்கள்...காவலர் சமூகம் முழுக்க முழுக்க சுயநலம் கொண்டவர்களால் நிரம்பி கிடக்கிறது...
அதிகார படிநிலையில் உள்ள காவல்துறையில் ஒவ்வொருவருமே தங்கள் கீழ்நிலையில் உள்ளவர்களை அடிமை மனப்பான்மையில் வழிநடத்துகிறார்கள்...ஆய்வாளர்க்கு ,உதவி ஆய்வாளர்,அவருக்கு ஏட்டு ,ஏட்டுக்கு புதிதாய் பணி அமர்ந்தவர் இவர்கள் எல்லாருக்குமாய் சேர்த்து அதிகாரமற்ற தினக் கூலிகளும் ,பயத்தை கக்கத்தில் சுமந்து திரியும்
நடுத்தர வர்க்கமும் இவர்களின் இலக்கு..இவர்களை மட்டுமே உங்களால் ஒருமையில் அழைத்து விட முடியும்......
சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலயே இருக்கின்ற பொருளாதார நிலையில் மேம்பட்டு இருக்கிறவர்களிடம் விரல் அசைவை கூட காவலர்களால் காட்டிவிட முடியாது..
நானும் தவறின் பொருட்டு காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு கணவன் மனைவி பிரச்சனையாக மத்தியஸ்தரம் நடந்து கொண்டிருந்தது...நான் அங்கு பணிபுரியும் எழுத்தரிடம்
என் முகவரியை பதிவு செய்வதற்காக காத்திருந்தேன்.....எனக்கு முன்னதாக ஒருவர் கையை கட்டிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுக் கொண்டு
தன் இருப்பிடம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்....அடுத்ததாக நான் வெகு இயல்பாக என்னை பற்றிய தகவல்களை கூறிக் கொண்டிருந்தேன்..அவை அவருக்கு ஒரு விதமான அவமதிப்பாக தோன்றியிருக்க வேண்டும்..வார்த்தைக்கு வார்த்தை என்னிடம் சார் மற்றும் கைகட்டலும் எதிர்பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன்....இதனால் இரண்டு முறை வெளியே செல்ல முற்படும் பொழுது அவன கூப்டு ,அவன கூப்டு என்று ஒருமையில் கூப்பிட்டு சுய இன்பம் பெற்றுக் கொண்டார்...
குழந்தைகளோடு நின்றிருந்த தம்பதியர்களை காவல் துறை ஆய்வாளர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்....அவர்களை நீ ,வா என்று ஏகமாக பேசிக் கொண்டிருந்தார்..இன்னும் சொல்லப் போனால் அக்கிரமான வார்த்தைகளை வசைமழையாக பொழிந்துக் கொண்டிருந்தார்...உண்மையில் அந்த வார்த்தைகளை இந்த இடத்தில் பதிவிட முடியவில்லை...யாராக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு அப்பா தான் கதாநாயகன்...குழந்தைகள் முன்னிலையில் இனி அந்த முகம் எவ்வாறு எதிர்கொள்ளும்...பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்...என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை முனகிக் கொண்டே நகரத்தான் முடிந்தது...ஏன் பெரியவர்கள் எக்காரணம் கொண்டும் காவல்நிலையத்தில்
கால் வைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்கள் என்று புரிந்தது..ஆனாலும் எனக்கு தெரிந்து சில நல்லவர்களும் அத்தி பூத்தாற்போல் காணக் கிடைக்கிறார்கள்..தன் அடையாள அட்டையை எதன் பொருட்டும் பயன்படுத்த நினைக்காத நண்பன், அப்பா என்று அழைத்த ஒரு காரணத்திற்காக அன்பின் பொருட்டு அக்கரையாய் பேசும் காவல் ஆய்வாளரையும் அறிந்திருக்கிறேன்...இதன் பொருள் அவர்கள் பணி பொறுப்பற்றவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்த மாண்புமிகுக்கள்...
சட்டம் மக்களை காக்க
காவலர்கள் மக்களை நல்வழிப்படுத்த ,அதிகாரம் கொண்டு அடிமைப் படுத்தவோ அடி கொடுக்கவோ அல்ல....
#இரகுநாத்பழனிச்சாமி
Wednesday, 1 April 2020
வீடற்றவனின் நிர்வாணம்
நிர்வாணம் பொதுவாக நாகரீகத்தின் அச்சோடு ஒட்டப்பட்டு மனித தோற்றத்தின்
படோடாபமாக சில நேரங்களில் ஆடைகளின் பின்னல் வழியே மதிப்புக்குரியவர்களாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது....
கிழிந்த உடைகளை அணிந்து கொள்வதிலும் ,ஒருவேளை மறந்து போயி பூட்ட மறந்திருக்கும்
அவிழ்ப்பானையும் சுட்டிக் காட்டுபவர்களிடம் பெரும்பாலும் எனக்கு கூச்ச உணர்வு தோன்றியதில்லை மாறாக சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து தான் பழகியிருக்கிறேன்....
நான் விபரம் அறிந்து இருபத்தைந்து வருடங்கள் வாடகை வீட்டில் ஆறுக்கு ஆறு அறையில் நானும் என் குடும்பமுமாக நால்வரும் அதற்குள்ளாகவே புலங்கியிருக்கிறோம்..காலையில் பள்ளி செல்லும் நெருக்கடி ,பணிக்கு ஆயத்தமாகும் அவசரம் தந்த சூழலால் உடுப்பு மாற்ற உடுத்த அந்த ஒரே அறையின் சந்திப்புகள் தவிர்க்க முடியாதவை...கழிப்பறைகள் இல்லாத தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட தீக்குச்சியாய் நெருக்கி ஒட்டப்பட்ட வீடுகள்...குறிப்பிட்ட வயது வரும் வரை காலை கடன்கள் சுற்றி ஓடிய சாக்கடையில் தான் பெரும்பாலான நிர்வாணங்கள் அந்த குடியிருப்பில் வாழ்ந்த பெண்களின் காட்சி படிமங்கள் தான்...
எதை பெரிதாக போற்றுகிறமோ அதை துட்சமாக நினைக்கும் மனப்பான்மை இயல்பாகவே உருவானதால் கூச்ச உணர்வு என்பது எனக்கு மழுங்கடிக்கப்பட்டிருந்தது....
குறிப்பிட்ட வயதிற்கு பின்பாக கரடு தேடி ஓடிய பொழுதும் எனக்கு முன்பாக அங்கு நூறு நிர்வாணங்கள் சூழ்ந்திருக்கும்..அதனால் அரைமேனியோ ,திறந்த மேனியோ என் கண்களை சுழிக்கச் செய்ததில்லை....
வீடற்றவனின் மனநிலை வெறுமையான உள்ளீடற்ற வதைகள்..ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித அகசிக்கல்களின் முடிச்சுகளில் சுழன்று கொண்டு இருப்பார்கள்...எங்கு சென்று திரும்பி வந்தாலும் அடைவதற்கு கூடு என்று ஒன்று இருந்தாக வேண்டும்.. அதை என் அப்பா எங்களுக்கு இறுதியாக அளித்து சென்றிருக்கிறார்...அவருக்கு நாள்தோறும் எங்களின் வேண்டுதலுடன் கூடிய நன்றிகள்...
வீடற்றவனின் குரல் குமுறல்கள் நிறைந்தது.....
#இரகுநாத்பழனிச்சாமி
Saturday, 14 March 2020
மகிழ்ச்சி
மகிழ்ச்சியை சந்தைப்படுத்திவிட முடியாது... இது ஒன்றும் நுகர்வு பொருள் அல்ல வாங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் மாறாக பரவச் செய்ய தான் முடியும்..மகிழ்ச்சியை ஆவணங்களிலும் ஆடம்பரங்களிலும்
கண்டடைவதென்பது ஒரு விதமான சுயஇன்பம் மட்டுமே!! மகிழ்ச்சியான மனநிலை என்பது முழுக்க முழுக்க உங்கள் மனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பலங்களும் ,பலவீனங்களும் அதையொட்டி சக மனிதர்களிடம் காட்டும் அன்பும் தான்.....அன்புக்கு ஆதாரமாய் இருப்பது நம்பிக்கை அதை வளர்த்தெடுக்காமல் அன்பெனும் சுவரை கட்டிக் கொள்ள முடியாது....உண்மையில் அன்பாய் இருத்தல் என்பது தன்முனைப்பு அற்று இருப்பது என்பது தான்...குப்பையில் இருப்பவரையும் ,கோபுரத்தில் இருப்பவரையும் ஒரே கண்ணோட்டத்தில்
மனிதன் என்ற புள்ளியில் பார்ப்பது தான்.....
தருணங்கள் தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றன..அவற்றை நேராக அணுகுகின்ற நொடிகள் மட்டுமே உங்களை அன்பு செய்பவர்களை அடையாளம் காணும் பொழுதுகள்..மகிழ்ச்சியாக இருப்பதென்பது உண்மையில் பெறுவது அல்ல கொடுப்பது பகிர்ந்து கொள்வதன் வழியாக தான் அதன் ஆச்சர்ய மாச்சர்யங்களை உணர முடியும்....என்னிடம் இப்பொழுது இருப்பதற்கும் இனி எப்பொழுதும் இருக்கப் போவதற்கும் ஒன்றுமில்லை என்ற உண்மை தான் என்னை முப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றது...
வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மகிழ்ச்சிகளை மழுங்கடிக்கப்பட்ட ஒன்றாகதான் கற்பிதம் செய்யப்படுகின்றது...தீவிரமான அணுகுமுறை தான் வெற்றியாக கருதப்படுகின்றது..
கார்களோடும் ,சொந்த கட்டடங்களோடும் இருப்பது தான் முன்னேற்றமாகவும்,
மகிழ்ச்சியாகவும் தீர்மானிக்கப்படுகின்றது....
இங்கு கண்ணுக்கு புலப்படாத வரிசை ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது...அதன் முன்னாலும் ,பின்னாலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எவ்வளவு முயன்றாலும் அறிந்து கொள்ள முடியாது..நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது..ஆனாலும் அந்த வரிசை நகர்ந்து கொண்டு தானிருக்கும்...இருக்கின்ற நொடிகளில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் ....மகிழ்வித்து மகிழுங்கள்..மனிதரை நேசியுங்கள்...
#இரகுநாத்பழனிச்சாமி
Monday, 27 January 2020
ஆடை சுதந்திரம்
குழந்தைகளிடம் வெற்றுடம்போடு நிறுத்தபட்ட இரண்டு பொம்மைகளை காட்டி இதில் எது ஆண் பெண் என்று கேட்டிருக்கிறார்கள்...உடை உடுத்துனா தான தெரியும் என்றிருக்கிறார்கள்..நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் இங்கு ஆண் ,பெண் பேதம் ஆடைகளில் இருந்தே ஆரம்பிக்கபடுகிறது....பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பொழுது பாதிப்புக்குள்ளானவர்களாக மட்டுமல்லாமல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கபடும் அவலம் தொடர்கதையாகி வருகிறது...பெரும்பாலானோரால் உடை உறுத்தல் காரணமாக சொல்லபடுகிறது..
முற்போக்காளர்களாக காட்டிக் கொள்பவர்கள் மௌனியாக மாறிக்கொள்வார்கள்..அவர்கள் மறைபொருளாக இருந்தால் தான் காமம் களிப்பூட்டகூடியதாக இருக்கும் என்ற வாதம் வைப்பவர்களாக இருப்பார்கள்..மேம்போக்காக பார்த்தால் சரியாக தோன்றும்..ஆனால் உண்மை அதுவல்ல....கடவுளை இன்னும் யாரும் கண்டதில்லை மறைவாகவே இருக்கிறார்..அதனால் தான் அவர் மேல் சுவாரஸ்யங்கள் கூடிக் கொண்டே இருக்கிறது..இல்லை என்பதற்கு லட்சம் சான்றுகள் அடுக்கினாலும் அவர் காணாமல் இருப்பதால் தான் நூற்றாண்டுகளாக நம்பிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது..அதையே பெண்ணின் உடலுக்குமாய் பொருத்தி பார்க்கிறார்கள்..மறைத்து வைத்தால் தான் சுவாரஸ்யம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது....
ஆதியிலிருந்து காமம் இருந்துகொண்டே தானிருக்கிறது..குரங்கா இருந்த போதிலும் ,ஆதிவாசியாக அலைந்த பொழுதும்,அரைகுறை ஆடையுடன் இருந்த பொழுதுமாய் என்னென்றைக்குமாய் இருந்து கொண்டே இருக்கின்றது.. ..ஆடை தான் காரணமாக கருதுகொள்ளும்படி செய்வது காலங்காலமாக ஆக்கிரமித்திருக்கும் ஆதிக்க மனப்பான்மை தான்..இந்தியாவில் பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கபடுபவர்கள் வயது வந்தவர்களை விட ஆறு வயது குழந்தையும் ஆறுமாத குழந்தையும் தான்..அவர்கள் எதை கண்டு சிதைக்கபடுகிறார்கள்..
இன்னொரு ஆய்வில் பலவந்தபடுத்தப்பட்ட பெரும்பாலான பெண்கள் எல்லாம் உங்கள் பார்வையில் பாதுகாக்கப்பட்ட உடைகளை அணிந்தவர்கள் தாம்...என் பார்வையில் தங்கள் விருப்பம் போல உடைகளை உடுத்தி கொள்பவர்களிடம் ஆண்கள் அருகாமையில் செல்லவே தயங்குகிறார்கள்..அவர்கள் பார்வையில் அந்த பெண் அடங்காபிடாரியாக மட்டுமே அறியபடுகிறாள்..எதற்கு வம்பு என்று ஒதுங்கி தான் செல்கிறார்கள்...எந்த உடை உடுத்திக் கொள்ள வேண்டும் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்கள் தாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும்..திருத்தபட வேண்டியது ஆடைகளை அல்ல ஆணின் மனங்களை தான்...
#இரகுநாத்பழனிச்சாமி