Wednesday, 9 January 2019

சமத்துவக் குடியும் ,சாதி ஒழிப்பும்

#சமத்துவக்குடியும் #சாதிஒழிப்பும்
      புத்தாண்டு கொண்டாட்டம்
எல்லாம் எதையும் அடிக்க கூடாதுனு பெரும்பாலான ஆண்களால் முடிவெடுக்கப்பட்டு தொடங்கும்...
அந்த முடிவுகள் பொங்கல்
அன்றோ மீறிப் போனால் தமிழ்ப் புத்தாண்டிற்குள்ளாகவோ காலாவதியாகி விடும்!!! நாங்கள் புத்தாண்டு தொடக்கமே அடிச்சு தான் ஆரம்பிக்கனும் முடிவு பண்ணி மூன்று நபர்கள்  விஜி,ராஜா மற்றும் நான் ஒன்றானோம்....பக்கார்டியோடு ஆரம்பித்த பயணம் ப்ளன்டர்
ப்ரைடுடன் முடிந்தது ..!!!!எல்லா மதங்களிலும் பிரிவினை இருக்கு ஆனா கடவுளை வைத்தே முகத்தில் பிறந்தவன் ,நெஞ்சில் பிறந்தவன் என்று இங்கே வர்ணம் பிரித்ததில் தான் சாதிக்கள் இன்னும் சாதித்துக் கொண்டிருக்கின்றன!!! ஆணவக் கொலைகள் என்று செய்திகளை படிக்கும் பொழுது நான்  அரைவேக்காட்டு கொலைகள் என்று தான் அர்த்தபடுத்தி கொள்வேன்....
ஆணவம் நான் அவனைவிட உயர்ந்தவன் ,திறமையானவன் என்ற எண்ணம் பிறப்பதால் வருவது இது ஆண் ,பெண் சேர்க்கையினாலயே பிறந்த ஒருவருக்கு ஏற்படுமானால்
அது ஆணவம் அல்ல அரவேக்காட்டுதனம்.....பக்கார்டிய நானும் விஜியும் கட்டிங் உள்ள
விட்டுட்டு ராஜாவையும் இணச்சுகிட்டு மிச்சர் ,ஸ்ப்ரைட் எல்லாம் வாங்கி வச்சுகிட்டு அடங்கமறு படத்துக்கு போனோம்..படம் விறுவிறுப்பாக போனது நல்லா இருந்தது....புத்தாண்டும் வந்துவிட்டது..!!!!ராஜா அறையில் வந்து உட்கார்ந்தோம்!!!ப்ளன்டர் ப்ரைடு கையில் எடுத்துக் கொண்டு பேச்சு ஆரம்பித்தது..நான் சமூகத்தால் சுட்டிக் காட்டப்படுகிற ஆதிக்கசாதி ,விஜி பட்டியல் பிரிவை சேர்ந்தவன் ,ராஜா அவனுக்கும் கீழேயாம்!!!ஆனால் குடி மூன்று பேரையும் இணைந்திருந்தது!!!எனக்கு இந்த குடி அறிமுகமாகி ஆறாவது முறை....
புதிய அறிமுகம் தான்!!!
நண்பன் விஜி தான் ஆரம்பித்தான் ..,அவன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பாம் கேட்டால் அவுங்க சாதி என்ன ,நம்ப சாதி என்ன என்று கேட்டிருக்கிறார்கள்!!அதற்கு விஜி நம்மல்லயே நாலு தெரு தள்ளி போனா விட மாட்டானுக இதுல நீங்க கீழ்சாதினுன்றீங்க என்றான்!!!அப்ப நான் அறிந்த ஒரு செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்...மற்ற மதங்கள்லயும் பிரிவுகள் இருக்கின்றன ஆனால் தொட்டால் தீட்டு, உண்டால் விலக்கு என்ற கொடுமையெல்லாம் குறைவு...இங்கே  பார்ப்பீனியத்தை எதிர்ப்பதே பார்ப்பனர்களை எதிர்ப்பதாக கருதப்படுகிறது...பெரியாரிடம் ஒரு சமயம் கேள்வி கேட்கபட்ட பொழுது அவர் சொன்ன பதிலையே நானும் அவர்களிடம் சொன்னேன்...!!!!மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதவீதம் உள்ள ஒரு கூட்டத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் அது எப்படி சரியாகும் என்பதே அக்கேள்வி!!!அதற்கு அவர் சொன்ன பதில் நூறு பேர் இருக்க கூட்டத்துல இரண்டு பிக்பாக்கெட் காரன் நுழஞ்சா மிச்சம் இருக்க தொண்ணூற்று எட்டு பேருக்கும் தான ஆபத்து என்றாராம்...இங்கே பார்ப்பனர்கள் எண்ணிக்கை குறைவு தான் ஆனால் பார்ப்பீனிய எண்ணம் எல்லா பக்கமும் பரவியிருக்கிறதே!!! நான் மட்டும் தான் உயர்ந்தவன் நீங்கள் எல்லாம் எனக்கு கீழே என்று சொல்லியிருந்தால் காலப்போக்கில் சாதிகள் காணாமல் போயிருக்கும் உனக்கு கீழ ஒருத்தன் உள்ளான் அவனுக்கும் கீழ ஒருத்தன் இருக்கான்  என்ற படிநிலைகளை உருவாக்கி வைத்து அல்லவா இன்று வரை சாதி சாதித்துக்கொண்டிருக்கிறது...
இப்ப இரண்டு ரவுண்டு முடிந்திருந்தது!!! ராஜா இப்ப சுதி ஏறி என் மேல அவுங்க அம்மா எவ்ளோ ப்ரியமா இருப்பாங்க  தெரியுமா!!நான் போனா சாப்டாம விட மாட்டாங்க அப்படி என்று அன்ப  பொங்கினார்..உடனே நான் கூட தான் இப்ப உங்கள் மேல அன்பா இருக்கேன் நான் உங்க வீட்லயோ ,நீ எங்க வீட்லயோ பெண் எடுத்துட்டு இப்படி மகிழ்ச்சியா இருக்க முடியுமா!!!! இங்க சமூகம் வேற மாதிரியாக இருக்கிறது.. என் குடும்பம் என் நிறைவை ஏத்துக்கிட்டாலும் உறவுகள் என்ற சமூகம் என்னை விலக்கி வைத்து ஏக்கப் பார்வை பார்க்க வைத்துவிடும்....இதெல்லாம் உடையனும்னா  முதல் படியா கல்வி இலவசமாக்கபட வேண்டும் என்றேன்..அரசுப் பள்ளி அல்ல அரசாங்கமே பள்ளியாக மாறுவது..பொதுவுடமை தான் தீர்வு.. கல்வியை ,மருத்துவத்தை தனியாரிடம் விடாமல்  எல்லாமே ,எல்லோருக்கும் கிடைப்பதாக செய்வது தான் இந்த சாதி ஒழிப்பிற்கு ஆரம்பமாகும்...உடனே பொதுவுடமை ஆக்கிவிட்டாலும்  சரியாகிவிடுமா என்றால் அதற்கு நாம் இன்னும் நூறாண்டுகள்  காத்திருக்க வேண்டும்..ஏனென்றால்
இங்கே இவை பொதுபுத்தியாக்கப்பட்டுவிட்டது!!காது நீட்டமான நாய் திறமையான நாய் காது மடங்குன நாய் திறமையில்லாத நாய் என்று ஏதோ ஒரு நாய் சொல்றத  கேட்டுட்டு கத்திகிட்டு கிடப்பது தான் இங்கே சாதி சண்டை!!!! மூனாவது ரவுன்டு உள்ளே போயாச்சு!!! ராஜா தள்ளாட ஆரம்பிக்கிறார்..... சின்ன பொய் ஒரு மனிதன தூங்க விடாமல் செய்யுமா???????? ஆம் என் நண்பனை  தூங்க மட்டும் விடாமல் மருத்துவரை தேடிச் சென்று மாத்திரையையும் உண்ண வைத்துவிட்டது..நானும் இந்த நிலைகளை தொட்டிருப்பதால் மன கஷ்டங்களை உணர்வேன்!!! எந்த நிலைகளிலும் மனதை விட்ரக் கூடாது என்று பெரியவர்களின் வாக்கை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சில செய்திகளை நான்காவது ரவுன்டில் விவாதித்தோம்....!! அகத்திற்கும் ,புறத்திற்குமான மாறுபாடு தான் மன அழுத்தமாக மாறுகிறது!!!நான் காதலில் தோல்வி அடைந்ததை மனதில் ஆயிரம் வேதனைகள் சுமந்ததை  நண்பர்கள் முன்னிலையில் அதை வெளிக்காட்டாமல் போனால் போகட்டும் போடா என்ற வெளித் தோற்ற நடிப்பு இப்படி இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தேன்!! குடும்ப பிரச்சனையில்  பழிவாங்க துடித்த மனம்  கத்தியை தூக்கி கொண்டே சுற்றிக் கொண்டிருந்தது ஆனால் எனக்கே உரிய பயம் ,சமூகத்தின் மீதான கேட்க முடியாத கோபம் என எல்லாம் என்னை தடுத்தது ..இப்படி என் மனம் விரும்பிய தாக்க வேண்டிய எதிர்தரப்பை தாக்க முடியாததால் என் பக்கமே திரும்பி நின்று காத்துக் கொண்டிருந்தது! ஒரு நிகழ்விற்காக காத்துக் கொண்டிருந்த மனதிற்கு ஒரு இறப்பு  நிகழ்வு வழியை திறந்துவிட்டு கத்திமுனை என் பக்கமே திரும்பி மனதை குத்தி  என்னை நான்கு வருடம் திக்குமுக்காட வைத்துவிட்டது!!!! நான் மனதை கைபற்ற வாசிப்பை வசப்படுத்திக் கொண்டேன்..!!!! மகிழ்ச்சியை சந்தைபடுத்த கற்றுக் கொண்டேன்..இதையெல்லாம் நான்காவது ரவுன்டு முடிக்கும் பொழுது சொல்லி முடித்து விட்டேன்..பிறகு ஒரு டென்தௌசன்ட் பியரை உள்ள விட்டு ஆளுக்கு பாதி முடித்துவிட்டோம்..இன்னும்
கூட இருந்தால் குடித்திருக்கலாம்..தூங்க மணி நான்காகிவிட்டது!!! நான் எட்டு மணிக்கு எழுந்துவிட்டேன்..எதிர்த்த வீட்டில் ஒரு அழகான பெண் அவளை நோக்கி கொண்டே சில பலான படங்களை பார்த்து அந்த நாளை இனிதே தொடங்கிவிட்டேன்..அடிக்க கூடதென்று தொடங்குகிற நாள் எனக்கு எல்லாம் அடித்த பின் தொடங்கியது!!!
மனசை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மனப்பாதிப்புக்குள்ளானவர்கள் முதலில் மகிழ்ச்சியாக காட்டிக் கொள்ள ஆரம்பிப்பதே மன மாற்றத்திற்கான முதல் வழி!!!
புத்தாண்டு 2019 அன்புடன் வரவேற்றது

Tuesday, 8 January 2019

இரகசிய முத்தம்

எனக்கு 💋 முத்தம் என்றால் கொள்ளைப் ப்ரியம்...முத்தம் கொடுத்தா  கலோரியெல்லாம் வீணாகும் என்று அறிவியல் சொல்லுகிறது!!!! நான் எத்தனை லட்சம் கலோரி வேண்டுமானாலும் செலவழிக்க தயாராகவே இருக்கிறேன்..கடந்த இரண்டு வருடமாகவே அவரிடம் முத்தம் பெறுவது எனக்கு மிகவும் சிரத்தையாகவே இருந்தது!!! அந்த முத்தத்திற்கா எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராகவே இருந்தேன்!!!அருணாச்சலமாக மாறி முப்பது நாளில் முப்பது கோடியும் கூட....அவருக்கென்னவோ இந்த முத்தம் தீண்டதகாததாக மாறிவிட்டது போல!!!!நானும் கடந்த இரண்டு நாட்களாக உன் பிறந்த நாளன்றாவது எனக்கு முத்தம் கொடு என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன்..எத்தனையோ முறை முட்டியும் முடியாது என்ற பதிலே வந்தது!!!அந்த நாளும் வந்தது, ஆம் அன்று அவரின் பிறந்த நாள் ...காலையிலயே வாழ்த்துச் சொல்லி எப்படியும் முத்தம் வாங்கிவிடலாம் என்றிருக்க அவரோ, பிறந்தநாளென்று பார்க்கிறேன் இல்லையென்றால் திட்டி விடுவேன் என்று சொல்ல கல்லூரி கிளம்பி வந்துவிட்டேன்!!!! இன்று மாலை எப்படியாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி அவரின் அன்பை பெற்று முத்த சத்தம் பெற்றுவிடலாமென்று முடிவு பண்ணி கல்லூரி வந்துவிட்டேன்!!! மாலையும் வந்தது ,வீட்டில் அவர் ,அவரின் பெற்றோர் எல்லாரும் இருக்க முத்தம் பெற முடியவில்லை!!! அலங்காரம் எல்லாம் பண்ணிவிட்டு பிறகு அவரையும் ,கூடவே துணைக்கு ஒருவரையும் அழைத்துக் கொண்டு பார்வையற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன்..பிறந்த நாள் அன்று கேட்பவர் கொடுப்பது தானே சரியென்று அந்த பெரியவரும் எனக்கு ஆதரவளித்து பேசிக்கொண்டு வந்தார் !! அதற்கு அவர் நீ சின்ன பையன் உனக்கு தெரியாது பேசாம வா என்று கூறிவிட்டார்...பிறகு வீட்டிற்கு வந்து பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து விட்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம்..அவர் தனியறையில் இருந்தார்,கடைசியாக முயற்சித்து பார்க்கலாமென்று முயன்று ஒரே ஒரு முத்தம் என்று கேட்க கார்மேகத்தில் வெட்டிய மின்னல் போல சடாரென்று கன்னத்தில் இச் கொடுத்துவிட்டார்..அந்த முத்தம் இப்போது வரை என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது....

சும்மாவே முத்தம் கொடுக்க மாட்டார்..இப்போது வேறு ஒற்றை இலக்க வயதிலிருந்து பத்து வயதை தொட்டுவிட்டார் என் மாப்பிள்ளை!!!!எனக்கு ஆதரவளித்த ஆறு வயது பெரியவர், என் அண்ணன் மகன்...
முத்தம் எப்போதுமே மகிழ்ச்சியின் சத்தம்

#இரகுநாத்பழனிச்சாமி

Friday, 4 January 2019

எனக்கு பெண்களை பிடிக்கும்

#எனக்கு பெண்களை பிடிக்கும்
  நான் ஆணாக பிறந்திருப்பதாலயே எனக்கு பெண்களையெல்லாம் பிடிக்கிறது... புள்ளிமான்கள் ,
வண்ணமயில்கள் ,கருங்குயில் ,
பட்டாம்பூச்சிகள் என இந்த வரிசையில் நான் முதலிடம் கொடுப்பது கன்னிகளுக்கு தான்!!! என்னை தமையனாக ஏற்காத அங்கையற்கன்னிகளை எல்லாம் மான்களை  தேடும் புலிகளாக , மங்கையர்களை எல்லாம் கண்களால் கடந்து தான் செல்கிறேன்....எனக்கு விஸ்வாமித்திரராக காட்டி கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை
விஸ்வாமித்திரரை மயக்க இந்திரன் மெனக்கெட்டு மேனகையை அனுப்பி நடனம் ஆடி அவர் விரதம் கலைத்தான், பெற்ற வரங்களை எல்லாம் இழந்து மறுபடி தன்னை வாட்டிக் கொள்ள சென்றார்..நான் விஸ்வாமித்திரனும் இல்லை பெரும் வரம் வாய்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதால் பெண்களை ரசிப்பதே எனக்கு பெரிய வரம்.....இங்கே நான் பல பெண்களிடம் பேசியிருக்கிறேன் பகடியாக பேசுவதிலயே பல சுவைகள்!!ஆனால் அந்த பெண்களிடம் நாம் பேச ஆரம்பித்துவிட்டாலே அவளை தழுவ ஆரம்பித்துவிட்டோம் என்று ஆரம்பிப்பது பெண்கள் கூட அல்ல ஆண்களே அதிகம் !!அதனால் நான் பலரிடம் பேசுவதையே தவிர்த்திருக்கிறேன்!!!!சில சமயம் நல்லதாகவும் ,சில சமயம் நல்ல பெண் நட்புகளையும் இழந்திருக்கிறேன்....தன்னை ஏற்காத பெண்ணோ ,
ஆணோ வேறொருவரை தேடிக்கொள்வதில் தவறில்லை ஆனால் அது உடலுறவோடு முற்று போட்டுக் கொள்ளும் புரிதல் அல்ல!!!!மகாத்மா காந்தி தன் இன்பமாய் இருக்கும் இளவயதில் எல்லாம் தன் மனைவியை இச்சைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு,அவரை  அடக்கியே வைத்து விட்டு முதுமையில் வாழ்வையும் ,இன்பம் யாது என்று அறிந்து உண்மையை அறிந்து தானே வெளியிட்டதால் மகாத்மா ஆகிவிட்டார்..எனக்கு மகாத்மா ஆக வேண்டிய தேவையில்லை அதனால் இப்பயே வாழ்வையும்,பெண்களையும் கொண்டாடிக் கொள்கிறேன்!!!ஆனால் யாரையும் வற்புறுத்தி ,துன்புறுத்தி  இச்சைகளை அடைவதென்பது சகதியில் முளைத்த தாமரை,தாமரையை பறிக்க சகதியை பூசிக் கொள்ளக் கூடாது!!!!காமம், எல்லாம் அடக்குமுறை அல்ல இருவரும்  இயைந்து இணைந்து எல்லைகளை கடப்பது!!!
இங்கே பெரும்பாலான இந்தியர்களுக்கு பிள்ளை பெரும் சம்பிராதாயமாகவும், இரண்டு நிமிட வேலையாகவும் ஆகிவிடுவது  கேளிக்குரியது!!!விவேகானந்தர் சமதன்மையை இழந்து ,ஒருசமயம் காமம் தலையெடுக்கும் பொழுது தன் உறுப்பை கொண்டே போய் தீயில் காட்டிக் கொண்டாராம் !!எனக்கு துறவு மனப்பான்மையும் இல்லை 39 வயதிலயே மரணம் வர வேண்டிய அவசியமும் இல்லை...ஆனால் அவரோடு துறவு தான் இந்த மண்ணில் இருந்த மகத்தான ஒன்று,இப்ப இருக்கும் சாமியார்கள் துறவை தினமும் துறந்து ஆசைகளை அடக்காமல் காணொளி காட்சிகளில் சிக்கி தன் மதிப்பையும் இழந்து ,துறவையும்
அய்யப்படுத்தி சல்லாபங்களில் சல்லடை ஆகி சிக்கி கொண்டிருக்கிறார்கள்.... காமத்தை பொறுத்த அளவில் சல்லடையில் சிக்காத தண்ணீராக இருக்கவே விரும்புகிறேன்.....காமசூத்ரா படித்து காமத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை...
மகிழ்ச்சியாக இருப்பதாற்காக இயற்கை கொடுத்த புலனின்பம் என்று மனதில் நிறுத்திகொண்டாலே போதும் திகட்டாத தேனாக இன்பம் பருகலாம்....ஹிட்லர் தான் விரும்பிய பெண்ணை வேறு யாருடனும் பேசவே விடாது கூண்டுகிளியாக வைத்துக் கொண்டு அவரும் மனமென்னும் சிறைபட்டுக் கொண்டார்!!!எனக்கு கிளிகளை கூண்டுக்குள் அடைக்கவும் விருப்பமில்லை ,சிறைபட்டுக் கொள்ளவும் விருப்பமில்லை!!!! கொங்கைகள் கொண்டாடபட வேண்டியவர்கள்!! கற்பழிக்கபடவேண்டியவர்கள் அல்ல...பாலியல் பாடங்கள் நடத்தி  பிள்ளைகளுக்கு புரிய வைப்பதை விடுத்து நீலப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதெல்லாம் வக்கிர புத்தியை வளர்க்குமே தவிர எதற்கும் பயன்படாது!!!ஓட்டை உள்ள பானையை உள்ளே அடைக்காமல் வெளியே பூசி ஒழுக விடுவது போல
பயன்படவே படாது!!
கலாச்சாரம் ,பண்பாடு இங்கே அர்த்தம் தப்பா புரிந்து கொள்வதில் தொடங்குகிறது..பண்படு தான் பண்பாடு !!!மனசை பகிர்வது,புரிந்து கொள்வது தான் பண்பாடு....

#ஒருவனுக்குஒருத்தி!!!!!!!!!!!!!!!!!  
ஒருவனுக்கு ஒருத்தி எதன் அடிப்படையில் இங்கே பார்க்கப்படுகிறது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது..ஒருவனுக்கு ஒருத்தி வெறும் பாலுறவை மட்டும் வைத்துப் பார்க்கபடுகிறது...
ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதையெல்லாம் தாண்டி நான் உன் அன்புக்குரியவன் ,
நம்பிக்கைக்குரியவன் என்பதே அது..நீங்கள் திருமணம்
என்ற சங்கிலி போட்டிருப்பதாலயே எல்லா இன்னல்களையும்,துன்பங்களையும் சகித்துக் கொண்டு அடிமையாய் வாழ வேண்டும் என்பதல்ல , இது ஆணுக்கும் பொருந்தும் ,பெண்ணிற்கும் பொருந்தும்!!!!இங்க கௌசல்யா திருமணம் சம்பந்தமாக பலர் பதிவிட்டிருப்பது அடிப்படை
காமமாக பார்க்கப்படுவதென்பது வேதனையளிப்பது.....
அது அவரின் தனிப்பட்ட ஏமாற்றம் ,வலி ...
ஒருவனுக்கு ஒருத்தி நம்பிக்கை சிதைபடும்பொழுது அன்பின் மூலம் சரி செய்ய முயற்சித்தும் தோற்றால் பிரிவதே நலம்...வாழ்வின் அடிப்படையான அன்பு தோற்கும் பொழுது இணைந்திருந்து எதை சாதிப்பது!!!எதைப் பெறுவது!!!!
அப்படி தோன்றவில்லை!!!நம்ப இந்திய ஆண்கள் பெண்கள் பொறுத்த அளவில் செக்ஸ் குடும்ப நிலையை பொறுத்து தான் கைகூடும்..தங்கைக்காக அண்ணன் காத்திருக்கனும், அண்ணனுக்காக தம்பி காத்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டமைப்பு இருக்கு!!!
ஒரு பெண் தானே விரும்பினாலும் தன் கணவனை படுக்கைக்கு அழைப்பது என்பது இன்னும் இல்லாத இந்த நாட்டில் , இளவயதில் கணவனை இழந்து இல்லற இன்பம் பெற பல ஏச்சு பேச்சுகளை பெரும் இந்த நாட்டில்,
உடல் ஆணின் அதிகாரமாக பார்க்கப்படும் இந்த நாட்டில் சபரிமலை செல்வதும் ,பெண்ணியம் பேசுவதுமே சாதனையாக பார்க்கப்படும் இந்த நாட்டில் வன்கலவிகளும் ,பாலியல் வன்முறைகளும் அரங்கேறிக் கொண்டுதானிருக்கும்!!!

   இருந்தாலும் ஆண் என்ற ஒரு காரணத்தினாலயே நான் பெண்களை எல்லாம் நேசிக்கிறேன்...தவறான கருத்தாகபட்டால் காரணம் என் சிந்தனை மட்டுமே...