தோனி என்றொரு சகாப்தம்..
கபில்தேவ் காலத்தில் கோப்பை தூக்கிய இந்திய அணியில் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்று கொண்டவர் அசாரூதின்...அந்த காலகட்டத்தில் தான் கிரிக்கெட் மீது தீரா காதல் வர வைத்தவர் சச்சின் டெண்டுல்கர்..அந்த வீரர்கள் எல்லாருமே எல்லா போட்டிகளிலுமே இடம் பெற்றிருப்பார்கள் ..
புதுமுகமெல்லாம் வாய்ப்பே இல்லை..தொடக்க ஆட்டக்காரர் சச்சின் முதல் மிடில் ஆர்டர் சடேஜா தொடங்கி டெயிலென்டர் ஸ்ரீநாத் வரை அந்த பதினொரு பேரு மட்டுமே என்றென்றைக்குமான இந்திய அணி..இவர்களுக்கு பிறகு லிட்டில் மாஸ்டர் சச்சின் அணி தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டவர்..தனித்திறன்களில் ஜொளித்தவர் குழுவாக ஒருங்கிணைக்க முடியவில்லை தலைவனாக தகுதியில்லை என்று தானே ஒதுங்கி கொண்டவர்..பிறகு தான் ஒருத்தர் தன்னுடைய கால் தடத்தை அழுத்தமாக பதிய வைத்தார் பெங்கால் புலி,கல்கத்தா இளவரசன் கங்குலி..கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் இந்தியா விளையாடும் பொழுதெல்லாம் ஒரு ஸ்பிரிட் உருவாக்கியவர் கங்குலி ..பதிலுக்கு பதில் என்று பேட்டிலும் தன் ஆக்ரோசத்திலும் பதிலடி கொடுத்தவர்..உண்மையை சொல்லப் போனால் இந்திய அணியில் தேவையில்லாத ஆணியை எல்லாம் புடுங்கி எறிந்தவர்..இந்திய அணியின் தேவையில்லாத பகுதியை எல்லாம் வெட்டி எறிந்து சிற்பமாக்கியவர் தான் கங்குலி..பல புதியவர்களின் வருகை அவர் தலைமையில் தான் நிகழ்ந்தது..2003 உலக கோப்பையில் இறுதி ஆட்டம் வரை நுழைந்து இந்திய அணியை உலகின் தலைசிறந்த அணியாக தலைநிமிரச் செய்தவர்..ஆனால் அந்த இறுதிப் போட்டி யை கண்ட பிறகு கிரிக்கெட் மீது வெறுப்பாகி சில காலம் தவிர்த்தவர்கள் என்னை போன்ற பலர்...சச்சின்,கங்குலி,டிராவிட் போயிட்டா தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு அடுத்த வேலையை பார்த்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகம்..

அந்த காலம் ,நாயகனுக்காக காத்திருந்த காலம் கனிந்தது..கங்குலி தான் களத்திற்கு கைபிடித்து அழைத்து வந்தவர்...ஆனால் முதல் ஆட்டமே முட்டை கணக்கோடு தான் தொடங்கியது..நீளமான முடி ,எப்பொழுதும் புன்சிரிப்பு ,பேட்டிங்கில் புது ஸ்டைல் என்று அடுத்த அவர் ஆடிய ஆட்டமெல்லாம் பூஜ்யத்திற்கு முன்னால் உருவாக்கிய ஒன்று என்ற மதிப்பு ..அதன்பிறகு இறக்கமே இல்லாமல் ஒன்றின் பின்னாக ஜீரோக்களாக அணிவகுத்து மதிப்பு எங்கேயோ சென்றுவிட்டது..கிரிக்கெட் வீரனைப் பார்த்து அதே மாதிரியான சிகையலங்காரம் எல்லாம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தோனிக்கு மட்டுமே உருவானது..குறுகிய காலத்திலயே இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்...தலைமை தகுதியான நபரை தேர்ந்தெடுத்து கொண்டது..புதிதாக தலைவன் உருவாகுவதில்லை ,சந்தர்பங்கள்உருவாக்குகின்றன...பெரிய இடைவெளிக்கு பிறகு திரும்பி சென்ற இந்தியர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் கொண்டு வந்தது 2007 டி20 இறுதிப் போட்டி தான்..கங்குலி இந்திய அணியை சிற்பம் செதுக்கிய சிற்பி என்றால் அந்த சிற்பத்தை வழிபாட்டுக்குரிய கடவுளாக மாற்றி கருவறைக்குள் வைத்தவர் தல தோணி...இந்தியாவிற்கு கோப்பை இல்லையென்ற பல நாள் கனவு தகர்ந்தது அந்த போட்டியில் தான்..வெற்றி பெற்ற உடனே கோப்பை யை கையில் வாங்கி அணி வீரர்கள்ட்ட தூக்கி கொடுத்துட்டு ஓரமாக நீன்றவர் தான் அடுத்து சேம்பியன்ஸ் ட்ராபி,உலக கோப்பை கடைசி வரை கோப்பை பெற்ற பொழுதெல்லாம் ஒதுங்கியே தான் நின்றார்..
யார் போனா என்ன தோனி இருக்கான்டா களத்தில் என்று கடைசி வரை ஆட்டம் பார்க்க வைத்தவர் என்றால் மிகையாது..இங்க பினிசர்னா முடிச்சு வைக்கிறவர்னு தான் நினைக்கிறார்கள் அதுவன்று முதலும் ,முடிவுமா கடைசி வரை உயிரோட்டமா நிற்கிற ஆள் தான்.. முதல் ஆளா ஸ்டம்புக்கு பின்னாடி நின்று கடைசியா ஸ்டம்புக்கு முன்னாடி பேட்டை சுழற்றி கொண்டிருக்கிறானே அவன் தான் பெஸ்ட் பினிசர்...தோனி தான் பெஷ்ட் பினிசர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றை எழுத வேண்டுமானால் தோனிக்கு முன் ,தோனிக்கு பின் என்று தான் இயற்ற வேண்டும்...தலைவனாக இருப்பது தங்க கீரிடம் அல்ல முள் கீரிடம்..அவர் எடுக்கும் துணிகர முடிவுகள் வெற்றியை பெற வைக்க வேண்டும்..யுக்திகளை வெற்றிக்கான வழிகளாக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்..!!!இக்கட்டான நிலைகளில் எல்லாம் நிதானம் இழக்காமல் அணியை இழுத்து செல்லும் வைராக்கியம் வேண்டும்..நாங்கள் இவரிடம் இந்த எல்லா சூழ்நிலைகளையும் எதிர் கொண்ட விதத்தை பார்த்து வியந்திருக்கிறோம்...வெற்றியின் போது பின்னால் வருவதும்,தோல்வியின் பொழுது முன்னால் அணிவகுப்பதும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே..வெற்றியை பகிர்ந்து,தோல்விக்கு தான் பொறுப்பென்றும் ஏற்றுக் கொள்ளும் அசாத்திய குணம் எல்லாம் எல்லா தலைவனுக்கும் வாய்ப்பதில்லை..
தோனி பல வீரர்களுக்கு ஏணி,
என்னை போன்றவர்களுக்கு உற்சாகப்படுத்தும் ஊக்கமருந்து!!!
ஆம் ,தோனி ஒரு சகாப்தம் தான்..
என்னை போன்றவர்களுக்கு உற்சாகப்படுத்தும் ஊக்கமருந்து!!!
ஆம் ,தோனி ஒரு சகாப்தம் தான்..
தோனி ,ரஜினி எல்லாம் பீஷ்மர் மாதிரி அவர்களாக விரும்பாமல் யாரும் வீழ்த்திவிட முடியாத சூப்பர் ஹீரோக்கள்
No comments:
Post a Comment