சுதந்திரமற்ற கட்டுப்பாடும்,கட்டுபாடற்ற சுதந்திரமும் இரண்டுமே நாட்டையும் ,வீட்டையும் வீண் செய்வதுதான்...உலகில் உள்ள எல்லா நாடுகளையும் ஒப்பிட குழந்தை செல்வங்கள்அதிக எண்ணிக்கையில் உள்ள நாடு இந்தியா..மக்கள் சக்தி தான் எல்லா ஆயுதங்களையும் விட ஆக்கப்பூர்வமானதும், அபாயகரமானதும், அந்த சக்தியை முறையாக பயன்படுத்துகிறமோ சரியாக வளர்த்தெடுக்கிறமோ என்றால் அது ஆயிரம் டாலர் கேள்வியே..பொதுப் புத்தியாக பல அம்சங்கள் திணிக்கப்படுகின்ற இந்த சமூகத்தில் குழந்தைகள் கட்டுப்பாடு என்பது துளி அளவுமில்லாமல் காட்டாற்று வெள்ளமாய் வளர்க்கப்படுகின்றனர்..
அணைக்கட்டு இல்லாமல் போகும் வெள்ளம் வீணாகும் ,வீண் சேதங்களை உருவாக்கிவிடும்..
பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை கண்டிப்போடு வளர்ப்பதற்கும்,
கண்காணிப்போடு வளர்ப்பதற்குமான வித்யாசம் விளங்குவதில்லை..
கால்நூற்றாண்டுக்கு முன்னால் குழந்தைகள் வளர்ப்பிற்கும் ,இந்த காலப் பிள்ளைகளின் பெற்றோர் வளர்ப்பிற்குமான இடைவெளி மிக அதிகம்...இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தபொழுது தங்கள் கனவுகளையோ,
தேவைகளையோ ஒருவர் மீது மட்டுமே திணிக்க வேண்டிய அவசியமோ ,ஒன்றின் மீது மட்டும் தீவிரமான அன்பு காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை..ஆனால் உருவாகிவரும் நகர்புறமயமாக்கல் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்களை உருவாக்குகின்றன..
கருவறையில் இருக்கின்ற வரை குழந்தைக்கான உணவை ,காற்றை இன்னொருவரின் மூலமாக பெற்றுக்கொள்கிறது..
கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தையின் அழுகை உணர்த்துவது இனி தனக்கு வேண்டியதை தன் பொருட்டே தேடி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு தான்.. தாங்கள் சாதிக்க முடியாத ஒன்றை தங்கள் பிள்ளைகளின் மீது திணிப்பதன் மூலம் தங்கள் ஆசைகளை உரமாக்கி உயிர் வளர்க்கின்றனர்..
தங்கள் பருவ வயதில் தங்களுக்கு கிடைக்காத எதுவொன்றும் தன் சந்ததிக்கு இல்லாமல் போய்விடக்கூடாதென்று எப்பாடுபட்டாவது அவர்களுக்கு எல்லாம் கிடைக்கச் செய்துவிடுகின்றனர்..எல்லாமும் ,எளிதாய் கிடைக்கும் இவர்கள் எந்தவொரு தோல்வியையும் ,
கட்டுபாடுகளையும் விரும்பவதில்லை..
மாணவர்களை மாண்புள்ளவர்களாக மாற்றும் ஆசிரியர்களை கேள்விக் குள்ளாக்கும் சட்டமும்,
கைகட்டி வேடிக்கை பார்க்க வைத்திருப்பது ஆகப் பெரிய குற்றம்..
வகுப்பறையிலயே ஆசிரியரை பகடி செய்வது,
எதற்கெடுத்தாலும் எதிர் பேச்சு பேசுவது என இக்கால குழந்தைகள் கடிவாளம் ஏதுமின்றி வளர்கின்றனர்..
கண்டித்தலும் , தண்டிப்பதற்கும் வித்யாசம் தெரியாதவர்களால் வந்த பிரச்சனை வந்திருப்பது ..சின்னதொரு சுடுசொல் கூட ஏற்றுக் கொள்ளாத குழந்தைகள், அடுத்த நாளே பெற்றோரை அழைத்து வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வுகள் ஏராளம்..அத்தனையும் வேதனை!! உடலளவில் தண்டனை தரும் பொருட்டு அது ஒரு உள்ளச் சிதைவே அதை தவிர்த்து தானாக வேண்டும்..கண்டிப்பும் ,
கட்டுபாடுமற்ற அளவில் வளரும் குழந்தைகளை வகுப்பறை திருத்தாவிடில் வீதிகள் திருத்திவிடும்..
பெற்றோர்களுக்கும் கண்டிப்பிற்கும் ,
கண்காணிப்பிற்கும் வித்யாசம் தெரிவதில்லை..குழந்தைகள் பெரும்பாலும் நம் சொற்களை விட செயல்களையே அதிகம் பார்க்கின்றனர் ,அதையே பின்பற்றுகின்றனர்..
உதாரணமாக எளிமையான மனோதத்துவ முறை செய்து பாருங்கள் ஒன்றிலிருந்து ஏழு வரை சொல்லி ஏழு சொல்லும் பொழுது கைதட்ட வேண்டுமாய் அழுத்தி மூன்று முறை கூட கூறுங்கள் ..ஆனால் நீங்கள் ஆறோ ,ஐந்தோ சொல்லும்பொழுது கைகளை குவித்தாலே போதும் கைதட்டி விடுவார்கள்.அவர்கள் நம்மை உன்னிப்பாய் கவனிப்பதில் தான் ஆர்வம் கொள்கிறார்களே தவிர நம் சொற்களின் மீதல்ல!!! குழந்தைகள் மீதான தேவை கண்காணிப்பு மட்டுமே..எங்கு செல்கிறார்கள் , யாரோடு பழகுகிறார்கள் ,
கைபேசியை எவ்வாறு உபயோகபடுத்துகிறார்கள் என்பதை கட்டுபாடுகளின்றி கண்காணிக்க வேண்டும்..
பதின்ம வயதிலயே அனைத்தும் தெரிந்து கொள்ளும் அவர்கள் செல்லும் பாதை சிக்கலானதா ,
சீர்மிகுந்ததா என்பதை பெற்றோராக இருப்பவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்...குழந்தைகள் கேட்ட உடனே எளிதில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை பழக்கிவிடாதீர்கள்..
பெற்றோர்களாகிய உங்கள் பணியும் ,பணியின் சூழ்நிலையையும் அதன் பொருட்டு உங்கள் உழைப்பையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்..
உழைப்பில்லாமல் ஊதியமில்லை,உழைப்பில்லாமல் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்திவிடுங்கள்..
கடினப்படாமல் , முயற்சிக்காமல் எதுவும் கிடைக்காது என்பதை புரியவையுங்கள்....
பெற்றோர்களாக குழந்தைகளுக்கு நீங்கள் கற்று தர வேண்டியது அறம் புரிதல் ,விட்டு கொடுத்தல் அதையும் உங்களிருந்தே தொடங்குங்கள் ..ஆசிரியர்களின் கண்டிப்பும் ,அதிகாரமும் ஆக்குவதற்கே அன்று அழிப்பதற்கு இல்லை என்ற உண்மையை சொல்லிக் கொடுங்கள்..ஒட்டக சிவிங்கி உயரமான விலங்கு அது குட்டி ஈனும் பொழுது நின்று கொண்டே தான் இருக்கும்..உயரத்தில் இருந்து விழும் குட்டி ஒட்டக சிவிங்கி உடம்பு முழுக்க நிணமும் ,சதையும் ஒட்டி இருக்கும்..அந்த நொடியிலயே தாய் ஒட்டக சிவிங்கியானது குட்டியை எட்டி உதைக்க ஆரம்பிக்கும்..அந்த குட்டியானது எழுந்து நிற்கும் வரை உதைத்துக் கொண்டே இருக்கும்..தான் ஈன்ற குட்டி என்று உதைக்காமல் விட்டால் அந்த குட்டியானது நரிகளுக்கு இரையாகி விடும்..ஒட்டக சிவிங்கி உதைப்பது நடப்பதற்கே!!உயிர் பிழைப்பதற்கே!!!
பெற்றோர்கள் கண்பாணிப்பதும்,
ஆசிரியர்களின் கண்டிப்பும் குழந்தைகளை வளரச் செய்வதற்கும் ,வளம் பெறுவதற்கும் தான்..

#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment