#குற்றமும் #தண்டனையும் #என்கௌன்டரும்
தெலுங்கானாவில் நடந்த என்கௌன்டரை ஒட்டி போலீசாரை பாராட்டியும்,சரியான தண்டனை எனவும் பரவலாக விமர்சனம் எழுந்துவருகிறது....
தண்டனையை கொண்டாடுபவர்கள் எல்லாம் ஒருவிதமான உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டவர்களாகவே தெரிகின்றார்கள்!!! கடுமையான தண்டனை என இவர்கள் நினைக்கும் அல்லது
ஏற்றுக் கொள்ளும் மரண தண்டனை எந்தவிதமான மனித முன்னேற்றத்திற்கும் ,பரந்த சிந்தனைக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்காது..கற்பிக்கப்படும் பயத்தை நீங்கள் எந்த வழியில் நியாயமான ,அநியாயமான என்று பொருத்திப் பார்ப்பீர்கள்....தாங்கள் மாட்டிக் கொள்வோமே என்ற பயம்தான் அவர்களை இந்த குரூரத்திற்கு நகர்த்தியிருக்கிறது...கடுமை என்று நாம் நினைப்பது இன்னும் மாட்டிக் கொள்ளாமல் வன்மங்களை நிறைவேற்றத் துடிக்கும் குயுக்தீகளையே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது..போதாதற்கு மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வதற்கு என்று பார்த்தால் ஆயிரம்ஆயிரம் படக் காட்சிகள் திரையில் கொட்டிக் கிடக்கின்றன...

மும்பை தாக்குதலை நீங்கள் அறிவீர்கள் அஜ்மல் என்று ஒற்றை ஆள் துப்பாக்கியோடு கண் முன் படும் குழந்தை முதல் பெரியவர் வரை சுட்டுக் கொன்றான்.. தனக்கு உண்டாகும் இழப்பை முன்னமே அறிந்து தான் இந்த காரியத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டான்..இறக்கும் தருவாய் வரை தான் குற்றம் இழைத்ததாய் அவன் உணரவேயில்லை...
சாதிமறுப்பு திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக பிள்ளைகளை வெட்டிக் கொன்ற பெற்றோர்களுக்கு எதிராக சமூகம் இவ்வளவு கொந்தளிப்புகளையும் ,
அவர்களுக்கு அளித்த தண்டனைகளையும் பற்றி விவாதிக்கவோ அடுத்து நிகழாமல் இருப்பதற்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யவில்லை..இந்த பாலியல் சார்ந்த காரணங்களுக்கெல்லாம் அடிப்படை அங்கமாக இருப்பது அமைப்பாகிய குடும்பங்களும் தான்...இந்த புள்ளியிலிருந்தே அதிகாரம் செலுத்துதல் என்ற மையவாதம் ஆண்களிடமிருந்து அதாவது அப்பாக்களிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தபடுகின்றது..
முடிவெடுக்கும் அதிகாரம் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நூதனம் எல்லாம் ஆண்களாக காட்டப்படுவதால் அதை பார்த்தே குழந்தைகள் வளர்கிறார்கள்..பெண்கள் கொஞ்சம் துடிப்பாக செயல்பட கூடியவர்களாக இருந்தால் ஆதிக்க சமூகம் அடங்காபிடாரி என்ற அடையாளம் கொடுத்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள்..இந்த நுனியிலிருந்தே பெண் என்பவள் ஆணுக்கு உடைமையாக உருவகப்படுத்தபடுகிறார்கள்....
அப்போது கற்றுத் தரபடவேண்டிய
கருப் பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிவீர்கள்...
அதிகாரம் என்பது எப்போதுமே மண்டியிடச் செய்யுமே தவிர மனிதத்தை கற்றுதந்துவிடாது..இன்னொரு நுட்பமான விசயத்தையும் நாம் உற்று நோக்க வேண்டும்..டெல்லி நிர்பயா வழக்கில் நடந்த நீதி விசாரணையும் 17 வயதிற்குட்பட்டவனை சிறுவனாக கருதி சட்டத்துறை அளித்த நீதியையும் அறிவோம்..தற்போது கடந்த பொள்ளாச்சி குற்ற பிண்ணனியையும் நாம் அறிவோம்..எண்ணிக்கையிலடங்காத பெண்கள் பாதிக்கப்பட்டதாக சொன்னார்கள் அதைப்பற்றி அதிகாரமிக்க சட்டத்துறையும் ,
செயல்படுத்தும் காவல் துறையும் என்ன விதமான நடவடிக்கைகளை கையாண்டார்கள்..
குறைந்தபட்சம் குற்றங்கள் உண்மையா ,பிழையா என்பதை கூட சமூகத்திடம் விளக்கிவிடவில்லை..இத்தகைய பின்னல்களுடன் தற்பொழுது கொல்லப்பட்ட நால்வரின் குடும்ப பிண்ணனியையும் உற்று நோக்க வேண்டும்...அவர்கள் இதற்கு முன்னதாக நடந்து கொண்ட விதம் ,படித்த பள்ளி ,நண்பர்கள் ,பெற்றோர் என ஒவ்வொருவரிடமும் விவாதிக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன...

குற்றமாக அவர்கள் செய்த செயலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை...ஆனால்
அவர்களுக்கு கொடுத்த தண்டனை சரியென்று சொல்லி விலகி கைகட்டி நிற்கும் சமூகமாகிய நமக்கும் தார்மீக பங்கிருக்கிறது என்பது தான் எண்ணம்..துப்பாக்கிகளின் அதிகாரத்திற்கு பலியாவது கோழிக் குஞ்சுகள் தானே தவிர வல்லூறுகள் அல்ல..

தனிமனித சுதந்திரம் என்பது என்ன என்பதை கற்று தராமல்
அவரவர்களின் உரிமைகள் என்னவென்று உணராமல் எந்த ஒரு சமூக சீர்திருத்தங்களும் சாத்தியப்படாது...
பயத்தை ஏற்படுத்தி விட்டால் தவறுகள் நடக்காது என்ற சித்தாந்தமே தவறுதான்.....தனிமனித சுதந்திரம் ,மகிழ்ச்சி ,உண்மையான கொண்டாட்டம் எது என்று கற்று தராதவரை , அடிப்படை உணர்வுகள் ,வலிகள் அறியாதவரை எல்லாம் தற்காலிக தீர்வுகள் தான்....

#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment