#சாதி #ஜாதி
சாதி என்னும் வேர்ச்சொல் அர்த்தம் ஆராய்ந்தோமேனால் நாம் சிறிது தெளிவு பெறலாம்!!!!ஓரளவு படித்த என் போன்றவர்களும் என்னதான் ஜாதி தீண்டாமை என்று பிரகடனப்படுத்திக் கொண்டாலும்,திருமணம் என்று வருகிற பொழுது நம்மையும் மீறி அந்த அரக்கன் எட்டிப் பார்க்க வேண்டிய காரணம்
யாதெனின் இவை
குழு மனப்பான்மை
( mass thought) பெரும்பான்மையோரின் எண்ணம் வெளிப்பட்டு வென்றெடுக்கிறது!!!
சாதி எவ்வாறு ஆரம்பகாலத்தில் இங்கு பொதுஜனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்று எண்ணும் பொழுது சில செய்திகள் புலப்படுகின்றன....
நான்கு வர்ணங்களில் பிராமணர்கள் கற்றறிந்தவர்களாகவும் ,
சத்ரியர்கள் ஆயுதம் தரிப்பவர்களாகவும்,வைசியர்கள் பொருள் ஈட்டுபவர்களாகவும் இருக்கும் பொழுது சூத்திரர்கள் இதை எதையும் செய்ய தேவையில்லை ...உங்களுக்காக மற்றவர்கள் கல்வி கற்கும் பொழுது கேட்டறிந்து கொள்ளவும்,உங்களை காப்பதற்கு ஆயுதம் ஏந்துபவர்களாக அவர்கள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதம் ஏந்த அவசியமில்லை என்றும்,பொருள் ஈட்டுவதற்கு அவர்கள் வணிகம் செய்யும் பொழுது நீங்கள் அவர்களிடம் பெறுபவர்களாக இருக்கலாம்...இதில் மேம்போக்காக பார்ப்பதற்கு ஒருவித சவுகர்யம் இருப்பதாக தோன்றியிருக்க வேண்டும்..அதன் பொருட்டே பெரும் சமூகத்தையே தீண்டதாகாதவர்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்...பெரும் சூட்சமத்துடன் பிரிவினை அரங்கேற்றப்பட்டிருக்கின்றது....
இந்தியாவில் மத ஒருங்கிணைப்பின் மூலம்
மக்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியுமாக சிலர் நம்புகிறார்கள்...
இது சாத்தியமில்லாதது
என்றே நம்பிகிறேன்..ஒரு இஸ்லாமியர் இன்னொருவரிடம் யார் என்ற கேள்வி கேட்டு அவருடைய முகமதியர் என்ற பதிலிலயே திருப்தி பட்டு கொள்கிறார்...அடுத்ததாக சன்னியா ,ஷியாவா என்றெல்லாம் கேட்பதில்லை...கிறித்துவர்களும் தாங்கள் கிறிஸ்டின் என்பதாலயே ஒன்றிக் கொள்கிறார்கள்...ஆனால் இங்கே இருக்கும் பெரும்பான்மையான சமூகத்திற்கு இந்து என்ற பதில் திருப்தி தருவதில்லை..சாதி உட்பிரிவுகளை நோக்கியே அடுத்த கேள்விகள் தொடர்கின்றன..ஆக இங்கு வேரே பிரச்சனையாக இருக்கின்றது...
ஜனனம்(பிறப்பு) என்ற சொல் வடமொழிச் சொல்..(ஜா)..பிற்காலத்தில் இந்த கிரகந்த எழுத்துக்களை நீக்கி எழுதப் போகி தான் சாதி என்று அதன் பொருள் பெயர் மாற்றப்பட்டுவிட்டது..சாதி தொன்று தொட்டே இருக்கிறது!!!சாதி என்றால் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஒன்றே என்று இடைக்காலத்தில் அதாவது பிறமொழிக் கலப்பினால், மொழி சிதைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது!!! உண்மையில் நம் வேர்சொல்லான சாதியின் பொருள் சிறப்பு ..அதாவது சிறப்பாக செய் என்று பொருள்..சாதி மல்லி, சாதி காய்,
சாதி மரம்(தேக்கு) அதாவது இருப்பதிலே சிறப்பான ஒன்று என்பதற்காக வந்த காரணபெயர்கள்..இது தான் சாதி என்ற பெயருக்கான பொருள்..நமது மொழியை ஆராய்ந்தால் புரிகிறது சாதி ஆதியில் இருந்தது!!ஜாதி இடையில் வந்தது...
சேரியையும் அதன் பொருள் மாற்றி பிரிவினை வார்த்தையாக ஆகிவிட்டோம்...
பல குடிகள் வந்து சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி (சேர்+இ) ஆனது!!!
இங்கே குடிகள் என்பதும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்று நிலத்தில் வாழ்ந்தவர்களை வைத்து தான் குறிப்பிடப்பட்டது...
சாதி என்பதற்கான அடையாளங்கள் ஆதி தமிழ்குடியில் இருந்ததற்கான அடையாளங்கள் துளி அளவும் இல்லை!!சாதி எப்படி எண்ணிக்கை குறைவான நபர்களால் திணிக்கப்பட்டு வேரூன்றியதற்கான காரணமாக சொல்கிற செய்தி உனக்கும் கீழே தாழ்ந்த ஒருவன் இருக்கிறான் என்று கட்டமைக்கப்பட்டதே!!!
மதம் மாறி கலப்பு திருமணம் புரிந்தாலும் அவருடைய சாதியை பிரித்தெடுக்க முடிகிறதா????ஒட்டிக் கொண்டே அல்லவா வருகின்றது!!!முந்திய காலங்களில் சீர்திருத்தவாதிகள்
சம்பந்தி போஜனம் என்பதாக எல்லாம் நடத்தி வருணாசிர கொள்கையை தகர்த்தாமல் நாம் இந்துக்கள் என்று நிறுவ முயற்சித்தார்கள்....ஆனால் சாதியை காபந்து செய்து போற்றும் மதத்தை பிடித்துக் கொண்டு எந்த ஒரு ஒற்றுமையையும் நிலைநிறுத்திட முடியாது....
சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலின் படி மனிதனாகபட்டவன் பல இனங்களின் கலப்பால் பிறந்தவன்...மூக்கு வேறொருவருடைய இனத்துடையது ,கால்,காது இன்னொருவருடைய இனத்துடையது!! இப்படி கலந்து உருவானது தான் மனித இனம் என்று செய்திகளில் அறிந்தேன்..
சாதியை மழுங்கடிக்க தெரிந்த ஒரே வழி இட ஒதுக்கீடு மட்டுமல்ல!!கல்வியை மட்டுமாவது பொது உடைமை ஆக்க வேண்டும்..எல்லாருக்குமான இலவசக்கல்வி,அந்தந்த மொழி இன மக்களுக்கான
ஒரே கல்வி திட்டம் இதில் ஆரம்பித்தோமானால் இனிவரும் சமுதாயம் சமூகநீதியை உரக்கப் பேசும் ஒன்றாக மாறும்!!!இத்தோடு வகுப்பறைகள் சமுதயாத்தை விட்டு விலகியிருக்கும் சூழ்நிலையையும் விரட்டிவிட வேண்டும்..
சகோதரத்துவம் சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும்!!
#இரகுநாத்பழனிச்சாமி