எப்பயுமே காமத்திற்கு எனக்கும் அதீத நெருக்கமுண்டு, வயது வந்த முதல் காமம் எனக்குள் தறிகெட்டு ஓடிக் கொண்டு தானிருக்கிறது.. ஆனால் பெண்களை இம்சை படுத்தி எதையும் பார்த்ததில்லை..அப்படியே ஆசை அளவு கோலை தூக்கி விட்டாலும் பயம் படுக்க வைத்துவிடும்..பக்கத்து வீட்டில் குடியிருந்த துணி துவைக்கும் பெண்ணொருத்தியிடம் நெருங்கினேன்..அவளோட நடவடிக்கையும் என்னை அழைப்பதாகவே இருந்தது.. ஒருநாள் நகவெட்டியை கொடுப்பதாக அவள் உள்ளங்கையை தொட்டது தான் நான் எய்திய முதல் மற்றும் கடைசி ஏவுகணை ..பிறகு பயம் தொற்றிக் கொள்ள அவளை அக்கா என்று அழைத்துவிட்டு ஆட்டையை முடித்துக்கொண்டேன்....
நீலப்படங்கள் தான் என்னை எதிலும் மூழ்கடிக்காமல் நீந்த வைத்தது!!! நீலப்படம் தான் நீட்டியும்,சிந்தியும்
வைத்துக் கொண்டிருந்தது ,அதுவும் நான்குக்கு நான்கு அறையில் அம்மா ,அப்பா ,பாப்பாவோடு அவர்களுக்கு தெரியாமல் போர்வைக்குள் மூடி ஒரு கண் படத்திலும் மறுகண் அவர்களிடமும் இருக்க அந்த படங்களை நான் பார்க்க பட்ட பாடு பல மலைகளை ஒரு எட்டில் தாண்டிய முயற்சி ஈடாகும்!!!
நான் மய்யம் கொண்ட பெண்ணொருத்தி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள நீலப்படம் தவிர்த்து வேறொருத்தியை விரட்டி பிறகு தோல்வி பரிசளிக்க காம நீர் கரையை கடக்க வழி தேடிக் கொண்டிருந்தது... அழகான பெண்கள் கண்ணிலிருந்து கால்வரை மானை விரட்டிய புலியாக மேய ஆரம்பித்தது..அக்கா, தங்கை என்று அழைத்தவர்களை தவிர ஆசையை அலைபாயவிட்டேன்..
தூண்டில்களில் சில மீன்கள் மாட்டின,ஆனால் புழுவை நழுவ விட்டு தூண்டிலை மட்டும் மாட்டாமல் தண்ணீருக்காக தவிக்கவிட்டுக் கொண்டிருந்தேன்...இடையில் ஒரே ஒரு பெண் வந்தாள் தாகம் தணிக்க நேரில் வாய்க்கவில்லை என் தயக்கமும் தடுத்துக் கொண்டிருந்தது.. கட்செவி அஞ்சலில் காமத்தை கனிய வைத்து சிற்றின்பம் அடைந்து கொண்டேன்..நான் முதன் முதலாக பார்த்த தாமரை குமிந்திருந்த மாதிரியான மார் பளிங்கு குமிழ் கருப்பு திராட்சை காம்பு இன்னும் கருவிழியாக தங்கிவிட்டது அந்த புகைப்படம்..!!!கால் கட்லா மீனாக வளவளவென்று வனப்புடன் இன்னும் உதைத்துக் கொண்டே இருக்கிறது கனவாக!!!!அன்று அந்த புகைப்படங்களிலயே உச்சம் தொட்டிருக்கிறேன்.. மறுபடியும் நல்லவன் நடிகன் தலைதூக்கவே அவளிடம் பேசவில்லை...காமம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அவளின் கட்செவிஅஞ்சலை நோக்கி கைகள் தட்டச்சு செய்ய ஆரம்பித்துவிடும்....!!!!அவளுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது விலகி கொண்டேன் இப்போது..அவளிடம் நன்றியும்,மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்!!!!இடையில் வத்தலக்குண்டு வந்தது,ஆனால் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை...எத்தனையோ பந்துகளை தூக்கிப்போட்டேன் ,உதிரிப் பந்தாக என்னிடமே வந்து விழுந்துவிட்டது..!!!!அந்நிக்கி எல்லாம் கோவிலுக்குள் இருக்கேன் ..மனமுருகி வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க கைக்குழந்தை முகம் புன்னகைத்தது நானும் சிரிக்க விடுதலை வேண்டிய நான் சிறையில் விழுந்துவிட்டேன்..ஆம் பிறகு என்னால் கடவுளையும் எண்ண முடியவில்லை,கைக்குழந்தையும் காண முடியவில்லை என் முகம் தெரிந்தது அந்த பளிங்கு முதுகில் ..வெள்ளை முதுகில் ஒரு ஓரம் கருப்பு நாடா தெரிய அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்து சென்றேன் அந்த எண்ணமே காமக் கோலாய் பதிவிட செய்துவிட்டது..இன்னும் தண்ணீர் தாகம் தணியவில்லை ,ஆனால் அதைவிட பயம் தகித்துக்கொண்டிருப்பதால் ஆசையை அடக்கிக் கொண்டிருக்கிறது..
Wednesday, 26 December 2018
காமக் கோல்
Wednesday, 19 December 2018
திராவிட கட்சிகளின் திருவிளையாடல்கள்
திராவிட கட்சிகளின் திருவிளையாடல்கள்!!!!!மூன்று பகுதிகளாக வெளியிடுகின்றேன்
#என்னுரை
கடந்த கால வரலாறு தெரியாதவன் நிகழ்காலத்திலும் அதே தவறை தான் செய்வானென்று வின்சென்ட் சர்ச்சில் கூறுகிறார்!!கடந்த காலத்தை கற்றரியாதவன் நிகழ்காலத்தை பேச தகுதியில்லை என்கிறார்கள் பெரியோர்கள்!!அரசியல் புரட்சி இப்போது நடந்து கொண்டு தானிருக்கிறது!!எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..
மெரீனா புரட்சியாகட்டும்,கதிரமங்கலம் ஆகட்டும்,தூத்துகுடி ஆகட்டும் சரியோ ,தவறோ மக்கள் கூட ஆரம்பித்துவிட்டார்கள்..
அதிகாரத்தை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்!!ஆனால் அரை நூற்றாண்டாய் ஆட்சி செய்த திராவிடகட்சிகளில் பெற்றவை என்பது மரத்தில் சுமை தாங்கமல் விழுந்த பழம் போல காக்கை கொத்தி தவறவிட்ட பழம் போல மட்டுமே!!இழந்தவை ஏராளமாய் இருக்கின்றன!! மரத்தில் மட்டுமே இருக்கின்ற கனிகளை துரட்டி என்னும் அதிகாரத்தால் தட்டி பறித்த அரசியல்வியாதிகள் அதிகம்!!கற்றுகொடுத்த அரசியல் அபயம்!!!
#பகுதி1
காமராசர்,பகவத்சலம்,அண்ணா இவர்கள் நடத்திய அரசியலுக்கு பிறகு அரியணை ஏறிய கருணாநிதி ஆகட்டும்,எம்ஜிராமச்சந்திரன் ஆகட்டும்,அம்மையார் ஜெயலலிதா ஆகட்டும்,இடைடையே பதவி ஏற்று கொண்ட
ஓ பன்னீர் செல்வம் ஆகட்டும் தன்னலம் பேணும் சுய புராணம் பேசும் லாபம் ஈட்டிக் கொள்ளும் ஈன அரசியலே!!!காமராசர்,அண்ணா,பகவத்சலம் இவர்கள் மக்களுக்கு எது நல்லதென்று அவர்கள் எதை நம்பினார்களோ அதை செய்தார்கள்,அதில் தவறுகள் இருந்திருக்கலாம்!!ஆனால் அவர்கள் நோக்கமாக மக்கள் நலன் இருந்தது!! ஆனால் கலைஞர்கள் பண்ணிய அரசியலில் தங்களுக்கு எது நலனோ ,லாபம் தரக் கூடியது எதுவோ அதுவே பிரதானமா இருந்தது.... இந்த பதிவு அவர்களிடம் ,அவர்களை ஆதரிப்பவர்களிடம் சில கேள்விகளை முன் வைக்கவே !!!அது மட்டுமின்றி இப்போ புதிய பார்வையோடு அரசியல் களம் கண்டிருக்கும் ரஜினி,கமல்,சீமான் இவர்கள் ஏன் மாற்றாக இருக்க கூடாது என்ற சிந்தனையையும் ஏற்படுத்த தான்...
எம்ஜிஆர் -கலைஞர்
பெரியாரால் கண்ணீர் துளிக் கட்சி என்று வர்ணிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் வறட்சி,இந்தி திணிப்பு முயற்சி,காங்கிரஸ் உட்கட்சி பூசல் ,அரிசி பஞ்சம் இந்த காரணங்களால் அண்ணா அரியணை ஏறினார்!!!!அவருடைய ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் முக்கிய முழக்கமாக இருந்தது!!பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரியும் பொழுது எல்லா வகையிலும் துணையாய் நின்று கட்சி ஆரம்பிப்பதற்கு காரணமாய் இருந்த ஈ வி கே சம்பத், அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருக்க வேண்டிய சம்பத் எம்ஜிஆர் என்ற திரையுலக பிம்ப வெளிச்சத்திலும் ,
நெடுஞ்செழியனின்
சொல்வன்மையும், கருணாநிதியை தலைவராக்கியது!!!கருணாநிதிய எதிர்க்க ஆரம்பித்து, அறிவற்றவர்கள் எல்லாம் தங்கள் பெயருக்கு முன்னாடி அறிஞர்,கலைஞர் னு போட்டுக் கொள்கிறார்கள் என்று சம்பத்திற்கு அண்ணாவை எதிரியாளிக்கியது தான் கருணாநிதியோட சாமர்த்தியம்..
கட்சி பதவியும்,
அதிகார பதவியும் ஒருத்தரிடமே
இருந்தால் தான் கட்சியும்,ஆட்சியும் கட்டுபாடோடு இருக்கும் என்று காங்கிரஷ் தோல்விக்கு அதுதான் காரணமென்று இரண்டு பொறுப்புகளையும் கருணாநிதியே ஆக்கிரமித்ததற்கு எம்ஜிஆரும் காரணம்!! அரியணை ஏற்ற கருணாநிதியிடம் ,
உதவிக்கு பரிகாரமா எம்ஜிஆர் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கேட்டார்!!!திரைப்படத்திலே நடித்துக் கொண்டே அமைச்சர் பதவி வகிப்பது கடினம் என்று கலைஞர் சமாதானப்படுத்தி விட்டார்!!!கருணாநிதிக்கா கடிவாளம் போடத் தெரியாது...இது முதல் உரசல்!!! அடுத்து தந்தி சிபா ஆதித்தனார்க்கு அமைச்சர் பதவி கொடுக்க கூடாதென்று நினைத்தவர் எம்ஜிஆர் அவர் விருப்பத்துக்கு மாறா அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது!!!இது இரண்டாவது உரசல்...இதெல்லாம் தான் எம்ஜிஆர் அவர்களை சொத்து கணக்கை கேட்க வைத்தது!!! கருணாநிதிக்கு அருகில் இருப்பவர்கள் ஒன்று துதிபாடவேண்டும் இல்லையேல் துயிலிலேயே இருக்க வேண்டும்!!மாறா கேள்வி கேட்பவர்கள் ஓரங்கட்டபடுவார்கள்..அதுதான் எம்ஜிஆர் விசயத்திலும் நடந்தது!!
வார்த்தை போராக மாறியது !!எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தாக்கப்பட்டன!! முக முத்துக்கு ரசிகர் மன்றங்கள் முளைக்க ஆரம்பித்தன!! இதுதான் எம்ஜிராமச்சந்திரன் அவர்களை கருணாநிதி குடும்ப சொத்து விவரங்களை கேட்க வைத்தது.. திரைப்படங்களில் பெரும் சம்பளம் எல்லாம் வரி கட்டி விடுகிறாரா???வரி ஏய்ப்பு செய்யவில்லை யென்று நிருபிக்க முடியுமா என்று கலைஞரை கேட்க வைத்தது... திமுக ஏன் கட்சி பிரச்சனைகளை பொதுவெளிகளில் வெளியிடுகிறீர்கள் என்று எம்ஜிஆரிடம் விளக்கம் கேட்டு அனுப்பபட்ட வினாவுக்கு பதில் இல்லாததால் கட்சியின்
பொறுப்புகளில் இருந்து நீக்கம் என்ற முடிவு எடுத்தது... அண்ணாவிடம் இருந்து பெற்ற இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டது அதனால் இனி தேவையில்லை என்றெண்ணி விட்டோம் என கலைஞர் கூற குண்டே துளைக்க முடியாத இதயத்தை வண்டா துளைத்து விடும் என்று எம்ஜிஆர் கேட்க பிரிவு படலம் உறுதியானது!!!இடையில் மாறன் எவ்வளவோ முயன்றும் எம்ஜிஆர்-கலைஞர் இணைப்பு சாத்தியமில்லாமல் போனது !!!!
கேள்விகள்
#ஈவிகேசம்பத் செய்த தவறென்ன??
#எம்ஜிஆர் செய்த குற்றம் என்ன???
#முக முத்துவிற்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டிய அவசியமென்ன???
#அடுத்தபகுதி
#கச்சதீவு
#காவிரி
#அதிமுக உபயம்
#சர்க்காரியா கமிசன்
#எமர்ஜென்சி
#எம்ஜிஆரின் ஊழல்
#திராவிடம்
#பகுதி2
தனிநபர் வெறுப்பு அரசியலை வார்த்தெடுத்ததில் எம்ஜிஆர் -கலைஞர் பங்கு அதிமுக்கியமானது!!
மக்கள் நலன் அல்லாமல் தங்களுக்குள் போட்டிகளை உருவாக்கி கொண்டு ஆளும் தரப்பு எந்த திட்டம்
கொண்டு வந்தாலும் எதிர்ப்பது,எதிர்கட்சியாக இருப்பவர்களை எதிரி கட்சியாக நடத்துவது இது தான் அவர்கள் ஆரம்பித்து வைத்தது!!!
எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!எம்ஜிஆருக்கு ஆதரவாக நாஞ்சில்,எஸ்டிஎஸ்,
ஆர் எம் அவர்களும் திமுகவிலிருந்து வெளியேறினர்...அதிமுக உபயமானது!!!கட்சி யென்று ஆரம்பித்து விட்டால் ஆட்சியை பிடிப்பது தானே நோக்கமாக இருக்கும் !!!அதே தான் எம்ஜிஆருக்கும்...
அடுக்கடுக்காக திமுக அரசின் மீதும்,அமைச்சர்களின் மீதும் குற்றங்களை வீசலானார்..வேறு கட்சியாக இருந்தாலும் காமராசரை தான் தலைவர் என்று சொன்ன எம்ஜிஆரையும் விமர்சிக்க ஆரம்பித்தார்...காமராசரும்,
பெரியாரும் திமுக,அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று விமர்சித்த காரணத்தால்!!!!!
எம்ஜிஆர் அடுக்கடுக்காக பதினான்கு குற்றங்களை சாட்டி ஆளுநரிடம் முறையிட்டார்!!கம்யூனிஸ்ட் கட்சியினரும் பதினேழு குற்றங்களை சுமத்தினர்!!!வீராணம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஊழல்,மத்திய அரசு வறட்சி நிதிக்காக கொடுத்த நிதியில் கையாடல்,உரம் விமானம் மூலம் தெளிப்பதாக ஊழல் என குற்றச்சாட்டுகள்!!! அடுத்ததாக குடியரசு தலைவரிடமே நேரிடையாக முறையிட்டனர்!!பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி தகுந்த நேரம் வருவதற்காக காத்திருந்தார்... இந்த சூழ்நிலையில் தான் இந்திரா காந்தி தேர்தலில் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு உண்டாகி அது நிருபணமும் ஆக்கப்பட்டு பதவி பறிபோகும் சூழ்நிலை வந்தது!! பதவியை இழக்க தயாராக இல்லாத இந்திரா காந்தி நாடு முழுவதும் எமர்ஜென்சி நிலையை கொண்டு வந்தார்...இந்திய அரசியல் வரலாற்றில் அந்த காலம் இன்றுவரை இருண்ட காலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது!!!எமர்ஜென்சி எல்லா மாநிலங்களுலும் கடுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தது!! ஆண்டுகொண்டிருந்த கருணாநிதி அரசு எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது.. அதற்கு நேர்மாறாக எம்ஜிஆர் எமர்ஜென்சியை நேரிடையாக ஆதரவளித்தார்..மத்திய அரசின் ஆதரவிருந்தால் தான் நாம் நலமாக இருக்க முடியும் என்று அவர் கருதினார்!!மத்தியில் யார் ஆள்கிறார்களோ அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட எம்ஜிஆர் கடைசி வரை தயங்கவே இல்லை..அந்த சூழ்நிலையில் கருணாநிதி தலைமையில் எமர்ஜென்சிக்கு எதிராக அறிக்கைகள்,கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன..பல தலைவர்கள் கைதாகினர்..திமுகவினர் தேடிதேடி கைதுசெய்யப்பட்டனர் மிசா சட்டத்தின் கீழ் ,சிறையில் சிட்டி பாபு என்பவர் காவலர்களின் கடுமையான தாக்குதலால் உயிரிழந்ததார்..எமர்ஜென்சியை இங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களே விரும்பவில்லை..இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தன் துருப்பு சீட்டான கருணாநிதி அரசு மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஊழல் பட்டியலை விசாரிக்க கமிசன் அமைத்தார்..ஊழல் குற்றத்திற்காக முதன்முதலில் விசாரணை கமிசன் ,இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறை!!!சர்க்காரியா தலைமையில் விசாரணை நடைபெற்றது... கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது..
எம்ஜிஆர் எந்த அளவிற்கு தயங்கினாரென்றால் மாநில கட்சிகளை எல்லாம் இந்திரா தடை செய்யப் போவதாக செய்தியை அறிந்தவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கும் அளவிற்கு இருந்துள்ளது...
கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது !!!
இந்திரா காந்தி அம்மையால் சட்டம் ,ஒழுங்கு,ஊழல் குற்றச்சாட்டுகள் பிரச்சனையை காரணம் காட்டி அதே சூழ்நிலையில் இந்திரா காந்தி கொதிநிலையிலயே மக்களவை தேர்தலையும் ,சட்டமன்ற தேர்தலையும் நடத்த விரும்பினார்...கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான் இன்றளவும் விவாதத்திற்குள் இருக்கும் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது..
புவிசார்வரைபடம்,
மக்கள் புழக்கம் எந்த கட்டமைப்பிற்குள்ளும் இல்லாத இலங்கைக்கு சம்பந்தம் இல்லாத கச்ச தீவு தாரை வார்க்கப்பட்டது!!!ஆட்சியில் இருந்த கருணாநிதி முயற்சிகள் எடுத்தார் எனினும் தீவிர பகிரந்தம் எதுவும் எடுக்கவில்லை!!!
எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இந்திரா காங்கிரஷ் மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது..கட்சி ஆரம்பித்த ஐந்தே வருடத்தில் சந்தித்த முதல் சட்டமன்ற
தேர்தலிலயே வெற்றி வாகை சூடினார்!!இதற்கு முன்னர் நடந்த திண்டுக்கல் நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்!! இந்த தேர்தல் காலங்களில் எம்ஜிஆர் மலையாளி,கோமாளி என திமுகவை சேர்ந்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்!!கணக்கு கேட்டது தப்பா என்ற கேள்வியை மக்களின் முன் வைத்து ஊழல்கள் பட்டியலை வாசித்து திரையுலக பிம்பத்தை பயன்படுத்தி மக்களின் நாயகனாக அரசனாக முதல்வர் நாற்காலியில் அமர்திட்டமிட்டனர் எம்ஜிஆர் உயிரோடு இருந்த மட்டும் கருணாநிதியால் முதல்வர் அரியணை ஏற முடியவில்லை என்பது மாற்றி எழுதப்பட முடியாத வரலாறு!!எம்ஜிஆர் யார் மத்திய அரசில் அதிகாரத்தோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பதை இறுதிவரை கையாண்டார்.!!இந்திரா தோல்விக்கு பொறுப்பேற்று கொண்டு கட்சி வளர்ச்சிகாக இந்தியா முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டார்..தமிழ்நாட்டு சுற்று பயணத்தில் செல்லும் இடமெல்லாம் அடக்குமுறை காலத்தில் ஏற்பட்ட இன்னல்களுக்கா கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டனர் திமுகவினர்!!காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்குமான போட்டியாக மாறியது..மதுரையில் திமுக குண்டர்களின் கையில் ஆபத்தான முறையில் மாட்டிக்கொண்ட இந்திராகாந்தியை என்எஸ்வி சித்தன்,மூப்பனார் உள்ளிட்டோரே மீட்டனர்..சட்டம் ஒழுங்கு பிரச்சனை காட்டி எம்ஜிஆர் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கி அங்கங்கே தடியடி நடத்தினார்... எம்ஜிஆர் ஆட்சியில் முதல் பிரச்சனையாக எழுந்தது பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு அரசு சலுகைகள் கிடைக்க வருட வருமானம் ஒன்பதாயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையிட்டார்!!! இது அவரின் கூட்டணி கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியது..எதிர் கட்சிகளின் மிகையான எதிர்ப்பின் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது...
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகள் மாறின !!!பல விசித்திரங்கள் நிறைவேறின.. இந்திரா ஆட்சியில் நெருக்கடி நிலையிலிருந்த பொழுது கடுமையான அடக்குமுறையை சந்தித்த திமுக ,பல போராட்டங்களையும் இந்திரா காந்திக்கு எதிரான விமர்சனங்களையும் வைத்த திமுக இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தது.. கலைஞரே நேருவின் மகளே வருக!!நிலையான ஆட்சி தருக என்று கூற வைத்தது.. கிட்லர் னு கிண்டல் செய்தவர் மாறக் காரணம் சர்க்காரியா கமிசன் வழக்கை மறக்கடிக்க செய்யதான் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இயல்பாக வந்தது!!!
#ஜெயலலிதாவருகை
#ரேகமிசன்
#பால்கமிசன்
#ஜெயலலிதா ஆட்சி
#2000ம் ஆண்டு வரை
ஊழல் ஒழிக்கிறேன் என்று ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் ஆட்சியில்
ரே கமிசன் எரிசாராயம் விற்பது தொடர்பாக அமைக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபா கைமாற்றப்பட்டது தொடர்பாக நடந்தது.. கரும்பு சக்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் எரிசாராயம் ஆல்கஹால் தயாரிக்க ,எரிபொருட்கள் தயாரிக்க என்று பல வகையாக பயன்படும்..இதை கேரளாவிற்கு ஏற்றுமதி,கடத்தல் தொடர்பாக நடந்த குற்றவியல் வழக்கு!!!திருச்செந்தூர் கோவிலில்
சுப்ரமணியபிள்ளை என்ற நபர் அறங்காவலராக பணி ஆற்றிக் கொண்டிருந்தார்,அவர் அதிகாரத்திற்குட்பட்ட கோவில்களில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி இவரின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் ..ஆனால் அவர் முன்னிலையில் திறக்கபட வேண்டிய உண்டியல் அங்கிருந்த மற்ற பணிபுரிவர்களால் திறக்கபடவும் கோபமடைந்த அவர்
தன் அதிகாரத்தை பயன்படுத்தியதாக மிரட்டி சென்றிருக்கிறார்..ஆனால் அன்றிரவே மர்மமான முறையில் இறந்தது குறித்து பால் கமிசன்
அமைக்கப்பட்டு கருணாநிதியால் எதிர்கட்சியாக இருந்த பொழுது அறிக்கையாக வெளியிடப்பட்டு பெரிய சர்ச்சைக்குள்ளானது....எம்ஜிஆர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவே செயல்பட்டார்..பிரபாகரன் அவர்களுக்கு நிதியுதவி அளித்ததாகட்டும், சிறையிலிருந்து விடுவித்ததாகட்டும் என பலமுறை உதவியிருக்கிறார்!!! எம்ஜிஆர் சொன்னால் பிரபாகரன் கேட்பார் என்ற அளவிற்கு இந்திய அரசியலால் பார்க்கப்பட்டு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.. 1980 களில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த லதா கட்சியில் மேல்பதவிக்கு வராமல் 1983ல் கட்சியில் சேர்ந்த ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்த்து ஆச்சர்யமே!!! ஜெயலலிதா அவர்கள் அதிமுக கட்சியில் ஐக்கியமான நிகழ்வுக்கு
அடிப்படையாக அமைந்தது உலக தமிழ்மொழி நாட்டில் அவர் அரங்கேற்றிய நடனம் தான்... கட்சிக்குள் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை பிரதானபடுத்துவதில் முக்கிய பங்காற்றி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அளவிற்கு உயர்ந்தார்!! சீனியர் அமைச்சர்களிடம் புகைய ஆரம்பித்தது..இடையில் எம்ஜிஆர் உடல்நலம் குன்றி இருந்த போது தேர்தல் சமயங்களில் பல இடங்களில் பிராசாரங்கள் ,பேட்டிகள் னு தனக்கான கூட்டத்தை உருவாக்கி கொண்டார்!!!ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் கையாலயே செங்கோலை பெற்று எம்ஜிஆர்க்கு பிறகு தான் தான் என்ற பிம்பத்தை உருவாக்கி கொண்டார்....திமுகவினரால் அண்ணா திமுக அம்மு திமுகவாக கிண்டலடிக்கப்பட்டது...
எம்ஜிஆர் மறைவின் பொழுது அவரின் சடலம் அருகில் இருந்த ஜெயலலிதா இறக்கிவிடப்பட்டது பெரிய விமர்சனத்துக்குள்ளானது!!!அடுத்த தேர்தலில் பிறகு நடந்த களேபரங்களில் ஜெ அணி ,ஜானகி அணி உருவானது..ஜெ அணியில் திருநாவுக்கரசு ,ஜானகி அணியில் ஆர்எம் வீரப்பன் போன்றோர்களும் முன்னனியில் இருந்தனர்....அந்த தேர்தலில் ஜானகி அணியினரை விட ஜெ அணியினரே வென்றனர் ..மக்கள் திரளும் ஜெயலலிதா பக்கமே திரண்டனர்..ஒரு கட்டத்தில் கட்சி முழுப் பொறுப்பையும் ஜானகி ஜெயலலிதா விடமே ஒப்படைக்கும் நிலை வந்தது.. ஜானகி அணியில் இருந்த பன்னீர் செல்வம் ஜெயலலிதா நெருக்கமானதும், ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு வில்லன் ஆனதும் காலம் போட்ட கோலம்..!!!ராஜீவ் காந்தி படுகொலை ,சட்டமன்றத்தில் ஜெயலலிதா விற்கு திமுகவினரின் மூலம் நடந்த வேண்டதகாத நிகழ்வுகள், படங்களாக அச்சிடப்பட்டு மகளிர் வாக்குகளை வாரி இறைத்து 1991 ல் ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறினார்..எம்ஜிஆர் -கருணாநிதி, ஜெயலலிதா - கருணாநிதி காலமாக மாறியது..இனிவரும் இந்த காலகட்டங்களில் முக்கியமான நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்கி 91 - 1996 ஒரு முதல்வர் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருந்துவிட்டார் ஜெயலலிதா!!! சுதாகரன் தத்தெடுப்பு ,திருமணம் என பல படாடோபங்கள் அரங்கேறின..சசிகலா ஜெயலலிதா உடன் இணக்கமாக காரணமாக அமைந்தது படங்களின் வீடியோ கேசட்கள்..சசிகலா சின்ன மேடமாக மாறி நடராஜன் ஆதிக்கம் அதிகமாக போயஸ்கார்டனிலிருந்து நடராஜன் வெளியேற்றப்பட்டார்..!!!கணவன்,மனைவி உறவை விட அக்கா -தங்கை உறவை காப்பாற்ற நடராஜனை விட்டு பிரிய சசிகலா சூழ்நிலை உண்டானாது... 96ல் கோவை குண்டுவெடிப்பு ,பிரமாண்ட திருமணம் ,ரஜினி எதிர்ப்பு குரல் அதன்மூலம் திமுக -தாமக கூட்டணி என பல்வேறு காரணங்களால் அதிமுக தோற்கடிக்கப்பட்டது..ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியிலயே தோற்கடிக்கப்பட்டார்!!!அடுத்து திமுக ,அதிமுக என்று மாறி மாறி ஆண்டார்களே தவிர மக்களின் வளர்ச்சியிலோ ,மாநில முன்னேற்றத்திலோ எந்த அக்கரையும் இருந்த்தாக தெரியவில்லை!!இடையில் திமுக தலைமைக்கு தெரியாமல் இலங்கை சென்று வந்த வைகோவால் பிரச்சனை, திமுகவின் அடுத்த தலைவர் என்ற நிலை இதுவெல்லாம் சேர்ந்து அவருக்கு ஸ்டாலின் எதிரியாக தென்பட்ட காரணத்தால் விடுதலை புலிகளால் ஆபத்து என்ற காரணத்தால் வைகோ வெளியேற்றப்பட்டு ஒன்பது மாவட்ட செயலாளர்களுடன் மதிமுக உதயமாகி 96ல் அவரும் களத்தில் இருந்தார்!! ரஜினி மந்திரத்தால் அவரால் ஜொலிக்க முடியாமல் போகிவிட்டது..!!!
கால் நூற்றாண்டு பிரச்சனையானா காவிரி பிரச்சனையாகட்டும், ஈழப்
பிரச்சனையாகட்டும் அரசியல் செய்தார்களே தவிர ஈழம் அமைய போராடவில்லை....விடுதலை புலிகள் அமைப்பை தடை செய்வதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயலலிதா !!சட்டசபையில் தீர்மானம் ஏற்றியவர்...கொத்து குண்டுகள் தன் மகளை காப்பாற்ற டெல்லி சென்றவர் கருணாநிதி!!! உண்ணாவிரதம் என்ற நாடகம் நிறைவேற்றி போர்நிறுத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை கொத்து குண்டுகள் எட்டு இடங்களில் போட்டிருக்கிறார்கள் என்று விடுதலை புலி அமைப்பினரே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது மழை நின்றாலும் தூவானம் விடாதல்லவா என்று விளக்கம் கொடுத்தவர்!!இரு கட்சியினரும் சுய நலத்தோடு ஈழ மக்கள் விசயத்தில் விளையாடியதற்கு பல நிஜங்கள் உண்டு...!!!
#2ஜி ஸ்பெக்டர்ம்
#சொத்து குவிப்பு வழக்கு
#குட்கா ஊழல்
#சுடுகாட்டு கூரை ஊழல்
சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்பையும் ,குமாரசாமி தீர்ப்பையும் நாடே அறியும்.....
அடுத்து இலவசங்களை வாரி வழங்கிய காலம் 2001 ல் அதிமுக விட்டு சென்ற போது 25000 கோடி தமிழக கடன் ,அடுத்து திமுக ஆட்சியில் 56,000 கோடி கடன் ,அடுத்த 2011 ல் ஆட்சி முடிவில் தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி!! இப்போதைய நிலை சொல்லவே 1ஆதேவையில்லை !!! இதுவா வளர்ச்சி ,இதுவா முன்னேற்றம் இதற்கா நம் வாக்கு!!! இதில் பல முரண்கள் தோன்றாலாம் உங்களுக்கு ஆனால் என் எண்ணமெல்லாம் மாற்று அரசியல் ,மாற்று ஆட்சி மட்டுமே!!!
திராவிட கட்சிகள் வேண்டாம்
மாற்றி வாக்களியுங்கள் !!மாற்றி சிந்தியுங்கள்!!!
#ரஜினி மக்கள் மன்றம்
#மக்கள் நீதி மய்யம்
#நாம் தமிழர் கட்சி
என பலர் களத்தில் இருக்கிறார்கள் ..மாற்றி சிந்திப்பதற்கான வாய்ப்பு..
தவற விட்டுவிடாதீர்கள்