அடையாளப்படுத்துதலில் சிதைபடத் தொடங்கும் பண்பாட்டுத் தளம்...தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன்..அதன் வாய்ப்பாக பல கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது..தற்போதைய மாணவர் சமுதாயம் நூற்றாண்டு பின்னோக்கி இழுத்து செல்லப்படுவதாக உணர்கிறேன்...பிரம்பு எடுத்துக் பெரியார் எதையெல்லாம் விரட்டினாரோ அவையெல்லாம் வேறொரு வடிவங்களில் பேசப்படாத வன்முறையாக மாணவ சமுதாயத்திடம் மருவி வந்திருக்கின்றன...
கவனிக்கபடாத அபத்தங்களாக, அமைதியாய் இருப்பதன் மூலமாக சமூகத்தால் அங்கீகரிக்கபட்ட ஒன்றாக வளர்ந்தும் கொண்டிருக்கிறது.....
தமிழ்நாட்டிலும் மேன்மையானதாக ,கல்வியில் சிறந்தவர்களாக காட்டிக் கொள்ளும் மலையாள தேசத்துக்காரர்கள் துறக்க தயங்கிய , தயங்கி கொண்டிருக்கிற சாதியின் பெயரை பிற்பகுதியில் இணைத்துக் கொண்டு விழிக்கும் வழக்கத்தை விரட்டி அடித்த தமிழர்கள், இப்போதைய மாணவர் அங்கங்களில் புரளும் இந்த அடையாளப்படுத்துதல் மூலமாக பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்....
மாணவர்களிடம் இதுவரை இல்லாத அளவிற்கு
வன்மங்கள் சாதியின் பெயரால் வளர்க்கபடுகின்றன..
தான் சார்ந்த சமூகத்தின் வண்ணங்களை கயிறுகளாக கட்டி கொண்டு இருக்கிறார்கள்..
முன்டா பனியன்களில் சக மனிதன் மீதான பற்று இல்லாமல் கலங்கடிக்கும் வார்த்தைகளை பிரசுரித்துக் கொள்கிறார்கள்...
இன்னும் ஒரு படி மேலேறி கை நகங்களில் வண்ணமிட்டுக் கொள்கிறார்கள்......
சுயசாதிப் பற்று மெல்ல மெல்ல மேட்டிமை தனம் நோக்கி உயரத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து மீள முடியாத பள்ளத்தில் கொண்டு விடும் என்பதை அறியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்......

காந்தியடிகள் ஆடை துறந்து அரைமேனியாய் அகிலம் முழுதும்
அலைந்த காரணம் மக்கள் வறுமையை வரிந்து காட்டுவதற்காக தான்..அந்த அடையாளம் சமூகத்திடம் மேட்டிமை தனத்தை குறைத்துக் காட்டியது..சக மனிதன் மீதான கரிசனத்தை வளர்த்தது...இங்கு மாணவர் மத்தியில் திணிக்கப்படும் அல்லது அவர்களே விரும்பி ஏற்கும் அடையாளங்கள் சுய பெருமை பாராட்டுவதாகவும் ,
தன் அருகாமையில் இருப்பவன் மீது அதிகாரம் செலுத்த விரும்புபவனாகவும் காட்டிக் கொள்ளவே அணியப்படுகிறது...
இந்த நடவடிக்கைகளை கவனமாகவே கையாள வேண்டும்..எவரொருவருக்கும் பொருளாதாரத்தில் எந்த நிலையிருப்பினும் தன் பின்புலம் பற்றிய சர்வாதிகார போக்கு இருக்கவே செய்யும் ..
அதை தொடும் பொழுது பற்றி எரிய வாய்ப்பிருக்கிறது....நாம் அவர்களுக்கு கற்றுதர வேண்டியது எல்லாம் காந்தியமும்,கம்யூனிசமும் தான்....எக்காலமும் இல்லாமல் இந்த நூற்றாண்டில் தான் பிளவுற செய்ய புற்றீசல் போல மதம் ,இனம்,மொழி,சாதி இவற்றின் பெயரால் அடிப்படைவாதிகளால் காரணங்கள் புறப்பட்டு கொண்டிருக்கின்றன..இதை முறியடிக்க மனிதம் போற்றும் மாண்புகளை மீட்டெடுக்க பெற்றோர்,கற்றரிந்த பெரியோர்,ஆசிரியர் என சமூகம் விழித்துக் கொண்டு செயலூக்கம் பெற வேண்டும்..அரசியல் தெளிவை கற்று தந்துவிட்டால் போதுமானது சமூகம் தன் கருப்பு துணியை அவிழ்த்துக் கொள்ளும் ..வெளிச்சம் விரிவடையும்!!!

இன்னும் விரிவாக எழுத முடியும் ..எழுத துணிந்தவனுக்கு யாரையும்,எதன்பொருட்டும் திருப்தி செய்ய வேண்டிய அவசியமில்லை..ஆனாலும் கவனமாய் இருக்கிறேன் வார்த்தை பிரயோகங்கள் என்னையும் மீறி யாரையும் கலங்க செய்துவிடுமோ என்று உள்ளூற ஓடிக் கொண்டிருப்பதால் நிதானமாகவே முன்வைக்கிறேன்...இந்த எண்ணமும் நாளைடைவில் மங்கி
எழுத்துகளில் உயர்கொதிநிலை அடையும் காலமும் வரலாம்..அதிகாரம் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் பொறுத்து!!!

கயிறுகள் அறுத்தெரியபட்டு
விரல்கள் கோர்க்கபட வேண்டும்...சமத்துவம்
சங்கமிக்கபட வேண்டும்...
விரல்கள் கோர்க்கபட வேண்டும்...சமத்துவம்
சங்கமிக்கபட வேண்டும்...
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment