அம்மாக்களால் முடியும்,அப்பாக்களால் முடிவதில்லை!!!!
அம்மா என்ற சொல்லே உணர்த்தி விடும் எதற்கும் ஒப்பற்றவர் என்று!! 'அ'உயிரெழுத்துகளில் முதல் எழுத்து, ம் மெய்யெழுத்து, அதாவது உயிர் கொடுத்து மெய்யாகிய உடம்பை உரு கொடுத்தமையால் அம்மா என்று உச்சரிக்கப்படுகிறார்....இது என் ஒருத்தனின் அம்மா வின் கதையல்ல ஒட்டுமொத்த அம்மாக்களின் கதை....பொதுவாக அம்மாக்களின் அன்பை பற்றியே பேசிய உலகம் அவர்களின் வலிமை பற்றி அவ்வளவாக வாய் திறக்கவில்லை..அதுவும் ஆதிக்கத்தின் மற்றொரு வடிவமாக தான் எனக்கு படுகிறது..
இங்கே அதிகமாக ரொமான்டிசைஸ் பண்ணி பெண்களை சிறைபடுத்தி தான் வைத்திருக்கிறார்கள்..இப்போது நான் சொல்வது அலங்காரம் அல்ல..உண்மை
பெற்றோர் ,குழந்தைகள் என்று நிறுவப்பட்ட குடும்ப அமைப்பில் நாயகன் ,நாயகி அப்பா ,அம்மா உறவுதான்..இதில் நாயகன் தடம் மாறும் பொழுது அல்லது தவறும் பொழுது நாயகி தான் முழுப்பொறுப்பிற்கு வருகிறார்...
இங்கே நாயகர்களுக்கு மறுமணம் கொள்ள இருக்கும் நிறய வாய்ப்புகள் நாயகிகளுக்கு ஏனோ மறுக்கப்பட்டிருக்கின்றன...
பெற்ற பிள்ளைகளை தவறி விட்டு செல்லும் ஆண்கள் தங்கள் இணையை தவிக்க விட்டு செல்கிறார்கள்..அதுவரை வீடு ,கோவில் என்றிருந்த பெண்கள் தங்களை சுற்றி உருவாக்கப்பட்ட சுவர்களை தாண்டி வரும் பொழுது ஆயிரம் பலம் பெற்ற அயன்களாக மாறிவிடுகிறார்கள்..
பின்னல்களால் சூழப்பட்ட வலையில் சிக்கிக் கொண்ட மீன்களாக இருந்தவர்கள் பிய்த்து எரியும் சுறாக்களாக மாறிவிடுகிறார்கள்...அப்படி ஒருவரைதான் உங்களுக்கு சுட்டிக்காட்ட போகின்றேன்.. என்னுடைய அம்மா தான்!!!
அப்பா இருந்தவரை அவரின் அடிச்சுவடியை
பின்பற்றி செல்லும் நிழலாக நீண்டகாலம் நடந்ததால்
எதற்கும்,
எதன்பொருட்டும் காத்திருந்ததோ ,
கவலைப்பட்டதோ இல்லாமல் வெறுமனே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த என் அம்மா தான் இப்பொழுது சூரிய வெளிச்சமாய் ஒளி வீசி என் கரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்....அப்பா இருந்தவரை வாசல்படிகளை மட்டுமே அறிந்த கால்கள் இன்று பல கதவுகளை உடைத்து ஓடிக்கொண்டிருக்கின்றன!!! கல்யாணத்தை பண்ணி பாரு ,வீட்ட கட்டி பாரு என்ற சொலவடை இருக்கிறது.. இரண்டுமே கைகூடும் பொழுது எங்கள் நாயகனை இறைவன் பறித்துக் கொண்டார் !!!இந்த சூழ்நிலையில் தான் எங்களிடம் நெருங்கி இருந்த பலரின் உருமாற்றங்கள் நிகழ்ந்தன...!! என் அம்மா வீட்டை தாங்கும் தூண்களில் ஒன்றாக மாறிப் போனார்..என் தங்கையின் திருமணத்தை நான் என்னமோ தனிநபராக நின்று சாதித்து விட்டதாக கைகொடுப்பவர் பலர் ஆனால் எனக்குள் உள்ளும் ,வெளியும் நன்கு அறியுமாதலால் குலுக்கல் கொடுப்பவர்களுக்கு என் மத்தாப்பு புன்னகையை மட்டும் காட்டி நகர்ந்து விடுவேன்.. !சொல் ஒன்று செயல் வேறொன்றாக இருக்கும் காலத்தில் அவர் வார்த்தைகளை நம்பிக்கொண்டிருந்தவர்..நானோ வார்த்தைகள் வெறும் நாக்கின் அசைவுகள் என்பதை நன்கு அறிந்தவன்..வார்த்தைகளை நம்பிக் கொண்டு சிலந்தி வலையில் சிக்கும்
பட்டாம்பூச்சியாக நடமாட முடியாமல் வருந்தியிருக்கிறார்..
உதாசீனங்களால் உதறப்பட்டார்..ஆனால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள பழகி கொண்டார்..
இவற்றிற்கெல்லாம் ஒரே காரணம் இன்னும் கடமையாக அவர் நம்பிக் கொண்டிருக்கும் என் எதிர்காலமும் ,தங்கையின் வாழ்க்கையும் தான்....
ஒருவேளை என் அம்மாவின் இடத்தில் அப்பாவை பொருத்தி பார்த்தேனானால் அவர் நிம்மதியாக நாட்களை கடத்தியிருப்பாரா!!!????நடமாடி இருப்பாரா ???என்பதும் சந்தேகமே!!! அவருக்கு எப்போதும் அன்பும் ,ஆதிக்கமும் செலுத்தக் கூடிய ஒரு நபர் தேவைப்பட்டு கொண்டிருப்பார்..அப்படி ஒருவர் இல்லாமல் ஆகும் பட்சத்தில் மனகுமுறல்களாக வெடித்து சிதைந்திருப்பார்....!!!என்னிடம் நண்பர்கள் சொல்வதுண்டு அப்பா இருந்துருந்தார்னா என் நிலைமையே வேறென்று அது உண்மை தான் ஆனால் அம்மா இல்லாமல் இருந்திருந்தால் நான் காற்றோடு கலந்த கற்பூரமாக போயிருப்பேன் என்பதை நன்கு அறிவேன்..சனிக்கிழமை சந்தைக்கு மட்டுமே கட்டப்பையொடு வலம் வந்தவர் இன்று சகதியில் மம்புட்டியோடு கால்வைக்கிறார் ..வாய்க்கால் வெட்டுகிறார் ..விவசாயமும் பார்த்து வெள்ளாமையும் எடுத்து விட்டார்!!!எல்லாம் எங்களுக்காக...இடைஇடையே தையல் இயந்திரம் மூலம் கால்களில் தகதிமிதா போட்டும் கொள்கிறார்..அதுபோதாதென்று நூறுநாள் குள வேலையில் இப்போது காலெடுத்து வைத்திருக்கின்றார்..என்னால் என்ன பயன் பெற்றார் என்றால் அது ஒன்றை மட்டும் என்னால் சொல்லிக் கொள்ள முடியும் அது தான் புத்தக வாசிப்பு.வார்த்தைகள் தரும் சூட்டையும்,உதாசீனங்கள் தரும் புறக்கணிப்பையும் இப்போதெல்லாம் இயல்பாக கடந்துவிடுகிறார்..நான் இன்னும் உயிர்ப்போடும் ,சில நல்ல பழக்கங்களோடும் இருப்பதற்கு காரணம் என் அம்மாவிடமிருந்து சுரக்கும் அன்பு எனும் வற்றாத ஜீவநதியில் தொடர்ந்து என் வேர்களை நனைத்துக் கொண்டிருப்பதால் தான்...நானும் பல பெண்களை பார்த்திருக்கிறேன் தங்களுக்கு துணை இல்லையெனும் பொழுது தான் யாருக்கும் நிகர் அல்ல என்று உயரம் தொடுபவர்களை கண்டு வியந்திருக்கிறேன்..வரலாறும் அப்படியாபட்ட பெண்களை நமக்கு அடையாளம் காட்டியுருக்கின்றது..
இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை..நயன்தாராவும் கூட எனக்கொரு புதிர் தான்!! விமர்சனங்களில் சிக்கியும் ,புறக்கணிப்பை தாண்டியும் அவரது வளர்ச்சி அவர் மீதான என் காதலை அதிகபடுத்தியிருக்கிறது..
அதனால் தான் சொல்கிறேன்..

குடும்பங்களை நிலைநிறுத்திட அம்மாக்களால் முடியும்!!பெரும்பாலும் அப்பாக்களால் முடிவதில்லை
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment