Friday, 18 November 2022

புத்தகம் பார்வை - அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

    72 பக்கங்களில் 12 கட்டுரைகள் என அவரின் கடந்த காலத்தை எளிய சொற்களைக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒரு மறைமுகப் பக்கம்
என்றில்லாமலும் , எந்த பூடகமுமின்றி நேரடியாக உரையாடி இருக்கிறார் ...

பள்ளிக்கூடங்கள் கற்றுத்தந்த முதல் தந்திரம் -
அறிவை பணமாக்கும் தந்திரம் ஆரம்பித்த முதல் பக்கம் கடைசிவரை அலுக்காமல் அழைத்து சென்றது...

   The fool and the donkey கதையை கேலியாக ரசித்து படித்திருக்கிறேன், சிரித்தும் இருக்கிறேன் .அந்தக் கதை ,

   கழுதை ஒன்றை வாங்க ஆசைப்படுகிற 
ஏழையொருவன் பணமெல்லாம் சேர்த்து சந்தைக்கு போகிறான் ,அங்கிருக்கிற கழுதைகளில் காதுநீண்ட அந்த கழுதையை பார்த்தவுடன் விருப்பபட்டு வியபாரியிடம் இந்த கழுதை எனக்கு பிடித்திருக்கிறது எவ்வளவு என்கிறான் ...
வியபாரி அவரின் மனதை புரிந்து கொண்டவுடன் விலை அதிகமாக  சொல்லி விற்றுவிடுகிறான்..இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு திருடர்கள் போகிற வழியில் கழுதை கயிற்றை அவிழ்த்து கழுதை இருந்த இடத்தில் தன்னைக் கட்டி கொள்கிறான் ...திருடப்பட்ட கழுதை வியபாரியிடமே திரும்ப விற்கப்படுகிறது ..

   வீடு திரும்பியவுடன் அவனுக்கு அதிர்ச்சி பின்னால் வந்த கழுதை எப்படி மனிதனாக மாறியது என்று !!! அதற்கு அந்த திருடன் அய்யா நான் வீட்டில் அதிகம் சேட்டை செய்ததால் அம்மா என்னை சபித்து கழுதையாக்கி விட்டாள் ..உங்கள் கைப்பட்டவுடன் நான் மனிதனாகி விட்டேன் என்கிறான் ..
இதை நம்பிய அந்த ஏழை இனி இப்படி சேட்டை செய்யாதே என்று அவிழ்த்து விடுகிறான் ...

பிறகு சிறிதொரு நாள் கழித்து பணம் புரட்டி திரும்ப அந்த வியபாரியிடம் போனபோது அதே கழுதையை கண்டு அட பையா மறுபடியும் சேட்டை செய்து கழுதையாகி விட்டாயா ?? என்கிறான்..

   இப்ப நாம்  அந்த ஏழையை முட்டாள் என்று அடையாளப்படுத்துகிறோம் ..
உண்மையாக தன் விருப்பத்தை வெளிப்படுத்தியவன் ,தொடர்ந்து சக மனிதர்களின் குரல்களை கேட்பவன் ,
நம்புகிறவன் முட்டாளா அவ்வாறு தான் அடையாளப்படுத்த வேண்டுமா !!இப்படி தான் வகுப்பறையிலும் ,
சமூக வெளியிலும் நல்லவன் ,கெட்டவன் ,
அறிவாளி ,முட்டாள் நம் பார்வையை வலிந்து திணிக்கும் வன்முறையை பொதுதன்மையாக்கி செய்து முடிக்கிறோம் என்பது அபத்தம்

தரம் என்பது தான் வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை -டால்ஸ்டாய்

   வரலாற்றை மீட்டுருவாக்கம் என்ற பெயரில் திரிபுவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள் ,
வெறுப்புணர்வை வளர்க்கும் வார்த்தைகளை விதைக்கிறார்கள். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது கடந்த கால தவறுகளை மீண்டும் நிகழாமல் செய்வதற்கு தான் என்பதை மறந்து பாடப்புத்தகங்களில் விஷம துவசேங்களை மெல்ல மெல்ல தொடங்கியிருக்கிறார்கள் ...
இவற்றையெல்லாம் வீர சிவாஜி குறித்த கட்டுரையில் தக்க ஆதாரங்களுடன் காண்பித்திருக்கிறார்...

கோரிக்கைகள் வெல்வதல்ல வீரம் அது  தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதுதான் என்பதை
"செயல்படுவதுதான் சுதந்திரம்" என்று ஒரீரு வார்த்தைகளில் சொல்லி சின்ன புறக்கணிப்பையும்,மறுப்பையும் ஏற்காத என்னை உத்வேகமாக செயல்பட வைத்திருக்கிறார்..

வயோதீகம்  படர படர ,விலகல் அல்ல ஒட்டுதலே விரும்பத்தக்க தீர்வு . ஒடுங்குதல் அல்ல விரிதலே மகிழ்ச்சி.
சடங்குகள் என்பவை
பழமையானவை அவை விவாதங்களை ,உரையாடல்களை அனுமதிக்காதவை ..வகுப்புகள் உயிர்பெற வகுப்பிற்கு வெளியே கற்கும் சூழலை விருப்பத்தை உருவாக்கும் தலைகீழ் வகுப்பறைகள் அவசியம் என்பதை தெரியப்படுத்துகிறார்...

  ஒவ்வொருவரின் மண்டைக்குள் ஒரு உலகமிருக்கிறது அது சுமையாக இருக்கிறது வகுப்பறையும் வீடும் உருவாக்கியதாக எழுத்தாளர் சொல்கிறார் ,கூடுதலாக வீடு ,வகுப்பறை தாண்டி  கூடுதலாக சமூகத்தையும் ,சமூக ஊடகங்களையும் சேர்த்துக் கொள்வோம்.
கற்றது கையளவு ,கல்லாதது உலகளவு என்பதை ஒவ்வொருவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வதும் புரிந்து கொள்வதும் அவசியமாகும் ...
நிரப்பபட்ட கோப்பையின் மீது ஊற்றப்படுகிற ஒவ்வொன்றும் வழிந்தோடி வீணாவதை போல மேதாவி என்ற நினைப்பைக் கொண்டு உங்களை எப்போதும் நிரப்பிக் கொள்ளாதீர்கள் ,ஆசிரியருக்கு அந்த எண்ணம் அறவே இருக்கக்கூடாது .

  பூனையின் வழியான அன்பு,
நக்கீரன் கோபால் ,
அறிவொளி இயக்க செயல்பாடு ,
தேசியக் கல்வி கொள்கை பற்றிய கண்ணோட்டம் ,
சுஜாதாவின் The hidden side of everything ,
என கட்டுரைகள் எல்லாமும் வாசிக்க வேண்டிய அவசியமானவை

ஆசிரியர்களுக்காக திருமிகு ச.மாடசாமி அய்யா கூறுவது 
நீங்கள் கோபங்கொண்ட மாணவர்களோடு தயவுசெய்து கை குலுக்குங்கள் .கண்டித்த மாணவர்களை அழைத்துப் பேசுங்கள் .வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காகத் தோற்றுப் போங்கள் .தோற்பதற்கு கூச்சபடாதவர்களே உண்மையான வீரர்கள் ; உண்மையான ஆசிரியர்கள்...

நன்றி ஆசிரியர் திருமிகு.ச.மாடசாமி 
அவர்களுக்கு 

#APR

Thursday, 3 November 2022

கால வண்டி

   காலம் கடந்து போகும் என்கிறார்கள்!! இல்லை , இல்லை!! சிலவற்றை காணாமல் போகவும் செய்துவிடும் என்பது நிதர்சனம் ...

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்லப் பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு- என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
என்று பாடிவிட்டு பாரதி கடந்துவிட்டார் ..
இன்றைக்கோ காலையும் மாலையுமாக கணிணி மயமாக ,கைபேசியும் கையுமாக பாப்பாக்கள் வீட்டின் படுக்கையறைக்குள்ளே புரண்டு கொண்டிருப்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
    எனக்கு நன்றாக நினைவில் ஓடுகிறது 
நான் ஓட்டிய பனைமர வண்டி !! புத்தகப்பையை வந்து வீட்டில் கழற்றி வைத்தவுடன் தெருவிற்குள் நுழைவதும் 
அந்த பனை வண்டிய தயார்பண்ணி வைத்து ஒத்த கையில் தள்ளி நகர்த்துவதும் ஏதோ மரணக்கிணறு வண்டி சாகசம் போல உணர்வு கிளந்தெழும் ..அந்த வண்டியை தயார் பண்ணுவதென்பது நட்டு ,போல்ட்டை கழட்டும் எளிமையான வேலையல்ல எங்க ஊரில் அந்த வண்டிய தயார் பண்ணவே ஊருக்குனு அண்ணே ஒருத்தர் இருப்பாங்க அவர்ட்ட இரண்டு நாள் கெஞ்சனும் ,ஒரே அளவுள்ள பனைபழம் கிடைக்கும் வரை காத்திருக்கனும்..அதற்கு பிறகு அதைக் காயப்போட்டு நடுப் பொந்தில் ஒரே அளவான ஓட்டையை போட்டு உருண்டை குச்சியை கோர்த்து வைக்கனும் அதற்கும் பிறகு சின்ன கைக்கு இசைவான கவட்டைக் குச்சியை தேடிப்பிடித்து அதை அந்த பனைப்பழம் சொருகியிருக்கிற குச்சியில் நாயகமாக பிடித்து தள்ளும் போது உலகமே பின்னாடி உருண்டு வரது மாதிரியான சந்தோசம் நான் அனுபவிச்சிருக்கேன் ..
இப்ப பனை னா என்ன என்பதையே பிள்ளைகளுக்கு டிஜிட்டல் வடிவத்தில் காட்ட வேண்டியதாக இருக்கிறது..

நான் வளர்ந்த தெருவில் எல்லாம் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நாங்கள் எல்லாருமாக அமளிதுமளிப் பண்ணிக் கொண்டும் ஐஸ்பாய் ஆடிக் கொண்டிருப்போம் ..
புலங்கிய இடங்களில் மறைவதும் அந்த இருட்டில் கப்பைஸ் அடிப்பதும் ஆகப் பெரிய சாதனை ஐஸ் 1 ஆக்கூடாது என்பதில் எல்லோருக்கும் சுயநலம் ஓடிக் கொண்டே இருக்கும் அதே ஐஸ் 1 நம் நண்பர்கள் ஆகிட்டா அவனக் காப்பாத்த கப்பைஸ் அடிக்கனும் ன்றே உத்வேகம் ஏதோ எதிரிநாட்டுக்குள் படையெடுத்துப் போற பதைப் பதைப்போடு பதுங்கி பதுங்கிப் போவோம் ..இப்ப குழந்தைகள் வீட்டுக்குள்ள மட்டுமே பதுங்கி இருக்கிற 
காலம் ,ஆறு மணினா எல்லாத் தெருக்களும் மயான அமைதியாக குடிக் கொண்டிருக்கிறது..

    பஞ்சர் ஒட்டுற சைக்கிள் கடைக்காரன் அண்ணன பழக்கம் பிடிச்சு அவுங்க வேணாம் னு ஒதுக்குற டயர வாங்கிட்டு வந்து அதற்கென்றே பிரத்யேகமான குச்சி ஒன்றை தயார் செய்து யார் அந்த டயரை கீழ விடாம ரொம்ப தூரம் ஓட்டுறாங்க ன்ற போட்டிய எல்லாம் இந்த குழந்தைள் இன்னும் இந்த டிஜிட்டல் உலகத்தில் தேடுனாலும் கிடைக்காது ..அந்த குச்சி தான் ஸ்டியரிங் அதை லாவகமாக சாய்க்கிறப்ப அந்த டயர் நாம சொன்னபடியெல்லாம் சுத்தும் அதுவும் ஒரீரண்டு முயற்சியில் எல்லாம் வாய்த்துவிடாது ,குச்சியையும் டயரையும் பழக்கப்படுத்த வேண்டும்..


      பம்பர விளையாட்டு அதுல ஆம்பளக் கட்டை ,பொம்பளைக் கட்டைனு ரக ரகமா பேரு இருக்கும் ..நல்ல பம்பரமா கடையில் தேடிப்பிடிச்சு வாங்கி அந்த ஆணிய கூர்படுத்த தெரிஞ்ச வித்தையெல்லாம் செஞ்சு வச்ருப்போம் ..
பம்பரத்தை கையில சுத்த விடுறது பெரிய மந்திர வித்தை அதை எடுக்க வேண்டுமென்றால் அந்த கையிற்ற முதல்ல எடுத்து ஆணி அச்சுல இருந்து சுத்தி அதோடு முடிவு பகுதியில நம் வசதிக்கு ஏற்றார் போல மூடியோ ,வாசரோ வச்சு பிடித்துக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றி விட்டோமானால் சர்ர்ர்னு சத்தம் வரும் அப்படியே அந்தரத்தில் கையநீட்டி அதை உள்ளங்கையில் சுத்த விடுரப்ப ஏற்படும் குறுகுறுப்ப எந்த சர்க்கஸ் விளையாட்டும் தராது


    ஜான்கல்லு விளையாட்டுல என் நண்பன் கல்லை என் மண்டையில் போட்ட வடு , மணிக் காவியத்தில் முதுகில் ஏறி உட்கார்ந்தப்ப அழுத ராஜா , 
சோடா மூடிக்கு அருண்கிட்ட போட்டுகிட்ட
சண்டை , 
கிரிக்கெட் பேட்டும் ,டீவியும் இருந்ததாலயே என்னை தலைவனா ஏத்துக்கிட்ட கூட்டம் னு என் பால்ய நினைவுகளை துளிமை விஜயராகவன் எழுத சொல்லி சுரக்க வைத்துவிட்டார் ,அவருக்கு நன்றிகள்

#APR

Wednesday, 2 December 2020

ஆண்மனம்

திருமண வாழ்க்கைல பெரும்பாலும் 
ஆண்கள் பெண்கள் குடும்ப கட்டமைப்புல சந்தேகம் என்ற புள்ளி உருவாகும் பொழுது பொன்னுங்க ஆண்கள காட்டிலும் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் ..உண்மை என்னனா ஆண்களுக்கு known personality ஒண்ணு உள்ள இருக்கு அதாவது அவனுக்கே badsoul உள்ள
இருக்குனு நல்லாத் தெரியும் ஆனால் அத ஒத்துக்காம தன்னை நல்லவன் ,சுத்தமானவன் சொல்லி திரிகிற ஒருவனால சந்தேகபடாம இருக்க முடியாது..எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் பொருளாதார ரீதியாக சிரமப்படுறாங்கனு தெரியும் ஆனால் மனமகிழ்ச்சியா இருப்பாங்கனு நம்பீட்டு இருக்கப்ப நம்ப பிரச்சனை சொல்லும் போது தா தெரியுது அவர்களுடைய சித்ரவதை ..ஏன் கா இதெல்லாம் வீட்ல சொல்லலை னு கேட்குறப்ப அம்மாட்ட சொன்னா அதுக்கென்ன தெரியும், அண்ணன்ட்ட சொன்னா சண்டைக்கு போவான் !! வெளியே தெரிஞ்சா அசிங்கமா போயிரும் ..ஊர் வா மூட முடியாது ..ஏதோ அசிங்கத்துக்கு பயந்துட்டு வாழ்ந்துட்டேன் இப்டியே
இருபது வருசமா னாங்க!!! இப்ப அவுங்க எந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாதபடி மனசிதைவுல இருக்காங்க அதாவது எதுனாலும் சந்தோசம்னாலும் சரி துக்கம் னாலும் சரி அதிர்ச்சி ஆகி உட்காந்துருவாங்க!!!!!!

  எனக்கு தெரிந்த இன்னொரு பொன்னோட வீட்டுகார் உயர்வு மனப்பான்மை ,தாழ்வு மனப்பான்மை கலந்த ஆளு இது எதிர்தரப்புல இருக்க ஆள பொறுத்து பிரதிபலிக்கும் .....
இது மனச பொறுத்து அந்தாளோடு பொறுமீட்டு போனா பிரச்சனை இல்ல..ஒரு விசேசத்துக்கு போனா யாராவது நகை போட்டு வந்தா இங்க பாரு உன்னால போட முடியல ,யாராவது car ல வந்தா நம்மனால போக முடியல னு Feel பண்ணுவாராம் ....ஆரம்பத்துல அந்த பொன்னும் நம்ப நிலையை நினச்சு தான் வருத்தபடுறார் னு நம்புச்சு அதுக்குபிறகு தான் தெரிஞ்சு கண்ணாலம் ,காதுகுத்து  னு போனா நாலு பேரோட பேசும் சிரிக்கும் அதப் பொறுக்க முடியாம தான் சோகமா இருப்பதன் வழியா அந்த கொண்டாட்ட மனநிலை கெடுக்கறது தா நோக்கம்...தன் உடம்பு சரியில்ல உணரும் பொழுதெல்லாம் அவரு அந்த புள்ளைட்ட அடுத்து உன்னோட திட்டம் என்னவென்று கேட்டுகிட்டு இருப்பாராம் ....யாரெல்லாம் அந்த பெண்ணிடம் நெருக்கமா உணராங்களோ அந்த குடும்பத்தோட ஏதாவது சண்டை வரவச்சு துண்டிக்க வைத்துவிடுவது அதாவது பக்கத்துவீடு ,நண்பர்கள் னு யாருடனும் ஒட்டவிடுவதில்லை ..ஏதாவது பிரச்சனைனு பொழுதெல்லாம் நான் என்ன குடிக்கிறனா இல்ல கூத்தியா வச்ருக்கனா னு கேட்டு முடிப்பாராம் ..என்னோட பதில் என்னானா குடிக்கிறவனோட குடும்ப நடத்திரலாம் இந்த நொச்சு வாயன்கள்ட்ட குடும்ப நடத்த முடியாது!!!

   தஞ்சை பிரகாஷ் மிஷன் தெருவில் ஒரு பொன்னு சுதந்திரமா வளரா 
கல்யாணத்துக்கு  பிறகு அடக்குமுறைக்கு ஆளாகி தன் மகளோட சுதந்திரத்திற்கே தடையா  மாறும் அவலத்த காட்டி இருப்பார் ...பள்ளிகொண்டபுரம் நாவல்ல நீல.பத்மநாபன் பெண்ணோட 
அகசிக்கல், ஆணோட ஊசலாட்ட மனசு இத பத்தி ரொம்ப அழகாய் சொல்லி இருப்பார்..இந்த நாவல்லாம் படிக்காட்டி நானும் நல்லவன் தான் சொல்லீட்டு நாலு பேத்த நோகடிச்சுட்டு இருந்துருப்பேன்... நல்லவேள வாசிச்சுட்டேன்

   நான் என் மனைவிட்ட சொல்றது இதுதான் என்னிடம் unsecured நீ உணர்ந்தால் மனதளவில் காயப்படுத்தும் செயல் வெளிப்பட்டா விலகியிரு நான் பொறுப்பேத்துக்கிறேன் என்பேன் ..உடனே அவர் எப்படா என்னை கழட்டி விடலாம் னு இருக்க  என்று கேட்டு முடித்து கொள்வார் ..நான் உங்கள்ட்ட அதாவது பெண்கள்ட்ட சொல்வது என்னனா நீங்க இருக்கிற இடத்துல உங்களால பாதுகாப்பா உணர முடியவில்லை என்றால் நீங்க அந்த உறவை துண்டிக்கிறது தா நல்லது ..நாம secured ஆ இருக்கோம்ன்றத தாண்டி வாழ்க்கையில் வேற என்ன பிடிப்பு இருந்துவிடப் போகிறது ..அது ரொம்ப முக்கியம்!!! so called ஊர் பேசும், கௌரவம் போடும் னு நீங்க வாழ்ந்தா திரும்பி பாக்றப்ப எந்த திருப்தியிம் இல்லாம உங்க பிள்ளைகள்ட்ட கஷ்டத்த மட்டுமே சொல்லி அவுங்கள சூழ்நிலை கைதியா வளர்ப்பீங்க....ஊர் வாய மூட முடியாது ஏனா அதுக்கு காது 
கிடையாது ,கேட்கவும் கேட்காது நம்ப பிரச்சனை காதுகொடுத்து கேட்குறத விட அத பேசி புலாங்கிதம் அடைய தான் மனசு கெடந்து தவிக்கும் ..so  முதலில் உங்க வாழ்க்கையை சரியா வாழுங்க உங்களுக்காக வாழுங்க, நீங்க வாழுறது தான் உங்க புள்ளைகளுக்கு சொல்லி தர சரியான பாடம்...ஒண்ண மட்டும் மனசுல வச்கங்க சந்தோசமா வாழ பணம் தேவையில்லை நீங்க நினச்ச மாறி வாழத்தான் பணம்  வேணும் ..உண்மையான மதிப்பு மருவாத எல்லாம் அடுத்தவுங்க கஷ்டபடுத்தாத மனசுல அடங்கி இருக்கு!!

#இரகுநாத்பழனிச்சாமி 

Tuesday, 21 April 2020

அரசியல் பயில்

  #அரசியல் பயில்

அரசியல் ஈடுபடுவதற்கு ஏதாவதொரு கட்சி ,கொள்கையின் பொருட்டு உங்களை பிணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை....
எதன்பொருட்டும் மாறாத கொள்கை பிடிப்போ , தனி நபர் வழிபாடோ இல்லாத நபராக இருந்தால் போதுமானது......உலகம் எப்பொழுதும் சீர்திருத்தத்துக்கு உட்பட்டது என்ற பெரியாரின் கூற்றோடு பொருந்திக் கொண்டு இயங்க வேண்டும்....அரசியல் எப்பொழுதும் அதன் மகத்துவத்தை உள்ளடக்கி இருக்க தான் செய்கிறது..அரசியல்வாதிகளால் தான் அதன் மேன்மை தன்மை சிதைவுண்டு அதன் கோரபக்கத்தை மட்டும் சுவிகரீத்து பெரும்பான்மையான மக்கள் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு போடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர்.....

      மக்கள் அரசியல் அதன் பரிமாணங்களை கடந்த இருபது ஆண்டுகளில் முற்றிலும் மாறியிருக்கிறது....
மக்கள் மத்தியில் கொள்கைகளும் ,தத்துவங்கள் பற்றியெல்லாம் எந்த கவலைகளும்  தேவையில்லை...சமூகத்தில்  புலங்கி கொண்டிருக்கும் இணையதளம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரத்தில் கச்சாப் பொருளாக எவைஎவை விமர்சிக்கப்படுகிறதோ அந்தந்த சமயங்களில் மக்களின் பிரதிபலிப்புகளாக ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தேர்தல்களில் மாறும்...இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பெரிய வரி சுரண்டலை பற்றியோ ,அரசியல் கொலைகளை பற்றியோ மற்றும் பணப்பரிமாற்றம் பற்றியெல்லாம் விவாதங்கள் ,உரையாடல்கள் நிகழாது அதன் உள்ளடக்கம் மக்கள் செய்திகளை விட அவர்கள் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளையே விரும்புகிறார்கள்...
இப்பொழுது அதிகம் பேசப்பட கூடிய செய்திகள் எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள்...
பிரியாணிக்கான சண்டை பற்றியும் ,கடப்பா கல்லை திருடிவிட்டு சென்றார்கள் ,காலில் விழுந்து அதிகாரத்திற்கு வந்தார் ,எதிர்கட்சி தலைவர் சட்டையை கிழித்துக் கொண்டாரென்று அனைவராலும் தீர்ப்பு சொல்லக்கூடிய  தாங்கள் சரியென்று நிற்க கூடிய பக்கம் தங்களை அமர்த்திக் கொண்டு பேசக்கூடியவை தான் அதிகம்...தங்களால் நியாயம் வழங்ககூடிய அல்லது வாதாட வாய்ப்பிருக்க கூடிய செய்திகளையே அதிகம் விவாதிக்கிறார்கள்...
   
பொருளாதாரம் பற்றியோ ,அரசின் நடவடிக்கைகளால் ஏற்படும்  வேலைவாய்ப்புகள் குறித்தோ  ,வருவாய் வாய்ப்புகள்
பற்றியெல்லாம் சிந்தித்து வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை
வெறும் நான்கு சதவீதமாக தான் இருக்கும் மீதி இருக்ககூடிய தொன்னூற்றாரு சதவீதம் நபர்கள் அது பற்றிய அன்றாட புரிதல்கள் இல்லாதவர்கள் அவர்கள் யார் தங்களை ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள்....
இவர்களை தங்களுக்கு தகுந்தார் போல் மதம் ,சாதி ,குடி இப்படி ஏதாவது ஒன்றின் சிந்தனை மழுங்கடிக்ககூடிய பக்கங்களின் பின் நகர்த்தி விட்டு தங்கள் காரியதனங்களை அரசியல்வாதிகள் சாதித்துக் கொள்வார்கள்...அதற்கென்றே இணையதளத்தில் ஆதரவான பக்கங்களும் எண்ணிக்கைக்கு அதிகமாக இயங்கி கொண்டு இருக்கதான் செய்கின்றன...

    கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் தருவாயில்
படேல் க்கு அத்தனை ஆயிரம் கோடியில் சிலை தேவையா என்று எதிர்கட்சிகள் கேட்பார்கள்...அதற்கு ஆளும் தரப்பின் படேல் இரும்பு மனிதர் அவர் இல்லையென்றால் இந்திய ஒன்றியம் இல்லையென்று பதில் சொல்லி இந்த கேள்விகளை இடக்கையில் புறம் தள்ளி விட்டு வேறு ஒன்றிற்கு நகர்ந்துவிடுவார்கள்...ரிசர்வ் என்ற வார்த்தைக்கு இருப்பு என்று அர்த்தம் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் எத்தனையோ இடர்பாடுகளின் பொழுதும் கைவைக்கபடாத ரிசர்வ் பேங்க் இருப்பு தொகை இலட்சம் கோடி அரசிற்கு என்று எடுத்துக் கொள்ளப்பட்டது..இந்த பேரிடர் காலத்தில் அதை பற்றிய விவாதங்கள் ,சரி கேள்விகள் அதிகம் வெளிவராது...
இதுதான் அரசியல்...

    இந்த அரசியல்வாதிகளுக்கு எதை லைம்லைட்டில் வைக்க வேண்டும் எவற்றை ப்ளாக்ஹோல் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கின்றன..மக்களுக்கு மாற்றம் தரக்கூடிய
இந்த இணைய யுகத்திற்கு தகுந்த மாதிரியான தெளிவுகள் புகுத்தபட வேண்டும்...
அதற்கு அந்த ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க தெரிந்த எதன் நிமித்தமும்  சமரசம் செய்து கொள்ளாத நான்கு சதவீதம் நபர்கள் மக்களுடன் களத்திற்கு வர வேண்டும்...

#இரகுநாத்பழனிச்சாமி
  

ஆசிரியர்

     நல்ல உளவியியலாளர்களால் நல் ஆசிரியர்களாக சிறக்க முடியும்.....மருத்துவம் தவிர்த்து ஆசிரியப் பணிக்குரிய கல்வியியல் துறையில் மட்டுமே மனித மனங்கள்  கையாள்வது குறித்து தனிபாடம் நடத்தபடுகின்றது....
இதன் உள்ளார்ந்த அர்த்தங்களை உற்று நோக்கினால் அதன் முக்கியத்துவமும் ஆசிரிய பணியின் மதிப்பீடும் நமக்கு விளங்கும்....பெற்றோர்களும் ,
ஆசிரிய பெருந்தகைகளும் தான் கற்கும் பருவத்தில் அதிகம் அவர்களுடன் பயணிப்பவர்கள்...
பெரும்பாலுமான அவர்களின் நடவடிக்கைகளும்,
உரையாடல்களையும் உட்கிரகித்து அதன்
கலவையாகவே சமூகத்தின் மனிதனாக பரிணமிக்கின்றான்...எனக்கு தெரிந்த சில நிகழ்வுகளை பதிவிடுவதன் வழியாக நீரில் எழும் குமிழ்களாக சில தெளிவுகள் வெளிப்படலாம்...அதன் வழியாக நானும் கற்றடைந்து கொள்ளலாம்....

   ஆசிரியர் பாடம் நடத்தும் நுணுக்கங்களின் வழியாக வகுப்பில்  வெறும் பகுதி மாணவர்களை மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியும்..மாறாக அவரின் பிரச்சனைகளை கையாளும் நுட்பங்களின் வழியாக தான் அணைவரின் கவன ஈர்ப்பையும் பெற முடியும்.......
மாணவர்களை கடுமையான தண்டனைகள் மூலமாக திருத்திவிடலாம் என்பது பற்றிய வாதம் அதிகமாக எழும் ..ஆனால் அவை முழுமையும் உண்மைக்பு புறம்பானது..கடுமையான தண்டனைகள் தான் தவறுகளை குறைக்கும் என்றால் வதைமுகாம்களும் ,
சிறைச்சாலைகளும் எண்ணிக்கையில் குறைந்திருக்க வேண்டுமே தவிர புதிது புதிதாக உற்பத்தி செய்யபட்டிருக்க வேண்டிய தேவை கிடையாது..மாறாக பெருகிவரும் குற்றங்களுக்கான காரணம் சக மனிதர்களுக்கிடையேயான உரையாடல் குறைந்து வருகின்றது என்பதே உண்மை....

   சில பிரச்சனைகள் உடனடியாக பேசினால் தீர்வு..சிலவற்றை சிறிது நேரம் கழித்து ஆலோசித்தால் தீர்வு..சிலதை மௌனத்தால் நீர்த்துப் போகச் செய்வதே தீர்வு..என் பணி நிமித்தமாக உயர்நிலை பள்ளி வரை சென்றிருந்தேன்..அங்கு தலைமையாசிரியர் அறையில் மூன்று மாணவர்கள் வேகமாக வந்து புகார் ஒன்றை வாசித்தனர்..அம்மா , வகுப்பில் உள்ள அந்த பெண் என்னை காதலிப்பதாக எல்லாரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார்.. உடனே தலைமையாசிரியை முகத்தில் எந்தவிதமான அதிருப்தியும் காட்டாமல் அம்மாட்ட சொல்லிட்டைல ப்பா நான் பாத்துக்கரேன் கிளம்புங்கள்..என்றார்...

   எனக்கு ஆச்சர்யமா இருந்தஇல்லது...நண்பனிடம் கேட்டேன்...என்ன அவுங்க கூப்ட்டு கண்டிக்கவாவது செய்திருக்கலாமே என்று...அதற்கு அவன் எல்லாப் பிரச்சனகளும் நிதானமாக தான் கையாளுவார்கள்..கோவப்பட்டு தண்டனைகள் கொடுத்தும் என்னவாக போகிறது என்பார்..நிறய பேசுவார்கள்..என்றான்..

  பிறகு நானும் யோசித்தேன் எட்டாவது படிக்கின்ற மாணவன் தனக்கு இன்னும் புலப்படாத வார்த்தை ஒன்றை உச்சரிக்கிறான்..அதை பெரிய புகாராக எண்ணிக் கொண்டு அந்த சிறுமியை அழைத்து பாலியல் பற்றி பாடம் நடத்தி தவறென்று காயப்படுத்தி குற்ற உணர்வை உள்ளாக்க வேண்டிய அவசியமில்லை என்பதாகவே மனம்..சிந்தித்தது..இந்த பிரச்சனைக்கு நான் பாத்துக்கரேன் அடுத்தது போதுமான கண்காணிப்பு ஒன்றே போதும்...என்பதே சரி

    ஏதோ ஒருவிதத்தில் நம்மை சீண்டிக் கொண்டிருப்பார்கள் அதில் களிப்படைவதை மனம் விரும்பும்..மாணவர் மனம் ஆசிரியர்களிடம் விரும்புவது எப்பொழுதும் எதிர்வினையை தான் ..அதை ஆற்றாமல் இருப்பதில் தான் நம் வெற்றி மீதமிருக்கிறது...மாணவர்களால் நம் முடிவுகளை எப்பொழுதுமே தீர்மானிக்க முடியாததில்  இருக்கின்றது நம் திறன்...   தொடர் உரையாடல் மூலமாக மாணவர் மனங்களின் அழுகல்களை நீர்த்து போகச் செய்ய முடியும்.. தொடர்ந்து பேசுவோம்

#இரகுநாத்பழனிச்சாமி

காவல்துறை

கண்ணியமிகுந்த காவல் துறை அதிகாரிகளே,
உங்களை வெறுப்பதற்கு முதலில்
என்னை மனித்துக் கொள்ளுங்கள்...உங்கள் மீது எனக்கு துளியளவும் அச்சமில்லை
அதேசமயம் புலங்காத வீட்டின் ஒற்றடையாக வெறுப்பு மண்டிக்கிடக்கிறது... அதிகாரமும் ,பணமும் அற்ற மிகச் சாதாரணமான என்னால் அதை தவிர வேறு ஒன்றை செய்யவும் இயலாது...
     விபத்தில் அடிபட்டு அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற நிலையில் தன்னிலை மறந்து திரிந்து கொண்டிருந்த என்னிடமும் ,அம்மாவிடமும் கூட்டத்திலிருந்து விலக்கி நைச்சர்யமாக காதருகே கிசுகிசுத்து மயங்கி விழுந்து  இறந்ததாக எழுதி எங்களிடமே கையெழுத்து பெற்று சென்ற அக்கிரமம் அரங்கேறியது.....உடற்கூறு சோதனையில் மூளையில் காயம்பட்டதாகவும் தலைக் காயம் தான் மரணத்திற்கு காரணமாக முடிவு வந்த பின்பும் எங்களால் அதை வைத்து ஒன்றும் செய்ய  முடியவில்லை..என் அப்பாவின் மரணம் எதன் பொருட்டு என்று எங்கள் ஒருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை....
எங்களிடம் எழுதி
வாங்கியது தான் முதல் தகவல் அறிக்கை என்றும் அதில் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் வாக்குமூலங்களும் என்று பிறகுதான் அறிந்துகொண்டேன்..
எந்தந்த வகைகளில் தங்கள் பணிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிற்கிறதோ
அந்தந்த வார்த்தைகளில் எல்லாம்
அதாவது சக்கரை நோயும் ,சிறுநீரக கல் சிகிச்சை எடுத்ததெல்லாம் கோர்த்து எழுதி கொண்டு ஒருவாயாக குற்றத்தை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்தி காவல்துறையினர் விலகிக் கொண்டார்கள்...காவலர் சமூகம் முழுக்க முழுக்க சுயநலம் கொண்டவர்களால் நிரம்பி கிடக்கிறது...
    அதிகார படிநிலையில் உள்ள காவல்துறையில் ஒவ்வொருவருமே தங்கள் கீழ்நிலையில் உள்ளவர்களை அடிமை மனப்பான்மையில் வழிநடத்துகிறார்கள்...ஆய்வாளர்க்கு ,உதவி ஆய்வாளர்,அவருக்கு ஏட்டு ,ஏட்டுக்கு புதிதாய் பணி அமர்ந்தவர் இவர்கள் எல்லாருக்குமாய் சேர்த்து அதிகாரமற்ற  தினக் கூலிகளும் ,பயத்தை கக்கத்தில் சுமந்து திரியும்
நடுத்தர வர்க்கமும் இவர்களின் இலக்கு..இவர்களை மட்டுமே உங்களால் ஒருமையில் அழைத்து விட முடியும்......
சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலயே இருக்கின்ற பொருளாதார நிலையில் மேம்பட்டு இருக்கிறவர்களிடம் விரல் அசைவை கூட காவலர்களால் காட்டிவிட முடியாது..
    நானும் தவறின் பொருட்டு காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு கணவன் மனைவி பிரச்சனையாக மத்தியஸ்தரம் நடந்து கொண்டிருந்தது...நான் அங்கு பணிபுரியும் எழுத்தரிடம்
என் முகவரியை பதிவு செய்வதற்காக காத்திருந்தேன்.....எனக்கு முன்னதாக ஒருவர் கையை கட்டிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுக் கொண்டு
தன் இருப்பிடம் பற்றி  சொல்லிக் கொண்டிருந்தார்....அடுத்ததாக நான் வெகு  இயல்பாக என்னை பற்றிய தகவல்களை கூறிக் கொண்டிருந்தேன்..அவை அவருக்கு ஒரு விதமான அவமதிப்பாக தோன்றியிருக்க வேண்டும்..வார்த்தைக்கு வார்த்தை என்னிடம் சார் மற்றும் கைகட்டலும் எதிர்பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன்....இதனால் இரண்டு முறை வெளியே செல்ல முற்படும் பொழுது அவன கூப்டு ,அவன கூப்டு என்று ஒருமையில் கூப்பிட்டு சுய இன்பம் பெற்றுக் கொண்டார்...
குழந்தைகளோடு நின்றிருந்த தம்பதியர்களை  காவல் துறை ஆய்வாளர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்....அவர்களை நீ ,வா என்று ஏகமாக பேசிக் கொண்டிருந்தார்..இன்னும் சொல்லப் போனால் அக்கிரமான வார்த்தைகளை வசைமழையாக பொழிந்துக் கொண்டிருந்தார்...உண்மையில் அந்த வார்த்தைகளை இந்த இடத்தில் பதிவிட முடியவில்லை...யாராக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு அப்பா தான் கதாநாயகன்...குழந்தைகள் முன்னிலையில் இனி அந்த முகம் எவ்வாறு எதிர்கொள்ளும்...பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்...என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை முனகிக் கொண்டே நகரத்தான்  முடிந்தது...ஏன் பெரியவர்கள் எக்காரணம் கொண்டும் காவல்நிலையத்தில்
கால் வைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்கள் என்று புரிந்தது..ஆனாலும் எனக்கு தெரிந்து சில நல்லவர்களும் அத்தி பூத்தாற்போல் காணக் கிடைக்கிறார்கள்..தன் அடையாள அட்டையை எதன் பொருட்டும் பயன்படுத்த நினைக்காத நண்பன், அப்பா என்று அழைத்த ஒரு காரணத்திற்காக அன்பின் பொருட்டு அக்கரையாய் பேசும் காவல் ஆய்வாளரையும் அறிந்திருக்கிறேன்...இதன் பொருள் அவர்கள் பணி பொறுப்பற்றவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்த மாண்புமிகுக்கள்...

சட்டம் மக்களை காக்க
காவலர்கள் மக்களை  நல்வழிப்படுத்த ,அதிகாரம் கொண்டு அடிமைப் படுத்தவோ அடி கொடுக்கவோ அல்ல....

#இரகுநாத்பழனிச்சாமி

Wednesday, 1 April 2020

வீடற்றவனின் நிர்வாணம்


   நிர்வாணம் பொதுவாக  நாகரீகத்தின் அச்சோடு ஒட்டப்பட்டு மனித தோற்றத்தின்
படோடாபமாக சில நேரங்களில் ஆடைகளின் பின்னல் வழியே  மதிப்புக்குரியவர்களாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது....
கிழிந்த உடைகளை அணிந்து கொள்வதிலும் ,ஒருவேளை மறந்து போயி பூட்ட மறந்திருக்கும்
அவிழ்ப்பானையும் சுட்டிக் காட்டுபவர்களிடம் பெரும்பாலும் எனக்கு கூச்ச உணர்வு தோன்றியதில்லை மாறாக சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து தான் பழகியிருக்கிறேன்....

    நான் விபரம் அறிந்து இருபத்தைந்து வருடங்கள் வாடகை வீட்டில் ஆறுக்கு  ஆறு அறையில் நானும் என் குடும்பமுமாக நால்வரும் அதற்குள்ளாகவே புலங்கியிருக்கிறோம்..காலையில் பள்ளி செல்லும் நெருக்கடி ,பணிக்கு ஆயத்தமாகும் அவசரம் தந்த  சூழலால் உடுப்பு  மாற்ற உடுத்த அந்த ஒரே அறையின் சந்திப்புகள் தவிர்க்க முடியாதவை...கழிப்பறைகள் இல்லாத  தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட தீக்குச்சியாய் நெருக்கி ஒட்டப்பட்ட வீடுகள்...குறிப்பிட்ட வயது வரும் வரை காலை கடன்கள் சுற்றி ஓடிய சாக்கடையில் தான் பெரும்பாலான நிர்வாணங்கள் அந்த குடியிருப்பில் வாழ்ந்த பெண்களின் காட்சி படிமங்கள் தான்...
   
      எதை பெரிதாக போற்றுகிறமோ அதை துட்சமாக நினைக்கும் மனப்பான்மை இயல்பாகவே உருவானதால் கூச்ச உணர்வு என்பது எனக்கு மழுங்கடிக்கப்பட்டிருந்தது....
குறிப்பிட்ட வயதிற்கு பின்பாக கரடு தேடி ஓடிய பொழுதும் எனக்கு முன்பாக அங்கு நூறு நிர்வாணங்கள் சூழ்ந்திருக்கும்..அதனால் அரைமேனியோ ,திறந்த மேனியோ என் கண்களை சுழிக்கச் செய்ததில்லை....

     வீடற்றவனின் மனநிலை வெறுமையான உள்ளீடற்ற வதைகள்..ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித அகசிக்கல்களின் முடிச்சுகளில் சுழன்று கொண்டு இருப்பார்கள்...எங்கு சென்று திரும்பி வந்தாலும் அடைவதற்கு  கூடு என்று ஒன்று இருந்தாக வேண்டும்.. அதை என் அப்பா எங்களுக்கு இறுதியாக அளித்து சென்றிருக்கிறார்...அவருக்கு நாள்தோறும் எங்களின் வேண்டுதலுடன் கூடிய நன்றிகள்...
  வீடற்றவனின் குரல் குமுறல்கள் நிறைந்தது.....

#இரகுநாத்பழனிச்சாமி