Thursday, 19 December 2019

குடியுரிமை சட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முழுக்க முழுக்க இந்திய இறையாண்மைக்கு எதிரானது....மதச்சார்பற்ற நாடு என்ற கூற்றுக்கு எதிர் திசையில் பொதுதன்மையை மழுங்கடிக்க செய்யும் முயற்சி...குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அகதிகளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஆறு மதங்களை புதிதாகவும் ,அவர்கள் இருப்பிற்கான ஆண்டுகள் பதினொன்றிலிருந்து ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது...இதனை முதன்மையாக காட்டிக் கொண்டு இந்தியாவில் இந்துக்களுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதத்தினரை விலக்கியிருக்கும் கருப்புப் பக்கத்தை பூசி மொழுகி கொண்டிருக்கிறார்கள்......
   மக்களை மனிதநேயத்தின் அடிப்படையில் அணுகுவதே ஆட்சியாளர்களின் பொறுப்பாக இருக்கும் ...உலகநாடுகள் அனைத்துமே அகதிகள் என்ற பெயரில் உளவியல் ரீதியாக பாதிக்கும் வதை  முகாம்களையே நடத்திக் கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.. அமெரிக்கா முதல் ஆஸ்த்ரேலியா வரை கருப்பு பக்கங்களையே வைத்திருக்கிறார்கள்...
அகதி என்பவர் யார் என்பதை நாம் உற்று நோக்கியாக வேண்டும்..நேற்று வரை நம்மை போல் உணவு உண்டு ,உடை உடுத்தி இயல்பாய் பயணம் செய்து கொண்டிருந்தவர்...ஒரு போர்,ஒரு கலவரம் அவரை உடைமைகளை இழந்து ,உறவுகளை கைவிட்டு ,உயிர்க்கு பயந்து எல்லை தாண்ட செய்து அகதி என்ற அடையாளம் கொடுத்திருக்கின்றது...இதன் பொருள் அச்சுறுத்தல் அல்ல ..நாளை எதன்பொருட்டும் நமக்கும் நிகழலாம் என்ற அக்கறையான எச்சரிக்கை மட்டுமே!!!
இஸ்ரேலால் எழுப்பபடும் சுவர்களால் சொந்த நிலப்பரப்பிலயே அகதிகளாக்கபடும் பாலஷ்தீனர்கள்,ஆப்ரிக்காவில் புருடீனில் இன சண்டையால் விரட்டபடும் சிறுபான்மை மக்கள் ,ஈராக்கில் அமெரிக்காவால் ஒடுக்கபடும் முஸ்லீம்கள்..சிரியாவில் ஐஎஷ்ஜ பயங்கரவாதத்தால் தப்பி ஓடும் சாதாரண குடிகள்,பர்மாவில் குறிவைக்கபடும் ரோஹிங்கயா முஸ்லீம்கள்,ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பாதிக்கபடும் குடிகள்,இலங்கையில் அழிக்கப்படும் தமிழர்கள் என உலகம் பல அகதிகளை உருவாக்கி கொண்டிருக்கின்றது...பொருளாதார வளர்ச்சி என்ற ஆக்டோபஷ் கரம் மெல்ல மெல்ல மனிதநேயத்தை கபளிகரம் செய்து கொண்டிருக்கிறது..இந்த துன்பகரமான செயல்களில் அமெரிக்கா நாக்கின் தீண்டுதல் இல்லாமல் இல்லை ..தலிபான்களை ஒழிப்பதாக ஆப்கானிஷ்தானிலும்,ஆயுத தளவாடங்களை அழிப்பதாக ஈராக்கிலும்,ஐஎஷ்ஜ பயங்கரவாதிகளை வதம் செய்வதாக சிரியாவிலும், பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு முழு ஒத்துழைப்புடனும் அகதிகளை உருவாக்குவதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா என்னும் வந்தேறிகளால் ஆன வல்லரசு....
   அருகாமையில் உள்ள ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் மத ரீதியாக மக்கள் துன்புறுத்தபடுவதில்லை என்ற காரணத்தைக் கொண்டு இஸ்லாமியர் மதம் இணைக்கபடவில்லை என்ற காரணம் கூறுகின்றனர்...இதன் பொருள் இஸ்லாமியர் இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்கள் அல்லது உங்கள் பிறப்பிடம் இதுவல்ல என்று நிறுவ நினைக்கும் முயற்சி தான்....
   ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எல்லாம் ஒற்றை மைய மதம் நோக்கி அழைத்து செல்லும் செயல்களாகவே இருக்கின்றன...தன் ஒவ்வொரு நடவடிக்கையின் வாயிலாக சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வெறுப்பு அரசியலை வளர்க்கும் முயற்சியே ஆகும்...பெரும்பான்மை என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் குறிமுள்ளை பயன்படுத்தி தன் பக்கமான சாய்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் 44% வாக்குகள் பெற்று பெரும்பான்மையான அதாவது 66% மக்களுக்கு எதிரான நிலைபாட்டை ஒவ்வொன்றிலும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்...உண்மையான பெரும்பான்மை மனிதம் அரியணை ஏறும் பொழுது எல்லாம் எல்லோருக்குமாய் மாறும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது...
  இறுதியாக நான் சொல்ல விரும்புவது அகதி என்ற முகம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கின்றது...அதன் பொருள் அச்சம் ஏற்படுத்தல் அல்ல..தற்பொழுதிலிருந்து வரும் காலம் வரை மட்டும் அது எப்பொழுதும் உறைந்திருக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட...மனிதம் காப்போம் ,மனிதம் வளர்ப்போம்
#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment