#அரசியல் பயில்
அரசியல் ஈடுபடுவதற்கு ஏதாவதொரு கட்சி ,கொள்கையின் பொருட்டு உங்களை பிணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை....
எதன்பொருட்டும் மாறாத கொள்கை பிடிப்போ , தனி நபர் வழிபாடோ இல்லாத நபராக இருந்தால் போதுமானது......உலகம் எப்பொழுதும் சீர்திருத்தத்துக்கு உட்பட்டது என்ற பெரியாரின் கூற்றோடு பொருந்திக் கொண்டு இயங்க வேண்டும்....அரசியல் எப்பொழுதும் அதன் மகத்துவத்தை உள்ளடக்கி இருக்க தான் செய்கிறது..அரசியல்வாதிகளால் தான் அதன் மேன்மை தன்மை சிதைவுண்டு அதன் கோரபக்கத்தை மட்டும் சுவிகரீத்து பெரும்பான்மையான மக்கள் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு போடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர்.....
மக்கள் அரசியல் அதன் பரிமாணங்களை கடந்த இருபது ஆண்டுகளில் முற்றிலும் மாறியிருக்கிறது....
மக்கள் மத்தியில் கொள்கைகளும் ,தத்துவங்கள் பற்றியெல்லாம் எந்த கவலைகளும் தேவையில்லை...சமூகத்தில் புலங்கி கொண்டிருக்கும் இணையதளம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரத்தில் கச்சாப் பொருளாக எவைஎவை விமர்சிக்கப்படுகிறதோ அந்தந்த சமயங்களில் மக்களின் பிரதிபலிப்புகளாக ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தேர்தல்களில் மாறும்...இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பெரிய வரி சுரண்டலை பற்றியோ ,அரசியல் கொலைகளை பற்றியோ மற்றும் பணப்பரிமாற்றம் பற்றியெல்லாம் விவாதங்கள் ,உரையாடல்கள் நிகழாது அதன் உள்ளடக்கம் மக்கள் செய்திகளை விட அவர்கள் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளையே விரும்புகிறார்கள்...
இப்பொழுது அதிகம் பேசப்பட கூடிய செய்திகள் எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள்...
பிரியாணிக்கான சண்டை பற்றியும் ,கடப்பா கல்லை திருடிவிட்டு சென்றார்கள் ,காலில் விழுந்து அதிகாரத்திற்கு வந்தார் ,எதிர்கட்சி தலைவர் சட்டையை கிழித்துக் கொண்டாரென்று அனைவராலும் தீர்ப்பு சொல்லக்கூடிய தாங்கள் சரியென்று நிற்க கூடிய பக்கம் தங்களை அமர்த்திக் கொண்டு பேசக்கூடியவை தான் அதிகம்...தங்களால் நியாயம் வழங்ககூடிய அல்லது வாதாட வாய்ப்பிருக்க கூடிய செய்திகளையே அதிகம் விவாதிக்கிறார்கள்...
பொருளாதாரம் பற்றியோ ,அரசின் நடவடிக்கைகளால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்தோ ,வருவாய் வாய்ப்புகள்
பற்றியெல்லாம் சிந்தித்து வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை
வெறும் நான்கு சதவீதமாக தான் இருக்கும் மீதி இருக்ககூடிய தொன்னூற்றாரு சதவீதம் நபர்கள் அது பற்றிய அன்றாட புரிதல்கள் இல்லாதவர்கள் அவர்கள் யார் தங்களை ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள்....
இவர்களை தங்களுக்கு தகுந்தார் போல் மதம் ,சாதி ,குடி இப்படி ஏதாவது ஒன்றின் சிந்தனை மழுங்கடிக்ககூடிய பக்கங்களின் பின் நகர்த்தி விட்டு தங்கள் காரியதனங்களை அரசியல்வாதிகள் சாதித்துக் கொள்வார்கள்...அதற்கென்றே இணையதளத்தில் ஆதரவான பக்கங்களும் எண்ணிக்கைக்கு அதிகமாக இயங்கி கொண்டு இருக்கதான் செய்கின்றன...
கொரானாவில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் தருவாயில்
படேல் க்கு அத்தனை ஆயிரம் கோடியில் சிலை தேவையா என்று எதிர்கட்சிகள் கேட்பார்கள்...அதற்கு ஆளும் தரப்பின் படேல் இரும்பு மனிதர் அவர் இல்லையென்றால் இந்திய ஒன்றியம் இல்லையென்று பதில் சொல்லி இந்த கேள்விகளை இடக்கையில் புறம் தள்ளி விட்டு வேறு ஒன்றிற்கு நகர்ந்துவிடுவார்கள்...ரிசர்வ் என்ற வார்த்தைக்கு இருப்பு என்று அர்த்தம் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் எத்தனையோ இடர்பாடுகளின் பொழுதும் கைவைக்கபடாத ரிசர்வ் பேங்க் இருப்பு தொகை இலட்சம் கோடி அரசிற்கு என்று எடுத்துக் கொள்ளப்பட்டது..இந்த பேரிடர் காலத்தில் அதை பற்றிய விவாதங்கள் ,சரி கேள்விகள் அதிகம் வெளிவராது...
இதுதான் அரசியல்...
இந்த அரசியல்வாதிகளுக்கு எதை லைம்லைட்டில் வைக்க வேண்டும் எவற்றை ப்ளாக்ஹோல் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கின்றன..மக்களுக்கு மாற்றம் தரக்கூடிய
இந்த இணைய யுகத்திற்கு தகுந்த மாதிரியான தெளிவுகள் புகுத்தபட வேண்டும்...
அதற்கு அந்த ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க தெரிந்த எதன் நிமித்தமும் சமரசம் செய்து கொள்ளாத நான்கு சதவீதம் நபர்கள் மக்களுடன் களத்திற்கு வர வேண்டும்...
#இரகுநாத்பழனிச்சாமி