Monday, 30 December 2019

விநாடி கதைகள் 2

பிச்சைகாரன்
   திருடன் ஒருவன் திருட்டுக் குற்றத்திற்கா தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்...
தப்பிப்பதற்காக பிச்சைகாரன் வேடம் புரிந்தான்..

  வேடம் போட்டவன் அதன் சொகுசை அறிந்து கொண்டு பிச்சை காரனாகவே மாறி விட்டான்..

அதிர்ஷ்டம்
   ஆசாரி வேலை செய்யும் சுந்தரத்திற்கு பேசிய கூலியை விட அதிகமாகவே கிடைத்தது..வீட்டில் உள்ளவர்களிடம் அதிர்ஷ்டம் வந்தது என்றார்..
அடுத்தநாள் அவர் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு பத்தாயிரம் பரிசு அடித்திருந்தது..அதிர்ஷ்டம் வந்தது என்றார்

இரண்டு நாட்கள் வீட்டிலயே வெறுமனே முடங்கி கிடந்தார்..தெரிந்தவர்கள் கூட தேடி வரவில்லை..

வரப்பு
   கந்தன் தன் உறவுகாரனுக்கும் ,தனக்குமான பொது வரப்பை கொஞ்சம்  கொஞ்சமாக வெட்டி தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டிருந்தான்...

  அரசாங்கம் அவன் அனுமதியின்றியே மீத்தேன் எடுப்பதாக கூறி நிலத்தை கையகபடுத்திக் கொண்டது..

உறவு
  முதலிரவு அன்றே அவளின் உடல் மேல் முரட்டு தனமாக இயங்க ஆரம்பித்தான்..அவளின் அழுகையை பொருட்படுத்தவில்லை..

   அதன்பிறகான ஒவ்வொரு இரவிலும் அவள் பொம்மையாகி போனாள்...

ஓட்டு
  பெண்களுக்கு அரசியல் தெரியாது ,அரசியல் பேசக்கூடாது என்ற பிற்போக்கு வாதம் நிறைந்த வீட்டில் அவளுடைய கணவன் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டான்...

தேர்தல் நாளன்று தன் கணவனுக்கு ஓட்டு போடாமல் தனக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டு வந்தார்..

ஆம்புலன்ஸ்
  சுரேஷ் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆனதிலிருந்து விபத்து காலங்களில் உயிரை காப்பாற்ற அவர் எடுத்த வேகம் அந்த ஊர் முழுக்க பிரபலம்...பல முகம் தெரியாதவர்களை சரியான நேரத்தில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்...

   விபத்தில் சிக்கியது தன் மகள் என்று தெரிந்தவுடன் அவரால் வண்டியை இயக்க முடியவில்லை

No comments:

Post a Comment