Wednesday, 1 January 2020

விநாடி கதைகள் 3

நகை
     தன் வீட்டின் முன் தங்க நகை ஒன்றை விடியற்காலையில் கண்ணன் கண்டெடுத்தார் ...
சிறிது நேரம் கழித்து பதறியடுத்து அவரின் வீட்டின் அருகே பெண் ஒருவர் நகையை தேடிக் கொண்டிருந்தார்..இவர்
காணாதது போல் இருந்துவிட்டார்...

அன்றிலிருந்து ஒரு வாரம் இரவு
உறக்கம் இல்லை.....காலையில் தேடிச் சென்று நகையை கொடுத்த பிறகு மதியமே உறங்க ஆரம்பித்துவிட்டார்..

இலை
பந்தியில் பரிமாறப்பட்ட இலையில் சாம்பார் வர தாமதமாகவும் கோவத்துடன் இலையை மடக்கி வைத்துவிட்டார்
ரமேஷ்

வெளியே வெற்று உடம்போடு எச்சில் இலையில் எதோ தேடிக் கொண்டிருந்தார் ஒருவர்

அதை பார்த்து நிதானித்தவர் அடுத்த நொடி உள்ளே சென்று இலையை விரித்து சாம்பாருக்காக காத்திருந்தார்

லிப்ட்
   போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் தனது வண்டியில் போய் கொண்டிருந்தார் ரவி...இடையில் ஒருவர் லிப்ட் கேட்டு நிற்கவும் வண்டியில் ஏற்றிக் கொண்டார்....

சிறிது நேரத்தில் வண்டி சக்கரம் பஞ்சர் ஆனது...வண்டியிருந்து இறங்கி நிற்கும் பொழுது சொல்லாமல் கூட உதவி கேட்டு வண்டியில் வந்தவர் வேறொரு வண்டியில் லிப்ட் கேட்டு சென்றார்...

வேப்பமர ஸ்டாப்
   அந்த ஊருக்கு அடையாளமாக இருந்தது வேப்பமரம்...அந்த வழியில் பயணிப்பவர்கள் வேப்பமர ஸ்டாப் என்று சொல்லி தான் வண்டியிலிருந்து இறங்கி கொள்வார்கள்..

சாலையை அகலப்படுத்த அந்த மரத்தை வெட்ட அரசாங்க
முயற்சித்த பொழுது ஊரே சேர்ந்து எதிப்பு காட்டியது...

   அரசாங்கம் காவலர்களை வைத்துக் கொண்டு மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்திக் கொண்டது...ஸ்டாப்பிங் பெயர் மட்டும் மாறவில்லை வேப்பமர ஸ்டாப்...

தோழர்
அந்த பேருந்தில் கைதட்டல் சத்தம் கேட்ட உடனே எல்லோரும் திரும்பிக் கொண்டார்கள்...சிலர் கண்களை வெறுமனே மூடிக் கொண்டார்கள்

கார்த்தியிடம் கைதட்டி கொண்டே வந்த திருநங்கையிடம் ,தோழர் இப்போது தான் வேறு ஒருவருக்கு  காசு கொடுத்தேன் என்றார்..

   அடுத்து யாரிடமும் காசு கேட்காமல் சிரித்துக் கொண்டே இறங்கிவிட்டார் தான் முதன்முறையாக கேட்ட தோழர் என்ற வார்த்தையால்...

புத்தகம்
தன் எழுத்துகளால் ஆன வார்த்தைகளை புத்தகமாக்க விரும்பிய எழுத்தாளர் அந்த பிரபல பதிப்பகத்தாரிடம் தன் பிரதியை காண்பித்து மதீப்பீடு செய்து தருமாறு காத்துக் கொண்டிருந்தார்..

அந்த மேலாளர் புத்தகம் பதிக்க நீங்கள் பணம் தந்தாக வேண்டும் என்றார்...

எழுத்தாளர் கூறிய படிச்சு பார்த்து மதிப்பீடு பண்ணிக் கொடுங்கள் என்ற வார்த்தையை காதில் வாங்கி கொள்ளாமல் 'நன்றாக  இருந்தாலும் பணம் தந்தாக வேண்டும் ' என்றார்..

எழுத்தாளர் மௌனமாக கிளம்பினார்....

நாய்க்குட்டி
   வீட்டிற்கு வந்த விருந்தாளியை வளர்ப்பு நாய் கடித்துவிட்டதற்காக ராம் நாயை அடி அடியென அடித்துவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்..

மாலை வீடு திரும்பிய அவனிடம் எப்போதும் போல் வாஞ்சையாக வாலாட்டி தொற்றுக்கால் போட்டது...வார்த்தைகள் எதுவும் அற்று அழுக ஆரம்பித்தான்

No comments:

Post a Comment