Friday, 30 November 2018

2.0

2.O திரைப்படம் தமிழ்சமூகம் பெருமைப்படும், கொண்டாட வேண்டிய குடும்பத்தோடு குதூகளிக்க வேண்டிய படம்

எழுத்தாளர் சாருநிவேதாவிற்கு,
    உங்கள் எழுத்துக்களை விரும்பி படிக்கும் வாசகர்களில் ஒருவன் நான்!!!எழுத்தாளர்களை கொண்டாடும் சமூகமே
மனிதத்திற்கும், மதிப்பிற்க்கும் உரிய ஒன்றாகும் அதில் மாற்றுக் கருத்து அல்ல..ஆனால் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தங்களை ரஜினியை போல் கொண்டாட வேண்டும் என்ற வெளிப்பாடே துள்ளி குதிக்கின்றது அதில் தவறும் கூட அல்ல ஆனால் அவருடைய உழைப்பை நீங்கள் ஒவ்வொரு முறையும் மறந்து விடுகிறீர்களோ அல்லது மறுத்து விடுகிறீர்களோ என்ற கேள்வி நீர்குமிழியாய் ஒவ்வொரு முறையும் கொப்பளிக்கின்றது!!! கோடிகளில் சம்பளம் வாங்குபவர்களாக மட்டும் அவர்களை காட்டி சீலேயில் எழுத்தாளர்க்கு இத்தனை சம்பளம், அமைச்சர்களே சந்திக்க காத்து கிடக்க வேண்டும் என்று ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்..நீங்கள் மிஷ்கின் தயாரித்த படத்தில் ஒரு வயலின் காட்சியில் உங்கள் கைவிரல்களை காட்டியதற்கு மட்டும் நீங்கள் பட்ட சிரமங்களையும், உழைப்பையும் கூறி கடைசியில் அந்த காட்சி நான்கு விநாடிகள் வந்துமட்டும் சென்றதையும் சொல்லி வருத்தப்பட்டு இருந்தீர்கள்..அறுபத்தெட்டு வயதில் ஒரு நபர் கயிற்றில் தொங்கி நடிக்க வேண்டிய அவசியம் கோடிகளை மட்டும் எண்ண வேண்டும் என்பதற்காக அல்ல , அதைதாண்டி நல்லதொரு முயற்சி,ரசிகர்களை மகிழ்விக்க,தன் புகழை விலையாய் வைத்து தமிழ்படம் உலகளவில் அடையாளப்பட வேண்டும் என்ற எண்ணம் தான்...
சர்க்காரில் இலவசங்களை எரித்ததை ஏழைகளின் பக்கம் இருந்து சாடிய நீங்கள் , அறுநூறு கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டு அடையாளமாய் சொல்லப்படும் நடிகரின் நடிப்பில் இந்தியாவின் முதன் முறையாக முப்பரிமாண படமெடுக்கும் தமிழ்நாட்டு இயக்குனர் படத்தை வெறும் வார்த்தைகளில் படத்தில் ஒன்றுமில்லை என்று கொச்சைப்படுத்துவது தவறாகா தெரியவில்லயா??? தமிழ் எழுத்து சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று விசனப்படும் நீங்கள் தமிழ்நாட்டு படம் உலகளவில் பேசப்படும் என்பதை உணர மறுப்பது ஆயிரம் டாலர் கேள்வியே!!!! பத்தாயிரம் திரையரங்கில் தமிழ்நாட்டின் தயாரான படம் வெளியாகிறது, தமிழ்நாட்டை தாண்டி பல கோடி பெயர்கள் பார்க்க போகிறார்கள்!!இதை விட தமிழக அடையாளமாக எதை சொல்லிவிட முடியும்... அறிவியலுக்கு மீறிய செய்தியாக குருவி காணமல் போனதையெல்லாம் சொல்லி இருப்பதாக கூறியிருக்கிறீர்கள்..இடையில் பறவைகளுக்காக இரக்கபடுபவர் மனிதர்களை வதைப்பது பற்றி சுட்டி காட்டியிருந்தீர்கள்..அதோடு மட்டுமல்லாமல் சலீம் அலி பறவைக் கறி அசைவ பிரியர் ஆனால் பறவை நேசர் என்றீர்கள்..சாப்பாட்டு மேசை நிறய பறவை கறியை ருசிக்கும் சலீம் அலிக்கு  கைகுலுக்கும் நீங்கள் அற்ப காரணங்களுக்காக எத்தனையோ உயிர்களை கொல்கின்ற மனித மனங்களின் குரூரங்களை எங்களை விட அதிகம் அறிந்தவர் தாங்கள் என்ற முறையில், படத்தில் பறவைகளுக்காகவே தான் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து ,போராடி சக மனிதர்களால் துரத்தப்பட்டு ,அவமதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நபர் மீண்டும் வந்து பறவைக்காக போராடுபவராக காட்டியிருந்தால் ஏற்று கொள்வீர்களா ???அவனுடைய எதிர்மறை ஆற்றல் தான் படத்தில் சுட்டிக்காட்டபடுகிறது..அந்த கதாபத்திரம் மனிதர்களை பழிவாங்குவதே அதன் உச்சபட்ச வில்லதனம்...ரசிகர்களாக சிலர் மட்டும் நடிக்கும் படங்களை மட்டுமே திரையில் பார்க்கும் கூட்டம் அதிகமாயிருக்க ரஜினி போன்ற ஒருவரால் தான் குடும்பங்களை திரைப்படங்களை நோக்கி வரவழைக்க முடிகின்றது!!அதுவும் அவதார்களை இரசித்த கண்கள் குறைவு தான் ஆனால் ரஜினி + சங்கர் என்ற ஆளுமை பெயர்கள்  முப்பரிமாணம் அனுபவத்தை குழந்தைகளோடு கொண்டாடும் வாய்ப்பை தமிழ்நாட்டு படங்களை மட்டுமே பார்க்கும் ஏழைகளுக்கும் வழங்கியிருக்கிறார்கள்... இன்னொன்று நம்மை இந்த தவறான செய்தியின் மூலம் கற்காலத்திற்கே அழைத்து செல்கிறார்கள் என்பது எனக்கு நகைப்புகுரியதாக இருக்கிறது.. ஜியோ,ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டண சலுகை அளித்து எல்லார்கையிலும் தங்கள் இருப்பை வைக்கும் பொழுது அரசின் ஒற்றை நெட்வொர்க் இதை செய்ய முடியாதா???? எதற்கு இத்தனை டவர் கோபுரங்கள்..எத்தனை விவசாய நிலங்களை இந்த டவர் மரம் விழுங்கியிருக்கிறது அறிவீர்களா!!???பறவைகள் நம்மை விட நான்கு மடங்கு அதிகம் ,பூச்சிகள் பத்து மடங்கு அதிகம் என்ற செய்தியும் ,மனிதன் வாழ பறவையும் வாழ வேண்டும் என்ற உண்மை மறுக்கிறீர்களா ?? அப்படியென்றால் சமஸ் எழுதிய யாருடைய எலிகள் நாம் கட்டுரையில் ,பூச்சிகளுக்கா உலகத்தை விட்டு செல்கிறோம் என்ற செய்தியை வாய்ப்பிருந்தால் படியுங்கள்!! இன்னொன்று மின்கம்பங்களில் தயிரியமாக தூரி ஆடிய காகாக்களும் ,குருவிகளையும் நான் அந்த டவர் கோபுரங்களில் கண்டதில்லை!!! ஆன்ட்ராய்டு போனை அடியில் வைத்தால் ஆண்மை தன்மை குறைகிறதென்ற செய்தி இருக்கும் பொழுது முப்பது கிராம் குருவிகளுக்கு அந்த அதிர்வெண்கள் ஏன் பாதிப்பை தராதுவிட்டு விடும்???? சிட்டு குருவிகள் காணாமல் தான் போய்விடுகின்றன!!!

சரி திரைப்படத்திற்கு வருவோம்,
படம் எழுத்து போட ஆரம்பிப்பதே 3டியில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எழுத்துக்கள் எல்லாம் உங்கள் முகத்தை தடவிவிட்டு போகும்!!!எமிஜாக்சன் பக்கத்தில் வர மாறி இருக்கும் கட்டிபிடிக்கிறதா நினைத்து கைய கால நீட்டி அடிவாங்கிடாதீங்க!!
எமிஜாக்சன் மாதிரி ஒரு ரோபோ உருவானால் கடன் வாங்கியாவது
நம்ப ஒண்ணு வீட்ல வாங்கி வச்சுக்கனும்!!!
செல்போன் பறக்கும் பொழுதெல்லாம் உங்களை அறியாமல் அடிக்கடி சட்டைபையை தடவிபார்த்து பத்ரமா இருக்குனு நம்பிக்குவீங்க!!
குண்டு உங்களை நோக்கி தான் வரும் ,பயந்திட வேண்டாம் !!!
நம்ப வில்லன் 2.0 வழக்கம் போல வில்ல தன நடிப்பில் பட்டய கிளப்பீருவாரு!!!
கடைசியா   3.0 நம்பலையெல்லாம் சிரிக்க வச்சுட்டு இன்னொரு தடவ பார்க்கலாம் என்ற எண்ணத்தோட வெளிய அனுப்பிவிடுவார்...

படம் அட்டகாசமான அனுபவம்..

#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment