#பட்டுதுணியும் #பரபரப்பான #நிமிடங்களும்!!!
நண்பன் பாலாஜி திருமணத்தை முடித்துவிட்டு ஒசூரிலிருந்து சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா என்று கன்னிவாடிக்கு நான்,அம்மா ,சரத் மற்றும் கதிர் திரும்பி வந்து கொண்டு இருந்தோம்..ஒசூரில் புறப்பட்ட பேருந்து சன்னலோர பயணத்தில் கடந்து போன மேகங்கள், தவழ்ந்து வந்த காற்று இதனுடன் எங்கள் கிளுகிளுப்பான பேச்சுகளுடன் சிறப்பாய் சேலத்தில் இறக்கிவிட்டது..அடுத்து சேலத்திலிருந்து திண்டுக்கல் பயணம்..என் தம்பி ஒரு பெப்ஸி குளிர்பானம் வைத்திருந்தான், அதை அபகரிப்பதாக அவனை வம்பிழுத்துக்கொண்டு வந்தோம்..எனக்கு பயணத்தில் மின்னல்வெட்டு போல வண்ணங்கள் பற்றிய வாசனை எழுந்தது..!! கருப்பு வண்ணபைகள் கண்ணை காட்டி சிமிட்ட சட்டென பச்சை வண்ண பை எங்கே என்ற கேள்வி எழவே அம்மா பச்சை பை பத்திரமா வச்சு இருக்காய் தானே என்று கேட்க அப்போது ஆரம்பித்த வசைமழை கன்னிவாடி வரும்வரை நிற்கவில்லை..பையை காணவில்லை என்ன முயற்சி செய்யலாம், எப்படி பெறுவது என்ற எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்க நாங்கள் பேசிக் கொள்ளும் பொழுதெல்லாம் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த என் அம்மா எழுந்து நின்று திரும்பி ,உன்னால உபயோகமா ஏதாவது ஆகுதா ??பையை பேருந்தில் விட்டயா இல்ல பேருந்து நிலையத்தில தூக்கிப் போட்டு வன்டியா என கஜா புயலாக தாக்கிக் கொண்டிருந்தார்.. நண்பன் சரத் தன்னுடைய காவல் அதிகாரி மூளையை உபயோகிக்க ஆரம்பித்தான்...அவனுடைய கைபேசியில் உள்ள தொடர்புகளை சரிபார்க்க நல்லவேளையாக சேலத்தில் அவன் நண்பன் ஒருவன் பணிபுரிந்து கொண்டிருந்தான்...அவனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விசயங்களை கூறினான்..அந்த நண்பன் கேள்விகள் தொடுக்க ஆரம்பித்தான்..அந்த பேருந்து எண் என்ன?? தெரியாது என்றோம்....உடனே தம்பி அந்த பயணச்சீட்டை எடுடா அதில் எதும் போட்டு இருக்கிறதா என்று பார்க்க எடுக்க சொன்னான்..எடுத்து கொடுக்க அதில் எந்த பயனுமாக எனக்குத் தெரியாததால் விரக்தியில் காற்றில் பட்டமாய் பறக்கவிட்டுவிட்டேன்...இடையில் அந்த சேலம் நண்பன் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருக்க அதிகாரிகளிடம் விசாரிக்க பேருந்து எண் என்ன??என்று அவர்கள் கேட்க தெரியாது ..அடுத்து எங்க போகப்போகுது ?? தெரியாது என்று பதில்களை அடுக்கி கொண்டிருந்தோம்.. அந்த நண்பன் இறுதியாக பயணச்சீட்டை கேட்டான்..
கட்செவி அஞ்சலில் புகைப்படத்தை எடுத்து அனுப்பிவிடச் சொன்னான்!!!! கதிரும்,சரத்தும் என்னை திரும்பி பார்க்க, நான் தான் அதை பறக்கவிட்டு விட்டேனே !!! என்னை என்ன நினைத்திருப்பான்கள் என்பது அவர்களின் கருவிழியிலயே புரிந்து கொண்டேன்.. இறுதியாக ஒரே யுக்தியாய் அந்த பேருந்தின் கண்ணாடியில் கோவை என்று எழுதப்பட்டு இருந்த்தையும் ,புறப்பட்ட நேரத்தையும் மட்டும் வைத்து அந்த பேருந்தின் எண் கண்டுபிடித்தாகிவிட்டது..ஆனால் அது ஒரு யூகம் தான்!! ஒசூர் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு அந்த பேருந்து விபரங்கள் சரிதானா என்றும் ,கோவை தான் பயணித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டோம்.. இடையில் எனது அம்மா சக பயணியிடம் பேசிக் கொண்டிருப்பது அந்த பயண இரைச்சலிலும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.. ஒருமுறை அம்மா என்னை திரும்பி பார்க்க அந்தகனம் அதுவரை போனால் போகட்டும் என்ற எண்ணத்தில் இருக்க,அம்மாவின் கண்களில் இருந்து வலிந்துவந்த கடல் என்னை துணுக்குற செய்தது!!!!
அந்த பை கிடைக்க வேண்டும் எனக்காக இல்லாவிட்டாலும் அம்மாவின் கண்ணீருக்காக...
பச்சைபை கோவை தான் பயணித்துக் கொண்டிருப்பதாக ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் நாங்களும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தோம்..இடைநிறுத்ததில் என் அம்மாவிடம் போய் சரத் பை கிடைத்துவிடும் என்று போய் சொல்ல சொன்னான்!! என்னிடமெல்லாம் பேசமாட்டார்கள், நீயே போய் சொல் என்றேன்..எனக்கும் வருத்தமா இருக்கு, நம்ப க்ர்ச்ச்ச அனுப்புவோம் என்று என் தம்பியை அனுப்பிவிட்டோம்..!! அவனை அடுத்து இன்னொரு முறை பேச அனுப்ப முயல அவனோ மறுத்துவிட்டான்...அந்த இக்கட்டிலும் சரத் பசிக்கிறது என்று சொல்லி முறுக்கும் ,ரொட்டியும் வாங்கினான்.. திட்டிக் கொண்டே நானும் முறுக்கை நொறுக்கினேன்...பச்சை பையை பெற கோவையில் இருக்கும் தம்பி ரஞ்சித்திடம் சொல்லி வைத்தேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..நான் சொன்ன உடனே அவன் பேருந்து நிலையம் சென்றுவிட்டான்..நாங்களும் திண்டுக்கலை அடைந்துவிட்டோம்..இந்த பேருந்து பயணம் பையை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் விமான பயணமாக மாறி 5.30 மணியில் ஆரம்பித்தது
7.30 மணியில் முடிந்தது.. இனி நானும் என் அம்மாவும் மட்டும் கன்னிவாடிக்கு பயணிக்க வேண்டும்..ரஞ்சித் அந்த பேருந்து 7.30 மணி அளவில் வந்துவிடும் என்றான் ,ஆனால் ஒசூர் அதிகாரிகள் 8.30 மணி என்று கூறியதால் காத்திருந்தேன்..அவனின் தொலைபேசி அழைப்பிற்காக கைபேசியை சுழற்றிக் கொண்டிருந்தேன்..8.00 மணி கன்னிவாடி பேருந்தில் பின் இருக்கையில் என் அம்மா முகத்தில் நூறு சந்திரமுகிகள் ரர சரசுகு ரர ஆடிக்கொண்டிருந்தது.. மணி 8.20 தம்பி ரஞ்சித் அழைத்தான் ..அண்ணா பை எடுத்துட்டேன்!! டேய் பச்சை பை தான ?? ஆமனே நீங்க அம்மா ,மாமா எடுத்த புகைப்படம் இருக்கு ..என்றான்..நிம்மதி பெருமூச்சு காது ,வாய் என எல்லா பக்கங்களிலிருந்தும் வெளியேறியது.. அம்மாவிடம் திரும்பி சொன்னவுடன் கங்காவாக மாறினார்..
அம்மா அழுததற்கான காரணம் அப்பா கடைசியாய் இக்கட்டான சூழ்நிலையில் அண்ணனின் திருமணத்திற்காக அம்மாவிற்கு தேடி எடுத்த பட்டுபுடவை!!!!!!
அன்பானவர் அன்பானவருக்கு கொடுக்கும் எல்லாமும் அவர்களை திரும்ப வந்தேசேரும்..
திருமண குஷியில் இருந்த நண்பன் பாலாஜிக்கு சிறு தொந்தரவை கொடுத்ததற்கு வருத்ததையும்,
அந்த சேலம் நண்பனுக்கும், தம்பி ரஞ்சித்திற்கும் நன்றிகள்
பின்குறிப்பு
அந்த பச்சைபையை அதற்கு முதல்நாளில் ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு ஒசூரையே ஒரு சுற்று சுற்றி தேடிக் கண்டுபிடித்தோம்..
அதே கும்பல் தான்..
#திவாகர் #சரத் #கண்ணன்
#கதிர்
திருமணவாழ்க்கை தித்திக்கட்டும் நண்பா #பாலாஜி #சுகன்யா
மூன்று நாட்கள் உங்கள் இனிமையான நிகழ்வால் நாங்கள் இன்பெனும் கடலில் மூழ்கி முத்தெடுத்தோம்
No comments:
Post a Comment