Sunday, 25 November 2018

மதுவின் மடியில்


#மதுவின் மடியில் 

நண்பன் வெங்கடேஷ் திருமணத்தின் மூலம் பியரின் பிடியிலிருந்து கொரியர் நெப்போலியன் மூலம் குடி என்னும் நதியில் மூழ்கி எழுந்தேன்..தனிநபராக பாட்டுகளை ஒலிக்கவிட்டு போதை என்னும் தன்னிலை மறத்தலில் ஐக்கியமாக முயற்சித்து ஒவ்வொரு முறையும் தோற்று தான் போயிருக்கிறேன்..ஒருமுறை கூட போதையின் பலனை நுகரவில்லை இம்முறையும் அப்படிதான்!!ஆனால் நண்பர் கூட்டத்தோடு அதுவும் என் வாழ்வின் அங்கமாய் நினைப்பவர்களோடு கூடி உரையாடி வயிறு வலிக்க சிரித்து மறக்க முடியாத நாட்களாக மாற்றிவிட்டது இந்த கொரியர் நெப்போலியன்!!! முதலில் நான் குடிக்கமாட்டேன் என்று நினைத்த சுதாகர் ஒரு மிடறு ஊற்றிக் கொடுக்க அவன் கையால் ஆரம்பித்தது மூன்று மீடறோடு நின்றது..நண்பர்கள் சுதீர், பரத் வருகைக்காக நெப்போலியனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியதாகிவிட்டது.. இதற்கு முன்பு வரை எல்லாக் கூட்டத்திலும் ஊறுகாயாக நான் இருந்த இடத்தை இந்த முறை கிருஷ்ணன் சாமிக்கு மாலை போட்டதால் அபகரித்து கொண்டான்...பத்து மணிக்கு ஆறு கார்ல்ஸ் பெர்க்,ஒரு நெப்போலியனையும் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு சுதிர் ,சுதாகர் ,பரத் மற்றும் நான் சங்கமித்தோம்...முதல் குறியாக பரத் பக்கம் வண்டியை திருப்பினான் சுதாகர் ஏன்டா கல்யாணம் ஆனதற்கு பிறகும் ஏன் இப்படி பல பெண்களோடு குழுமிக் கொண்டிருக்கிறாய் என அவன் கூற நீ யோக்கியமா நீயும் தான என பிள்ளையார்சுழி போடப்பட்டது!!நானும் சரக்கடிக்கிறன்ல சும்மா இருந்தா எப்படி என் தங்கச்சி இவனை முழுமையாக நம்புறாடா னு ஒரு போடு போட்டு என் கவலையை பகிர்ந்தேன்..என்ன இருந்தாலும் அவன் தான் என் போர்ன் சைட் அவன் ஒவ்வொரு பெண்ணிடமும் என்ன பண்ணுகிறான் என்பதை கேட்டு கிளுகிளுப்பு அடைந்து கொள்வேன்..கதையை கேட்டுவிட்டு பிறகு அவனுக்கு டேய் இதெல்லாம் தவறு என்று சுட்டிக் காட்டுவேன்..இடை இடையே சுதாகரும், பரத் தும் தொட்டுக்க வைத்திருந்த கோழிக் கறியை நான் மட்டும் அபகரிப்பதை பார்த்து கெட்டவார்த்தையிலயே ஏசினார்கள்..இருந்தாலும் எனக்கு கோழிக்கறி பிடித்தமான உணவென்பதால் அவனுங்க தன் பங்கை பிரித்து பாதுகாத்துக் கொண்டார்கள்..இடைஇடையே கிருஷ்ணன் வேற மாலை போட்டதால நீ தப்பித்துக் கொண்டாய் என்ற செல்ல மிரட்டல் வேறு!! வண்டி இப்படியாக பயணம் செய்து கொண்டிருக்க என் மாப்பிள்ளை பரத்திற்கு திசையை மாற்றுவதும் ,தனக்கு வந்த பந்தை நோபாலாக மாற்றுவதிலும் கில்லாடி என்பதால் தம்பி சுதீரின் திருப்பிவிட்டான்... கிட்டதட்ட அவனிடம் குடிக்கு அடிமையாகதடா என்று சொல்லி ஒரு மணிநேரம் குடித்துக்கொண்டே அவனுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை பற்றி எடுத்து கூறினான் பரத்,சுதாகரோ குடிக்கு பிறகான சாப்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினான்..சுதீர் எதையாவது செய்து ஆட்டையை கலைக்க முயற்சித்து தோற்று தான் போனான் ..தொலைக்காட்சியை கடைசி வரை இயங்க செய்ய விடவில்லை ,இடையில் கிருஷ்ணன் தலையை கொடுத்தான் எப்படியோ தப்பித்து கொண்டான்..பரத் நாலாவது கார்ல்ஸ் பெர்க்கை கையிலெடுக்கவும் ,டேய் சரக்கு யாருக்கு பற்றவில்லைனு குரல் ஒலிக்கவே கள்ள சந்தையில் வாங்கிவிடலாம் னு பனிரென்டு மணிக்கு நாங்கள் தங்கியிருந்த அறைக்கு எதிர்த்தாப்பிலே இருந்த அரசு மதுபானக் கடையை பனிரென்டு மணிக்கு கதவை தட்டினோம்.தட்டுங்கள் திறக்கப்படும்!!! என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் கடைசிவரை கதவு சாத்தியபடியே இருந்தது.ஆட்டோ கார அண்ணன்களிடம் எல்லாம் முகவரி விசாரித்து ஏமாந்து தான் போனோம்..அவ்வளவு பெரிய ஒசூரில் மது கிடைக்கவில்லை என்பது ஆச்சர்யமே!!! என் தம்பி சுதீருக்கு தான் பெரிய ஏமாற்றம்..
பிறகு அறைக்கு வந்து இரண்டு மிடறு நெப்போலியன் இருக்க நாளைக்கு நிகழ்ச்சிக்கு நீதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு சுதாகர் பியர் பாட்டிலையும் ,நெப்போலியனையும் பிடுங்கி கொண்டான்.. மணி இரண்டு!! சங்கமம் ஜோதியில் கலந்துவிட்டது ,எனக்கு தான் மயக்க நிலை கூட எட்டவில்லை ஒருவேளை என் உடலுக்கு முழு நெப்போலியனும் பத்தாது போல...

மது உடலை மயக்கத்தில் தான் வைத்திருக்க வேண்டுமே தவிர மூளையை மந்தமாக்கிவிடக் கூடாது.. என் கவலையெல்லாம் சுதீரை பற்றி மட்டுமே!! காந்தியிடம் தன் மகன் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறான் ,விடச் சொல்லுங்கள் என்று ஒரு தாய் கூற ஒரு வாரம் கழித்து வரச் சொன்னாராம்.பிறகு தாயுடன் சென்ற மகனிடம், தம்பி இனிப்பு அதிகம் சாப்பிடாதே என்று கூறியிருக்கிறார் !!அதற்கு அந்த இதை நீங்கள் முதலில் வந்த பொழுதே கூறியிருக்கலாமே என்றதற்கு இல்லையம்மா அன்று வரை நானும் அதிகம் இனிப்பை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்,நான் கடைபிடிக்காத ஒன்றை மற்றவருக்கு எப்படி அறிவுறுத்த முடியும் அதனால் இப்பொழுது  கைவிட்டுவிட்டேன் அதை உனது மகனிடமும் கூறினேன், என்றாராம்!! இதுவரை குடிக்காமல் இருந்த நான், உரிமையாய் மிரட்டி ,அதட்டிய  இன்று அவனுடயே குடித்திருக்கிறேன்..இனி அவன் மாறுவானா ,இல்லை எனக்கு தான் தகுதியிருக்கிறதா!!!?? ஆனால் ஒரே வித்யாசம்  நான் குடித்தது மகிழ்ச்சிகாக அவன் அடிக்கடி குடிப்பது மயக்கத்திற்காக!!!

மதுவின் மடியில் எப்போவாவது தலைவைக்கலாம் ,தங்கிவிடக் கூடாது..

1 comment: