Sunday, 18 November 2018

குடி

  குடி என்பது ஆதிகாலம் தொட்டே இருந்துவந்திருக்கின்றது!!போருக்கு போனால் குடி, வயலுக்கு போனாலும் குடி, கொண்டாட்டமா குடி என்று மக்கள் குடியில் திளைத்திருக்கிறார்கள்!!கிட்னி கெட்டு போயி மஞ்சள் காமாலை வந்து மருத்துவர தேடி தேடி அலைந்ததா செய்தியில்ல!!!
நம் நாட்டில் தான் குடியை ஏதோ தீண்டதாகாத செயலாக பேசி பேசி அதை வன்முறை ஆக்கிவிட்டோம் என்றே தோன்றுகிறது..இங்கே தான் குடித்தால் கெட்ட வார்த்தையில் கத்தலாம்,வன்முறையில் ஈடுபடலாம் ஏனென்றால் அவன் குடிகாரன் என்று அங்கீகரிக்கபட்டு விட்டவனாக ஆகிவிடுகிறான்....இங்கே குடியை பற்றி பேசுவது தன்னிலை மறந்து ஜட்டி தெரிய சாலையில் படுத்து கிடப்பவர்க்காக அல்ல!!!

எனக்கு தெரிந்து என்னுடைய நண்பன் ஒருவன் உயரமானவன் !!அவனும் குடிப்பான் நண்பர்களோடு மட்டும் ஆனால் குடிக்க ஆரம்பித்த உடன் எங்க இருந்து தான் அந்த சிரிப்பு மத்தாப்பு வருமோ தெரியாது!!!சிரித்து சிரித்து அயற்சி அடைந்து விடுவான்..திடகாத்திரமானவன் ஆனால் தன் உடல்வாகை வைத்து அவன் யாரையும் பலவீனப்படுத்தியதோ ,
தாக்கியதோ அல்ல எந்த நிலையிலும்!!! குதூகலத்துக்கான இந்த குடி நல்லது...

  என்னோட தம்பியும் ஒருத்தன் இருக்கான் !!குடிக்க ஆரம்பித்தால் தன் நிலையை மறந்து என்ன செய்கிறோமென்றே தெரியாமல் ,பேசுவது உணராமல் அலைவான்!!அடுத்த நாள் காலையில் எழுந்தால் இனி குடிக்கவே கூடாதென்று சத்தியம் செய்துவிட்டு நண்பகல் பன்னிரென்டு மணி வரை விரதம் எடுப்பான்!!!!!!!!!!பிறகு நெப்போலியன் உள்ளே சென்றுவிடுவார்...அவன் குடியிருந்த வீட்டில் அதிகமாக குடிக்கிறானென்று கண்டித்து வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள்!!இவனும் சரியென்று சொல்லிவிட்டு அன்று மாலை வீட்டு கதவை தட்டி காலி பண்ணீடுரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்!!!அடுத்தநாள் என்னுடன் இருந்த பொழுது அலைபேசி மணி ஒலிக்க எடுத்து பேச அந்த வீட்டு உரிமைக்கார பெண்மணி என்னப்பா இப்படி செஞ்சுட்டீங்க??ஒரே பிரச்சனையா போச்சுப்பா என்று கூற இவன் நான் தான் வீட்ட  காலி பண்ணிக்கிறேனு சொல்லீட்டன்லமா!!!அப்புறம் என்ன ??என்றான்..
அது சரிப்பா ,ஆனா நீ என் வீட்டு கதவ தட்டாம பக்கத்து வீட்டில் இருக்கவுங்க கதவ எல்லாம் தட்டி காலி பண்ணீடுரேன்!!காலி பண்ணீடுரேன் னு கத்தியிருக்கப்பா!!அந்த மூணு வீட்டு காரங்களும் ஒரே பிரச்சனை பண்ணீட்டாங்கப்பா!!என்றார்
எனக்கு சிரிப்பு அடக்க இயலவில்லை... நீங்களே சொல்லுங்கள் இந்த குடி ஆபத்தானது தான??

என்னோட குடி புதுசுதான் இருபத்தெட்டாவது வயசுல தான் மொதல் முறையா  ஒரு பீர குடிச்சு பார்த்தேன்!!! எனக்கு தெரிஞ்ச  ஒரே பிராண்டு கிங்பிசர் தான் கடையில போயி கேட்டா  இல்லைனுட்டான் வேற எதும் கேட்க தெரில!!அத அவன்ட்ட சொல்ல முடியுமா அவனே அப்புறம் ராயல் அக்கார்டு இருக்குனு  சொன்னான் சரி கொடுங்கனு வாங்கிட்டு வந்து வீட்ல பீர் காச விட தொட்டுக்க வாங்கிய மிச்சர்,கல்லமிட்டாய்,குளிர்பான காசு அதிகமாயிடுச்சு...தனியா குடிக்க யோசனைன்றத விட பயம் வாந்தி ,மயக்கம் னு வந்துருச்சுனா என்ன பண்றது !!!அண்ணே முருகன  துணைக்கு கூப்பிட்டேன் !!அவர் ஒரு பியர் நான் ஒண்ணு !!! மொத முறை அடிக்கும் பொழுதே எந்த சிரமம் இல்லாம  அடிக்கிற உண்மய சொல்லு ஏற்கனவே குடிச்சிருக்கியானு கேட்டாப்ல...,இல்லைனுட்டு சொல்லி கிளம்பியாச்சு..அப்படியே லேசா வானத்தில மிதக்குறாப்ல  இருஞ்சு..!!!!

இது குடிக்கு ஆதரவான பதிவும் அல்ல எதிரான பதிவும் அல்ல !!!

#குடிகுடியைகெடுக்கும்
#குடிவீட்டிற்கும்நாட்டிற்கும்கேடு

ஏதாவது உங்களுக்கு தெரிஞ்ச நல்ல சரக்கு இருந்தா சொல்லுங்க!!!நான்லாம் நடுத்தர வர்க்கம் அதுக்கேத்தாப்ல இருக்கட்டும்

No comments:

Post a Comment