Friday, 7 December 2018

தூண்டில் மீன்கள்

   சிறப்பான நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு பட்டாம்பூச்சிகளையும், வண்ணமீன்களையும் காண்பதற்காகவே நான் செல்வதுன்டு..இன்று என் தம்பியுடன் சென்றிருந்தேன்..
கலையரங்கத்தினுள் வண்ணமீன்கள் நீந்திகொண்டிருக்க மீன்கொத்திகளாக நாங்கள் அங்கு சென்று அமர்ந்தோம்..வண்ணமீன்கள் எல்லாம் வண்ணங்களினால் என் கருவிழிக்குள் நட்சத்திரங்களாக ஜொளித்துக் கொண்டிருந்தன...கருமையான மேகங்களால் சூழ்ந்து கண்கள் மட்டுமே சிமிட்டிக் காட்டும் பர்தா ஆடையை அணிந்த ஒரு வண்ணமீன் என் எதிர் இருக்கையில் அமர்ந்து ஒரே ஒரு விநாடி தன் முழுமதி முகத்தை காட்டி மறைத்துக் கொண்டது..இமைக்கா  விழி கொண்ட மீன்கள் மத்தியில் இந்த மீன் அடிக்கடி என் கண்ணை சந்திக்கும் நொடியில் சிமிட்டிக் கொண்டது!!! எனக்கு அடிவயிற்றிலிருந்து பரவசம் பரவி நெஞ்சாங்கூட்டில் டப்டப் என்றது..
என்ன நினைத்தாளோ என் பார்வையில் படாமல் உணவருந்த ஆரம்பித்துவிட்டால் ,ஏனென்று அறிய துடித்த மணம் பார்வையால் அவளை இம்சித்து விட்டோமா இல்லை பெண்களுக்கே உரிய மூடி மறைக்கும் கைங்கர்யமா !!!!! சிக்கியது மீனா இல்லை தூண்டிலில் மாட்டிய புழு!!!!

No comments:

Post a Comment