Wednesday, 26 December 2018

காமக் கோல்

   எப்பயுமே காமத்திற்கு எனக்கும் அதீத நெருக்கமுண்டு, வயது வந்த முதல் காமம் எனக்குள் தறிகெட்டு ஓடிக் கொண்டு தானிருக்கிறது.. ஆனால் பெண்களை இம்சை படுத்தி எதையும் பார்த்ததில்லை..அப்படியே ஆசை அளவு கோலை தூக்கி விட்டாலும் பயம் படுக்க வைத்துவிடும்..பக்கத்து வீட்டில் குடியிருந்த துணி துவைக்கும் பெண்ணொருத்தியிடம் நெருங்கினேன்..அவளோட நடவடிக்கையும் என்னை அழைப்பதாகவே இருந்தது.. ஒருநாள் நகவெட்டியை கொடுப்பதாக அவள் உள்ளங்கையை தொட்டது தான் நான் எய்திய முதல் மற்றும் கடைசி ஏவுகணை ..பிறகு பயம் தொற்றிக் கொள்ள அவளை அக்கா என்று அழைத்துவிட்டு ஆட்டையை முடித்துக்கொண்டேன்....
நீலப்படங்கள் தான் என்னை எதிலும் மூழ்கடிக்காமல் நீந்த வைத்தது!!! நீலப்படம்  தான் நீட்டியும்,சிந்தியும்
வைத்துக் கொண்டிருந்தது ,அதுவும் நான்குக்கு நான்கு அறையில் அம்மா ,அப்பா ,பாப்பாவோடு அவர்களுக்கு தெரியாமல் போர்வைக்குள் மூடி ஒரு கண் படத்திலும் மறுகண் அவர்களிடமும் இருக்க அந்த படங்களை நான் பார்க்க பட்ட பாடு பல மலைகளை ஒரு எட்டில் தாண்டிய முயற்சி ஈடாகும்!!!
நான் மய்யம் கொண்ட பெண்ணொருத்தி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள நீலப்படம் தவிர்த்து வேறொருத்தியை விரட்டி பிறகு தோல்வி பரிசளிக்க காம நீர் கரையை கடக்க வழி தேடிக் கொண்டிருந்தது... அழகான  பெண்கள் கண்ணிலிருந்து கால்வரை மானை விரட்டிய புலியாக மேய ஆரம்பித்தது..அக்கா, தங்கை என்று அழைத்தவர்களை தவிர ஆசையை அலைபாயவிட்டேன்..
தூண்டில்களில் சில மீன்கள் மாட்டின,ஆனால் புழுவை நழுவ விட்டு தூண்டிலை மட்டும் மாட்டாமல் தண்ணீருக்காக தவிக்கவிட்டுக் கொண்டிருந்தேன்...இடையில் ஒரே ஒரு பெண் வந்தாள் தாகம் தணிக்க நேரில் வாய்க்கவில்லை  என் தயக்கமும் தடுத்துக் கொண்டிருந்தது.. கட்செவி அஞ்சலில் காமத்தை கனிய வைத்து சிற்றின்பம் அடைந்து கொண்டேன்..நான் முதன் முதலாக பார்த்த தாமரை குமிந்திருந்த மாதிரியான மார் பளிங்கு குமிழ் கருப்பு திராட்சை காம்பு இன்னும் கருவிழியாக தங்கிவிட்டது அந்த புகைப்படம்..!!!கால் கட்லா மீனாக வளவளவென்று வனப்புடன் இன்னும் உதைத்துக் கொண்டே இருக்கிறது கனவாக!!!!அன்று அந்த புகைப்படங்களிலயே உச்சம் தொட்டிருக்கிறேன்.. மறுபடியும் நல்லவன் நடிகன் தலைதூக்கவே அவளிடம் பேசவில்லை...காமம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அவளின் கட்செவிஅஞ்சலை நோக்கி கைகள் தட்டச்சு செய்ய ஆரம்பித்துவிடும்....!!!!அவளுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது விலகி கொண்டேன் இப்போது..அவளிடம் நன்றியும்,மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்!!!!இடையில் வத்தலக்குண்டு வந்தது,ஆனால் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை...எத்தனையோ பந்துகளை தூக்கிப்போட்டேன் ,உதிரிப் பந்தாக என்னிடமே வந்து விழுந்துவிட்டது..!!!!அந்நிக்கி எல்லாம் கோவிலுக்குள் இருக்கேன் ..மனமுருகி வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க கைக்குழந்தை முகம் புன்னகைத்தது நானும் சிரிக்க விடுதலை வேண்டிய நான் சிறையில் விழுந்துவிட்டேன்..ஆம் பிறகு என்னால் கடவுளையும் எண்ண முடியவில்லை,கைக்குழந்தையும் காண முடியவில்லை என் முகம் தெரிந்தது அந்த பளிங்கு முதுகில்  ..வெள்ளை முதுகில் ஒரு ஓரம் கருப்பு நாடா தெரிய அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்து சென்றேன் அந்த எண்ணமே காமக் கோலாய் பதிவிட செய்துவிட்டது..இன்னும் தண்ணீர் தாகம் தணியவில்லை ,ஆனால் அதைவிட பயம் தகித்துக்கொண்டிருப்பதால் ஆசையை அடக்கிக் கொண்டிருக்கிறது..

No comments:

Post a Comment