Friday, 14 December 2018

சுபிட்ச முருகன்

  வணக்கம், இந்த அருமையான ஒரு மாலைப் பொழுதில் உங்களை எல்லாம் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..!! அதுவும் வாசிப்பை நேசிக்க கூடிய இந்த அருமையான மனிதர்களை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வாசகர் சாலைக்கும், சகோதரர் சேவியர் அவர்களுக்கும்,திரு .சுப்பைய்யா அவர்களுக்கும் நன்றி யையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. சுபிட்ச முருகன் கதையை பேசுவதற்கு முன்னாடி என்னை ஏன் இந்த நிகழ்விற்கு தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அவரோட வெண்ணிற ஆடையும் ,ரோலக்ஸ் வாட்சும் என் செந்தில் அண்ணன் மூலமாக படித்திருக்கிறேன் 
அவ்வளவு தான்...ரோலக்ஸ் வாட்ச் ஒரு பெண் அடிக்கடி ஒரு வரியை கூறுவார் !!! மரியாதை இல்லாத இடத்தில் அவர்களை பற்றி பேசாதே அதன் மூலமாக அந்த அன்பிற்கு மரியாதை கொடுத்தும் தாங்கள் செய்வது ஒரு விதமான தவறு தான் என்று ரோலக்ஸ் வாட்ச் அணிந்த கதையின் நாயகனுக்கு கன்னத்தில் சடாரென படியும் அடியாக அரைந்து விட்டு செல்வார்..!!வெண்ணிற ஆடை வேறொரு மாதிரியான தளம்..உண்மை சம்பங்களின் தொகுப்பு இப்படியாபட்ட இவர்களின் ஊடே தான் நாம் பயணிக்கிறோம் என்ற கசப்பான உண்மையை பகிர்ந்து செல்கிறார் ..வயதான அம்மாவை விட்டு சென்ற பெண் ஆகட்டும், அப்பாவின் மூர்க்கமான முடிவை உணர்ந்து ஒன்றுமே செய்யாத மகனாகட்டும், தன் குடும்பத்தை காண ஆசைப்பட்டு கேரளா முழுக்க தேடி அருகில் வந்த சமயம் சந்திக்காமலே அப்பெண்மணி திரும்பியதாகட்டும் பல மனித மனங்களை விசித்திரமாக அவர் அருகில் இருந்து அறிந்ததை நம்மை உணரச் செய்கிறார்..
ஒரு எழுத்தாளரோடு முரண்பாடுகள் வரலாம் அவரின் புனைவுகளில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்ற சந்தேகம் கூட வரலாம் அது மாதிரி நாம் சரவணன் சந்திரனிடம் நிறயவே சண்டை போடலாம் அதையெல்லாம் தாண்டி இது எல்லாமே நாம கடந்து போகிற உண்மை தான் என்பது கசப்பான நிஜம்...மென்மையான பக்கங்களை ,செயல்களை தடவி செல்கிற எழுத்தாக அல்லாமல் மனம் சிந்திக்கிற குரூரத்தையும், அதையொட்டி அந்த குரூரங்களை நாம் தொடம இருப்பதால் சரி மனிதனாக தான் இருக்கிறோம் என்றளவில் திருப்தியும் கொள்ளச் செய்கிறது அவருடைய எழுத்துக்கள்... இந்த சுபிட்ச முருகன் கதையில் வரும் வார்த்தைகளில் இருந்து என்னுடைய புரிதல் ஒரு மாதிரியாகவும் ,உங்களுடைய புரிதல் ஒரு மாதிரியாகவும் கூட இருக்கலாம் ஆனால் அந்த இடத்தில் தான்
எழுத்தாளனாக அவர் ஜெயித்திருக்கிறார்...கதையின் நாயகனாக நான் உருவகபடுத்தி கொள்வது என்னவோ அந்த ராஜநாகம் தான்..எல்லா கதைகளிலயும் கதாநாயகன் அறிமுகம் தான் அதிகம் பரபரக்கும் அப்படி பார்த்தால் எனக்கு கதையில் வர ராஜநாகம் தான் கதையின் நாயகனாக தெரிகிறது..அறிமுகத்தின் பொழுதே நம் அருகில் இருக்கிறமாதிரியான உணர்வை கொடுத்துவிடுகிறார்..
விசத்துகிட்ட குறுகுறுப்போட நெருங்கி போயிடக்கூடாது..அந்த வரிகளை படிக்கும் பொழுது என் சிந்தனைகள் எல்லாம் வானமாக விரிந்தது...உண்மை தானே !! விசம் என்பதை நான் கவர்ச்சியாக ,ஆசையாக  பார்க்கிறேன்...அதற்கு எல்லையே கிடையாது.!!! ஒருத்தனுக்கு வாய்ப்பு தரப்படுகிறது ஆறுமணிக்குள்ள நீ எவ்வளவு தூரம் ஓடி திரும்ப வந்து விடுகிறாயோ அவ்வளவு நிலம் உனக்கு என்று சொல்லப்படுகிறது..அவனும் ஆசை அடங்காமல் ஒடி ஓடி நேரத்தை பார்க்கும் பொழுது ஆறு மணிக்கு நெருங்க இருக்கிறது...திரும்ப ஆறு மணிக்குள் தொடங்கிய இடத்தை அடைய வேண்டிய மூச்சிறைக்க ஓடி மூர்ச்சையாகிவிடுகிறான்..
அழகான மனைவி அருகில் இருந்தாலும் பேருந்து பயணத்தில் கடந்து போகும் நிறுத்தங்களை போல வயசு பொன்னு கடந்து போகும் போது நம் மனசு பின்னால் ஓடி தான் போகும்..ஆசை ஆன்ட்ராய்டு போனாக வேலை செய்ய ஆரம்பிக்கும்....தாத்தா தன்னுடைய மகன்களுகெல்லாம் தன் தங்கை மகள்களை கட்டி கொடுக்க இளங்காவ மட்டும்  அயலூரானிடம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்..ஆனாலும் அவர் மகன் இளங்காவின் மீது கொண்ட காதலால் கரைந்து திருமணத்திற்கு பிறகும் அவருடைய தொடர்பு தொடர ஊரார் பேச்சுக்கு கோழி இரையாகி கொத்தி கொத்தி போட்டுக் கொண்டிருந்தது!!!இளங்காவை தன் மகனுக்கு மணமுடிக்க மறுத்ததற்கான காரணமும்,மகனுடைய தொடர்பை துண்டிக்க உதிக்கும் வார்த்தைகள் நம்மையே கொதிப்படைய செய்யும்...அப்புறம் யோசித்து பார்த்தால்  நம் அன்றாடம் பார்க்கும் பெற்ற மகளென்றும் பார்க்காமல், நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் என்ற  நாலுவரி செய்திகளை கடந்து தானே செல்கிறோம் என்ற உண்மை மின்னல் வெட்டாக மனக் கண்ணை கூச செய்துவிடுகிறது...
இளங்காவிற்கு மஞ்சள் பூசி அழகை உவமைபடுத்தபடும் பொழுது மஞ்சள் சூரியனாக நமக்கே  பளிச்சிடுகிறது..மஞ்சள் வண்ணமும்,வாசமும் கதை முழுக்க படரவிட்டிருக்கிறார்!!!அதில் ஒரு வாசகமாக கல்லில் காலை தேய்த்து தேய்த்து கல்லும் மஞ்சள் பூத்திருக்கிறது...அந்த மஞ்சள் குறியீடாகவும் கதை முழுக்கவே பயணிக்கிறது...கதையில் இளங்கா தற்கொலை செய்து கொள்கிறாள் அதை தொடர்ந்து குடும்பத்தில் தொடர்ச்சியான இறப்புகள் !!!! கதையின் நாயகனும் வளர்ந்து கொண்டே வருகிறான்.. சந்தேகம் என்பது பூரான் மாதிரி ஊற ஆரம்பித்துவிட்டால் பழிவாங்கமா விடாது...இளங்கா அத்தைக்கு அவன் சின்ன வயசில் இருந்தே பிடித்தமான ஒருவர்...அவனை அழைத்துக் கொண்டு போகும் போது மாமா அவன்ட்ட கேட்ட கேள்வி இளங்கா வேற ஆம்பளைங்க கூட எதும் பேசுனாலா??? இல்ல மாமா அத்தை குனிஞ்ச தலை நிமிராது ..ஆனா மத்த  ஆம்பளைங்க எல்லாம் அவள பார்ப்பாங்கள்ல என்றது சந்தேக பூச்சியாக சிலந்தி வலையில் சிக்க வைத்து விட்டதை எளிதாக  உணர்த்தி விடுகிறது....
பெரிதா மதிக்க கூடிய மனிதர்கள் வெளிவிட கூடிய வார்த்தைகள் எதிர்மறையாக
இருக்கும் பொழுது
என்ன மாதிரியான விளைவுகளையெல்லாம் கடத்தி கொண்டு போகுது என்பதற்கு அடையாளமாக அந்த மாமா எழுதி வைத்திருந்த கடிதத்திலிருந்து
நமக்கு புரிகின்றது..அதே மாதிரி மனித மனம் எப்படி எல்லாம் குரூரமான ஆசைகளை சுமந்து கொண்டு இருக்கிறது என்பதையும் புரிய வைக்கிறது...தொடர்ச்சியான  மரணங்கள் அவனுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறது..!!
எனக்கும் கூட தான் எங்க வீட்டில் அடுத்தடுத்த மாமா,அப்பாவின் இறப்பு நிகழ்ச்சிகள் அடுத்து எனக்கும் கூட பயத்தை ஏற்படுத்தி உள்ளுக்குள் அச்சக் குரலை ஒலிக்க விட்டது...!!! பள்ளிக் கூடத்தில் பரிட்சைக்காக மட்டும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தவனை அந்த நிகழ்வுக்கு பிறகு அன்றாடம் இறைவன் தேடி வழிபட ஆரம்பித்தேன்...அதாவது அதில் ஒரு வரி வரும் வெப்பத்தையும் ,வலியையும் உணரும் பொழுது என்னை தேடிவருவாய் என்று குரலாக ஒலிக்கும்...
வெப்பம் என்பது உள்ளக் கொதிப்பையும் ,பிறந்த்திலிருந்து உடல் வலி வராதவனுக்கு வந்தால் அவன் இறைவணை சரண்டைவதை தவிர வேற ஒன்றும் இல்லை என்று முடிவாக வந்து நிற்கும்..பாசமா ,பழியா னு வரும் பொழுது  பழி முந்திக் கொள்ளும் என்பது தான் எவ்ளோ நிஜம்..துரோகத்திற்கு பரிசு பழி தான்..நுட்பமான அதிகாரம் எப்பயும் ஆண் பெண் உடலில் இருக்கிறது!!!காமத்தை மட்டும் கட்டாயத்தினால் ,
அதிகாரத்தினால் கடந்து விடமுடியாது..மனம் இயங்கினால் மட்டும் உடல் இயங்கும்.. எல்லா இடங்களிலும் வெற்றியாளர், தோல்வியாளர் என்று பிரிக்கப்படும்..ஆனால் இங்கே இருவருமே வெற்றி பெற்றால் தான் மகிழ்ச்சியே!!!
ஆம் , அவனை பழி துரத்த ஆரம்பித்துவிட்டது..உயிருக்கு உயிராக நேசித்த கீர்த்தனாவுடன் இணையும் பொழுது மஞ்சள் முகம் திடீரென்று வந்து போகவும் அவன் திடுக்கிட்டு போனான்..பலநூறு முறை இதற்கு முன் இணைந்து இன்பத்தில் திளைத்த அவர்கள்,அன்று கீர்த்தனா கூறிய என்ன முன்ன  மாதிரி இல்லையே என்ற வார்த்தை அவனை ஊருக்கு துரத்தி வலியின் வாசலையும், வெப்ப உணர்ச்சியையும் அறிய திறந்து வைத்தது.....அங்க போயி நீலப்படங்கள்லாம் விதம்விதமாக பார்த்தும் ,குளியலறையில் முயன்றும் அவனால் உடம்பில் சூட்டை எழுப்ப முடியாமல் பயந்து போகிறான்...நீலப்படம் என்றவுடன் இப்போது நான் அடிக்கடி கண்ணில் படும் செய்தி போர்ன் வெப்சைட்களை தடை செய்வது தொடர்பான செய்தி!!! அதாவது இவர்கள் பார்வையில் நீலப்படம் பாலியல் வன்மங்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது..எனக்கு அப்படி தோன்றவில்லை!!!நம்ப இந்திய ஆண்கள் பெண்கள் பொறுத்த அளவில் செக்ஸ் குடும்ப நிலையை பொறுத்து தான் கைகூடும்..தங்கைக்காக அண்ணன் காத்திருக்கனும், அண்ணனுக்காக தம்பி காத்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டமைப்பு இருக்கு!!!குழந்தைகள் கெட்டு போகிறார்களென்று நினைத்தால் அவர்கள் இணையதளங்களை உபயோகபடுத்துவதில் ஏதாவது மாறுதல் கொண்டு வரலாம்..பள்ளிகளில் பாலியல் வகுப்புகளை நடத்தி ஆண் ,பெண் உணர்வுகளை பரஸ்பரம் கடத்தலாம்!!! ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண்ணும் ,பெண்ணுக்குள் ஆணும் இருக்கிறான் என்பதை உணர வைக்காமல் பானையில் இருக்க ஓட்டையை உள்ளே அடைக்காமல் வெளிய பூசி மறைப்பது போல தேவையில்லாத வேலை ஒழுகிக் கொண்டே தானிருக்கும்...அடக்கப்பட்ட உணர்வுகள் தான் பாலியல் வன்மங்களாக வெளிப்படுகிறது...
அதுவரை குனிந்த நடைபோட்டவன் இப்போது எல்லாப் பெண்களையும் குறுகுறுப்போடு பார்க்க ஆரம்பித்துவிட்டான்..
அலுவலகங்களில் எல்லாம் பெண்களின் பிருஷ்டங்களையும்  குறுகுறுப்போடு பார்த்தும், கைகளை அலையவிட்டும் பார்க்க அங்கிருந்து அடித்து துரத்தப்பட்டான்..அந்த மாதிரி கிட்டத்தட்ட பார்வைகளும் ,செய்கைகளும் இவன மீறி தவறென்றும் தெரிந்து
நடத்திடுகிறான்..பல இடங்களில் அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டபடுகிறான்..இந்த சூழ்நிலையில் தன் காதலிய சந்திக்க போய் அவன் தாத்தா உதிர்த்த எந்த வார்த்தைகள் அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வர காரணமாக இருந்ததோ,
அதையே அவன் 
கேட்டு பழிக்கு ஆளாக ஆரம்பித்துவிட்டான்...பல கோவில்களில் இவனை மாதிரியான ஆட்களோடு சுற்றி அவமானப்பட்டு பிறகு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயும் அடிவாங்கி யானை சிலையருகே அமர்ந்திருக்கும் பொழுது ஒரு நபர் தானாவே வந்து பேசுகிறார்..அந்த நபர் தன்னோட கதையை எல்லாம் அவன் அனுமதியின்றியே சொல்லிவிட்டு காமம் தான் அவருடைய குற்ற உணர்ச்சிக்கும் காரணமாக என்று சொல்லி அவனை மலைக்கு அடிவாரத்தில் இருக்கும் கோயிலுக்கு அழைத்து செல்கிறார்..அங்கே சென்ற பிறகு பல விந்தைகள் நடக்கின்றன..!!!அழைத்து சென்றவர் என் எல்லை முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு மறைந்துவிடுகிறார்..காலில் இடுக்கில் ஏற்பட்ட புண் சொறிந்து சொறிந்து வயிறு வரை ஓட்டை சென்று வலி ஏற்படுவதாக உணர்கிறான்...!!!புழுதி காற்றில் தூக்கிவீசப்பட்ட பின் இடுப்புக்கு கீழே எதுவும் செயல்படவில்லை..அவனுக்கு முன் ஒரு நாயும் தன் பிருஸ்டத்தை இழுத்துக் கொண்டு செல்கிறது..இவனும் குத்துகிற கூலாங்கற்களோடு கையை ஊன்றி அந்த குடிசையே நோக்கி நகர்கிறான்..அங்க பச்சை வேட்டி துண்டு முண்டாசுமாக ஒரு உருவம் இருக்கிறது அவர் முகத்தை பார்க்க முடியவில்லை ..எச்சில் சாமியார் .!!!அவருக்கு டீயும் ,லட்டும் வேண்டுதலுக்காக விரும்பி சாப்பிடுவார் என்பதற்காக வாங்கி வைக்கிறார்கள்... ஒரு எல்லைக்கு மேல் அவனால் தாண்ட முடியவில்லை..அந்நிக்கி என்று பார்த்து மக்கள் நடமாட்டமே இல்லை ,பாடுகிற பறவைகளும் வரவில்லை ..பசி !!!! பசி என்கிற உணர்வு புறப்பட்டு வருகிறபொழுது வலி தானாகவே சாதுவாக முகத்தை காட்டிக் கொள்கிறது...எதையாவது சாப்பிடலாம் என்று தேடும் பொழுது அவன் கண்களுக்கு சாமிக்கு வைத்திருந்த லட்டு தென்படவே அதை எடுத்துக் கடிக்கிறான்..அது இரப்பர் பந்தாக எட்டி எட்டி குதிக்கிறது..கோவத்தில் தூக்கி எறிய அது பூந்தியாக சிதறுகின்றது ..ஆர்வமாக ஓடி போய் எடுக்க போனவனுக்கு திடீரென்று ஊற்றெடுத்த சாக்கடை தண்ணி பூந்தியை அள்ளி சென்றது!!!அப்புறம் ஒரு காக்கா வடைய தூக்கிட்டு வந்து கீழ போடுது..அது அவனுக்கு கிடைத்ததா என்று அறிய நீங்கள் புத்தகத்தை புரட்டுங்கள்..

  அடுத்த நாள் அவனுடைய காயங்கள் எல்லாம் ஆறி இருக்கிறது..
நம்ப ஊர்ல பக்கத்தில் இருக்க நாடி சாமியார்,பீடி சாமியார் ,இந்த எச்சில் சாமியார்கள் எல்லாம் அன்றாட வயிற்றுப்பிழைப்புக்கே
சிரமப்பவர்கள்..எதையும் வேண்டி பெறுபவர்களாக இருக்க மாட்டார்கள்!!!ஆனால் இப்ப பெரிய விளம்பரங்கள் மூலமாக காட்டப்படும் சாமியார்கள் எல்லாம் சாமியால முடியாதது கூட சாமியார்களினால் முடியும் என்று நம்ப வைத்து அவர்கள் படங்களையே பூஜையறையில் வைத்துவிடுகிறார்கள்..இந்த சாமியார்கள் மேல தான் அடுக்கடுக்கா குற்றசாட்டுகளும் வருது!!!
முந்தைய காலத்தில் சாமியாக  தரிசிக்கபட்டவர்கள் ஆன ரமண மகரிசி கடைசியில் கையில் இருந்த சில்லறை காசுகளையும் தூக்கி எறிந்துவிட்டு இது எல்லாம் ஆட்கொள்ளி வாசலோடயே போயிடனும் என்றார்...விவேகானந்தரோ தனக்கு நடந்த பாராட்டுவிழாவில் உங்களுடைய ஈடுபாடெல்லாம் கொள்கைகளில் இருக்க வேண்டுமே தவிர தனிநபர் விஸ்வாசமாக மாறிவிடக் கூடாது!!!என்றார் !!!
எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறதென்றால் இவர்களுக்கான தேவையும் இந்த சமூகத்தில் இருக்கிறது...எப்படி இவர்களை நம்பி இப்படி கூட்டம் கூடுகிறதென்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்ட பொழுது டொமினோ எபெக்ட் என்றார்,அதாவது வரிசையா நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் ஒன்ற தள்ளனும்னா அடுத்தடுத்து சாய்கிற மாதிரி யாரோ ஒருவருக்கு நடக்க கூடிய நல்லது அப்படியே செய்தியாக்கப்பட்டு
பரப்பபடுகிறது... நேரடியாக ஆன்மீகம் என்றால் வர தயங்குவார்கள் என்பதால் சமூக சேவை என்ற  வேறு கையில் எடுத்துக் கொண்டு அதிகாரமிக்க நபர்களை அருகே வரவைத்து நெருக்கமாகி தாங்களும் அதிகாரம்மிக்கவராகி கொள்வார்கள்..
மலையாள கும்பல் ஒன்று வருகிறது..ஒரு சாமியார் எப்படி கார்ப்பரேட் சாமியாரா மாறுகிறார்னா முதலில் பல கதைகள் அவரை சுற்றி நடந்தாக பேசப்படும்..அடுத்து ஆச்சர்யங்களும் ,அம்மானூசியங்களும் நடப்பதாக நம்ப வைக்கப்பட்டு வியபாரம் ஆரம்பிக்கும்!!! அப்படிதான் அந்த மலையாள கும்பல சுத்தி அங்க கடை வைத்திருந்த ஆட்கள் எல்லாம் துரத்தி துரத்தி கதை சொல்ல ஆரம்பித்தார்கள்!!அவன் இவ்வளவு நாளா முயற்சி பண்ணி நினைவிற்கு கொண்டுவர முயற்சித்து தோற்றுப் போன உருவம் ஒரு மலையாளி பொன்ன பார்த்த உடனே தோன்றிவிடுகிறது..கீர்த்தனா அந்த பெண்ணை விரட்டி அவள் ஆட்கள் இவன  அடிக்கும் பொழுது ஒரு ஆச்சர்யம் நடந்ததா டீக்கடைக்காரர் அடுத்த நாள் சொல்றார்!!!
அடுத்து கதையில்  வறட்சியை பற்றி சித்தரிக்கிறார், தலைமுடியை விரித்துபோட்ட பெண்ணொருத்தி சடலமாக கருகி நின்றது மாதிரி..ஆழ்துளையில் முள்ளெலி போல் பூமிக்குள் முண்டிப் போய் பார்த்து ஆயிரம் அடி கடந்தும் உயிர்நீர் தட்டுபடவில்லை..பூமியில் தண்ணி இல்லைனு நாம கத்தும் போது காது கேட்காது,கடைசியா விலங்குகளை கத்த வச்சு தான் செம்புல அளந்து ஊத்துவான்!!
உர மருந்து கடைகளில் கட்டுப்பாடு கொண்டு வந்தார்கள்.யார் அனுப்பியதென்று கேட்டு தான் மருந்துகளை தந்தார்கள்!!!
மாசம் ஒரு பொணம்  பார்த்த ஊர்ல இப்ப தினமும் விழுகுதே னு வெட்டியானே புலம்புவது என நம்மை வறட்சி யை பற்றி வருத்தபட வைத்துவிடுகிறார்..
கருப்பு வேட்டியை போர்த்தியது போல இருட்டு கருமேகங்களால் சூழப்பட்டு இருக்கிறது..ஒரு ஊசி எடுத்து குத்தினால் போதும் அத்தனை தண்ணீரும் விழுந்து விடுமாறு கற்பனை செய்துகொள்கிறான் அவன்!!!
குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியா குதிக்கிறாங்க ஆழங்கட்டி மழை தான் பெய்ய போதுனு நினைக்கிறாங்க!!! அப்பனு பாத்து  ஒரு காத்து அடிச்சு கலச்சு விட்டுடுது ..

  அந்த எச்சில் சாமியார் ஓங்கி ஒருநாள் மிதிக்கவும் இரப்பர் நெகிழ்வு தன்மையுடையதாக இவன் உடல்மாறி நடக்கும் சக்தியை பெருகிறான்..வெளிய மக்கள் திரள் பாதசாரியாக போறாங்க..இவனையும் சாமி ஆக ஆக்குகிறார்கள்..இவனை தூக்கி கொண்டு மலையில் போடுகிறார்கள் இவனுக்கு ஒரு குகை தென்படுகிறது..அதில் இருந்து கேள்விகள் மட்டும் வருகிறது..
கடைசியா ஒரு கேள்வி வருகிறது
நீ எதுவாக இருக்கிறாய் ?என்கிறது அந்த குரல்,
எதுவாக சிந்திக்கிறேனோ அதுவாக இருக்கிறேன் என்கிறான்..
மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு  அவர்களுக்கு ஒரு கண்ணாடி இருக்கிறது..அதில் அவர்கள் மனதில் என்ன யாரை நினைக்கிறார்களோ அது பிரதிபலிக்கும்...எல்லாரும் கண்ணாடி முன்னாடி நிக்கிறாங்க, கிருஷ்ணன் நிக்கும் போது யார் தெரிவா என்று பார்ப்பதற்கு எல்லாருக்கும் ஆர்வம்..எல்லாம் அர்ஜுனன் தெரிவார்,யசோதை தெரிவாங்கனு நினைக்கிறப்ப சகுனி தெரியிரத பார்த்து ஆச்சர்யம் அடைந்துவிடுவார்கள்..
கதாநாயகன் எதிர்த்து நிக்கிற ஆள் பலத்த பொருத்து தான் அவன் பலம் பெருகும்...சகுனி அடுத்து என்ன யோசிக்கிறான் நாம அடுத்து என்ன செய்யனும்னு யோசிக்கிறனாலயே கிருஷ்ணன் எண்ணமெல்லாம் சகுனியே நிறைந்து தெரிவார்...
    இடையில் ஒரு பெரியவர் கூட இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலையெல்லாம் வருகிறது..அது எதற்காக என்று கதையை படிக்கும் பொழுது உணர்வீர்கள்..எத்தனை தூரம் ,நாள் இப்படி பயணிக்கனும் நினைக்கும் பொழுது  பெருங்காற்று வீசும் பொழுது பிடித்திரிக்கிற கிளைய விட்டுவிடக்கூடாது..சொல் செயல் என்று அவர் சொன்னது தான் கடைசி வரையும் உந்துதலாக மாறுகிறது!!!இடையில் சாமி குழந்தையா இருக்கும் பொழுது துரத்திய சாதிய வன்மம் அந்த தெரு பக்கமே தலைவைக்காமல் இருந்த்தற்கு பிறகு அவர் எப்படி அந்த தெரு மக்களாலே உள்ளே போனார்?? என்பது
இறுதியாக அந்த ராஜநாகம், அவன் ,அந்த நாய் ,விரியன் பாம்பு சந்திக்கிறாங்க!!! சுபிட்ச முருகன் யார்??? மழை பெய்ததா ?? என்பதை  எதுவாக நினைத்தாரோ அதுவாகவே முடித்திருக்கிறார்..

#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment