Monday, 17 December 2018

ஆம்ப்ளேட்

#ஆம்ப்ளேட் அராஜகம்
   நம்ம ஹோட்டல்களுக்கு சாப்பிட போகும் பொழுது பல அனுபவங்கள கத்துக்கலாம்!!! அதில் ஒண்ணு தான் இந்த ஆம்ப்ளேட் அராஜகம் !!! அசைவ ஹோட்டல்ல நுழையுரம்னா மொதல்ல இலைய விரிச்ச உடனே அங்க இருக்க ஒரு சர்வர் பெரிய தட்டுல சமாதி ஆன ஆடுல இருந்து நண்டு ,மீன்  வரைக்கும் எடுத்துட்டு வந்து காமிப்பார்!!!!எனக்குலாம் அத பார்த்த உடனே நாக்கு நுனியில் சாரலடிக்க ஆரம்பித்துவிடும்!!சரி கதைக்கு வரேன் ..அத பார்த்த நமக்கு, ஒண்ணு நம்மல்ட்ட காசு இருக்காது இல்லைனா ,ஆசை இருக்காது!!!இல்ல சார் வேணாம் புரோட்டா போதும் னு சொல்லுவோம்!!அந்த சர்வர் ம் புரோட்டா மட்டும் தானாக்கும்னு அவர் மனசுல நினைக்கிறது நமக்கு நல்லாவே தெரியும்..... புரோட்டா வச்சுட்டு ஆம்ப்ளேட் வேணுமா னு கேட்குரது ஒரு வன்முறைனா வெங்காயம் அதிகம் போட்டா ,கம்மியா போட்டானு கேட்பது அராஜகம்..இப்ப நாம அந்த சர்வருக்காகவாது ஒரு ஆம்ப்ளேட் சாப்ட்டே ஆகனும்...!!! இப்ப சைவ ஹோட்டல் உள்ளயும் ஆம்ப்ளேட் அரக்கன் நுழைந்து விட்டான்!!!
நீங்க அனுபவித்திருக்கிறீர்களா???

#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment