பல அசுரன்களுக்கு சொந்தக்காரர்!!!! கவுண்டமணி அவர்கள்....
உலக அளவில் இணையான நடிகர் இவருக்கு இல்லை என்பேன் நான்!!! எல்லா காலகட்டங்களிலும் அதிகாரத்தை ,அடிமைத்தனத்தை எதிர்த்து யாருடைய குரலாவது ஒலித்துக் கொண்டே இருக்கும் ...ஆனால் கிட்டத்தட்ட அவருடைய குரலும் அவர் வாழும் காலத்திலயே தனிமனித வழிபாட்டுக்குரியதாக மாற்றப்பட்டு நசுக்கப்பட்டுவிடும்..கவுண்டமணி இந்த கோட்பாடுகளில் என்றும் சிக்கிக் கொள்ளாதவர்!!!!
யாரும் ஏற்க துணிகின்ற கதாபத்திரங்களை தோளில் ஏற்றிக் கொண்டு தன்னுடைய எடக்கான துணுக்குகள் மூலம் சிரித்துக் கொண்டே சமூக அவலங்களை சாட்டையால் அடித்தவர்....!!!!வெட்டியான்,பார்பர் ,டோபி ,
வீதியில் வித்தை காட்டுபவர் என விழிம்புநிலை கதாபாத்திரங்களில் நடித்து வழிபாட்டுக்குரியதாக கருதப்பட்ட மனிதர் முதல் புனிதங்கள் வரையிலான எல்லாவற்றின் மேலும் கேள்விகள் எழுப்பி சிரிக்க வைத்தவர்...அருகாமையிலயே செந்தில் என்ற கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு மற்றவர் உடல் மீதான அதிகாரம் செலுத்துவதன் மூலம் வன்முறை பற்றிய பகடிகள் செய்திருப்பார்!!!நகைச்சுவை காட்சிகள் எல்லாம் அலுப்பு தட்டாத ஒன்றாக இன்றும் நீடித்து வருவதற்கான காரணம் அவர் எழுப்பிய வாதங்களுக்கு இன்றளவிலும் பதில் இல்லை என்பது தான்...அவர் கோலோன்றி கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லாத அளவில் இருந்தன..அவருடைய காட்களுக்கென்றே ரசிகர் கூட்டமும் இருந்து வந்தது.. ஆனால் திரைக்கு வெளியே எந்த புகைப்படக் கருவிகளும் தன்னை அனுமதிக்காமலே வைத்திருந்தார்...தன்னை தேடிவருபவர்களுக்கு நிராகரிப்பின் மூலம் தன்னை ஒரு சாமானியனாக தான் கடைசிவரையிலும் காட்டிக் கொண்டார்..இந்த நிராகரிப்பு எல்லாம் அவர் மனங்களை காயப்படுத்த கண்டிப்பாக செய்திருக்கமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன் ..கூறுகின்றேன்!!!தானொரு தொழில்முறை வர்த்தகன் அவ்வளவே போற்றுதலுக்குரியவன் அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடத்துக் காட்டிக் கொண்டவர்..இப்போது வரைக்கும் எந்த ஒரு நடிகரும் இப்படியாக நிலைநிறுத்திக் கொண்டவர்கள் யாரும் இல்லை.....இதனாலயே அவர் காட்சிகளில் தன் விருப்பம் போல பேச முடிந்தது ...யாரையும் சமாதானப்படுத்தும் ,திருப்திபடுத்தும் நோக்கம் இல்லாமல் நடிக்க முடிந்தது.. அவர் அரசியல் பற்றி அடித்த பகடிகள் எல்லாம் கொஞ்சம் நஞ்சமல்ல ..
இந்த சாட்டையடி கேள்விகள் சமூகம் ,அரசியல்வாதிகளும் மீதும் இன்றுவரை திருத்திக் கொள்ளாத நிகழ்வுகள்....இப்படி ஒரு நகைச்சுவையாளன் எங்கும் இனி வரப்போவதில்லை.. நடிகனைப் பற்றி அவன் நிகழ்காலத்திலயே அதிகம் சாகடிக்கப்பட்டதாக வதந்திகள் பரவுவது அவருக்காகதானிருக்கும்...
அதற்கும் கூட அவர் மறுப்புகள் அளித்ததில்லை...இதற்கெல்லாம் புத்தரை கடந்த மனநிலை வேண்டும்!!!!
ஒரே ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்து கொள்கிறேன்..நடிகர் சங்க தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது...எல்லா நடிகர்களும் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இரு உச்ச உச்ச நடிகர்கள் கொடுத்த பேட்டி பேசு பொருளாக இருக்கின்றது...கவுண்டமணியை நோக்கி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்....அவரிடம் ,நடிகர் சங்கம் பெயர் தென்னிந்திய நடிகர் சங்கமா?தமிழ்நாடு நடிகர் சங்கமா? வைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது...
யோசிக்கவே இல்லை உடனே அவர், நடிகர் சங்கம் னு இருந்தால் போதும் என்கிறார்...சிரிப்பலை எழுகிறது..அதனால் தான் அவர் கவுண்டமணி....
அவரைப் பற்றி சின்னதாக பதிவு செய்ய வேண்டும் ஆசையை இத்தருணத்தில் நிறைவேற்றிக் கொள்கிறேன்...நன்றி
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment