ஆண்களும் பெண்களுமாக இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஆதிக்க சமூகத்தில் ஆண் அதிக லாபம் பெறுவதால் மாற்ற வேண்டிய பங்கு ஆண்களின் பக்கமே அதிகமிருக்கின்றது என்ற நியாயத்தின் அடிப்படையில் நின்று பேசுகின்றேன்...முதலில் ஆணும் ,பெண்ணும் நிகழ்வுகளில் சரிக்கு நிகராக நடத்தபடுகின்றனரா என்ற சாதரண தொடக்கத்திலிருந்து ஆரம்பிப்போம்...கற்பு என்ற பண்டத்தை பிடித்துக் கொண்டு பெண்கள் மீது நிகழ்த்தபடும் வன்முறைகள் பற்றி இங்கு யாருமே விவாதங்கள் வைப்பதில்லை...உள்ளூர் கலவரமானாலும் சரி ,உலகப் போரானாலும் சரி ஆதிக்கம் செலுத்துபவர்கள் வன்கொடுமை செய்வது பெண்களின் உடலிலயே ஆரம்பிக்கப்படுகிறது....சரி இங்கு நிச்சயியக்கபடுகிற அல்லது விரும்பி ஏற்றுக் கொள்ளும் திருமணத்தின் தாம்பத்யத்தில் பெண்களால் சுய விருப்பங்களை சொல்லிவிட முடியுமா??? ஒருத்தருக்கு புஸ்ஸி லிக்கிங் அல்லது ப்ளோ ஜாப் பிடிக்கிறதென்றால் தன் இணையரிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா??? நான் ஒரு கதை படித்திருக்கிறேன்...கதைகள் எல்லாம் கற்பனைகள் அல்ல ...நிஜங்கள் எங்கோ ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டிருப்பவை..திருமணமான இரவின் பொழுது தாம்பத்யத்தில் புணரும் பொழுது மனைவியின் முனகல் சத்தம் கேட்டு இதென்ன தேவிடியா தனமாக நடந்து கொள்கிறாய் என்றிருக்கிறான்..அந்த நொடி அவளின் மன ஓட்டங்கள் என்னவாக மாற்றப்பட்டிருக்கும்...மாப்ளை மனம் கோணாமல் நடந்துக்கமா என்று சொல்லும் பொதுபுத்தியில் உறைந்திருக்கின்றது உடலை உடைமையாக பாவிக்கும் ஆயிரமாண்டு ஆதிக்க வரலாறு....
உடலை உடைமையாக பாவிக்கும் ஆதிக்க மனப்பான்மையை சிதைக்க இப்போது ஆயிமாயிரமாய் பெண்கள் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்...
ஆண்களாக அவர்களை அனுமதிப்பதும் வழிவிடுவதும் கூட ஒத்தாசைதான்...அங்கே போய் நின்று கொண்டு ஷால் போடுங்க தோழி ,உங்க உள்ளாடை தெரியுது தோழி என்று
உங்கள் அயோக்கிய தனத்தை அவிழ்த்து காட்டாதீர்கள்...
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment