திருமண வாழ்க்கைல பெரும்பாலும்
ஆண்கள் பெண்கள் குடும்ப கட்டமைப்புல சந்தேகம் என்ற புள்ளி உருவாகும் பொழுது பொன்னுங்க ஆண்கள காட்டிலும் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் ..உண்மை என்னனா ஆண்களுக்கு known personality ஒண்ணு உள்ள இருக்கு அதாவது அவனுக்கே badsoul உள்ள
இருக்குனு நல்லாத் தெரியும் ஆனால் அத ஒத்துக்காம தன்னை நல்லவன் ,சுத்தமானவன் சொல்லி திரிகிற ஒருவனால சந்தேகபடாம இருக்க முடியாது..எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் பொருளாதார ரீதியாக சிரமப்படுறாங்கனு தெரியும் ஆனால் மனமகிழ்ச்சியா இருப்பாங்கனு நம்பீட்டு இருக்கப்ப நம்ப பிரச்சனை சொல்லும் போது தா தெரியுது அவர்களுடைய சித்ரவதை ..ஏன் கா இதெல்லாம் வீட்ல சொல்லலை னு கேட்குறப்ப அம்மாட்ட சொன்னா அதுக்கென்ன தெரியும், அண்ணன்ட்ட சொன்னா சண்டைக்கு போவான் !! வெளியே தெரிஞ்சா அசிங்கமா போயிரும் ..ஊர் வா மூட முடியாது ..ஏதோ அசிங்கத்துக்கு பயந்துட்டு வாழ்ந்துட்டேன் இப்டியே
இருபது வருசமா னாங்க!!! இப்ப அவுங்க எந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாதபடி மனசிதைவுல இருக்காங்க அதாவது எதுனாலும் சந்தோசம்னாலும் சரி துக்கம் னாலும் சரி அதிர்ச்சி ஆகி உட்காந்துருவாங்க!!!!!!
எனக்கு தெரிந்த இன்னொரு பொன்னோட வீட்டுகார் உயர்வு மனப்பான்மை ,தாழ்வு மனப்பான்மை கலந்த ஆளு இது எதிர்தரப்புல இருக்க ஆள பொறுத்து பிரதிபலிக்கும் .....
இது மனச பொறுத்து அந்தாளோடு பொறுமீட்டு போனா பிரச்சனை இல்ல..ஒரு விசேசத்துக்கு போனா யாராவது நகை போட்டு வந்தா இங்க பாரு உன்னால போட முடியல ,யாராவது car ல வந்தா நம்மனால போக முடியல னு Feel பண்ணுவாராம் ....ஆரம்பத்துல அந்த பொன்னும் நம்ப நிலையை நினச்சு தான் வருத்தபடுறார் னு நம்புச்சு அதுக்குபிறகு தான் தெரிஞ்சு கண்ணாலம் ,காதுகுத்து னு போனா நாலு பேரோட பேசும் சிரிக்கும் அதப் பொறுக்க முடியாம தான் சோகமா இருப்பதன் வழியா அந்த கொண்டாட்ட மனநிலை கெடுக்கறது தா நோக்கம்...தன் உடம்பு சரியில்ல உணரும் பொழுதெல்லாம் அவரு அந்த புள்ளைட்ட அடுத்து உன்னோட திட்டம் என்னவென்று கேட்டுகிட்டு இருப்பாராம் ....யாரெல்லாம் அந்த பெண்ணிடம் நெருக்கமா உணராங்களோ அந்த குடும்பத்தோட ஏதாவது சண்டை வரவச்சு துண்டிக்க வைத்துவிடுவது அதாவது பக்கத்துவீடு ,நண்பர்கள் னு யாருடனும் ஒட்டவிடுவதில்லை ..ஏதாவது பிரச்சனைனு பொழுதெல்லாம் நான் என்ன குடிக்கிறனா இல்ல கூத்தியா வச்ருக்கனா னு கேட்டு முடிப்பாராம் ..என்னோட பதில் என்னானா குடிக்கிறவனோட குடும்ப நடத்திரலாம் இந்த நொச்சு வாயன்கள்ட்ட குடும்ப நடத்த முடியாது!!!
தஞ்சை பிரகாஷ் மிஷன் தெருவில் ஒரு பொன்னு சுதந்திரமா வளரா
கல்யாணத்துக்கு பிறகு அடக்குமுறைக்கு ஆளாகி தன் மகளோட சுதந்திரத்திற்கே தடையா மாறும் அவலத்த காட்டி இருப்பார் ...பள்ளிகொண்டபுரம் நாவல்ல நீல.பத்மநாபன் பெண்ணோட
அகசிக்கல், ஆணோட ஊசலாட்ட மனசு இத பத்தி ரொம்ப அழகாய் சொல்லி இருப்பார்..இந்த நாவல்லாம் படிக்காட்டி நானும் நல்லவன் தான் சொல்லீட்டு நாலு பேத்த நோகடிச்சுட்டு இருந்துருப்பேன்... நல்லவேள வாசிச்சுட்டேன்
நான் என் மனைவிட்ட சொல்றது இதுதான் என்னிடம் unsecured நீ உணர்ந்தால் மனதளவில் காயப்படுத்தும் செயல் வெளிப்பட்டா விலகியிரு நான் பொறுப்பேத்துக்கிறேன் என்பேன் ..உடனே அவர் எப்படா என்னை கழட்டி விடலாம் னு இருக்க என்று கேட்டு முடித்து கொள்வார் ..நான் உங்கள்ட்ட அதாவது பெண்கள்ட்ட சொல்வது என்னனா நீங்க இருக்கிற இடத்துல உங்களால பாதுகாப்பா உணர முடியவில்லை என்றால் நீங்க அந்த உறவை துண்டிக்கிறது தா நல்லது ..நாம secured ஆ இருக்கோம்ன்றத தாண்டி வாழ்க்கையில் வேற என்ன பிடிப்பு இருந்துவிடப் போகிறது ..அது ரொம்ப முக்கியம்!!! so called ஊர் பேசும், கௌரவம் போடும் னு நீங்க வாழ்ந்தா திரும்பி பாக்றப்ப எந்த திருப்தியிம் இல்லாம உங்க பிள்ளைகள்ட்ட கஷ்டத்த மட்டுமே சொல்லி அவுங்கள சூழ்நிலை கைதியா வளர்ப்பீங்க....ஊர் வாய மூட முடியாது ஏனா அதுக்கு காது
கிடையாது ,கேட்கவும் கேட்காது நம்ப பிரச்சனை காதுகொடுத்து கேட்குறத விட அத பேசி புலாங்கிதம் அடைய தான் மனசு கெடந்து தவிக்கும் ..so முதலில் உங்க வாழ்க்கையை சரியா வாழுங்க உங்களுக்காக வாழுங்க, நீங்க வாழுறது தான் உங்க புள்ளைகளுக்கு சொல்லி தர சரியான பாடம்...ஒண்ண மட்டும் மனசுல வச்கங்க சந்தோசமா வாழ பணம் தேவையில்லை நீங்க நினச்ச மாறி வாழத்தான் பணம் வேணும் ..உண்மையான மதிப்பு மருவாத எல்லாம் அடுத்தவுங்க கஷ்டபடுத்தாத மனசுல அடங்கி இருக்கு!!
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment