உலகத்தில் எல்லோரும் அறிந்த, ஆனால் புரிந்து கொள்ளப்பட முடியாத மொழி மௌனம்....இதன் அதிர்வுகள் தரும் ஆர்ப்பரிப்பு எண்ணிலடங்காதவை..
மௌனங்களுக்கு பின்னால் யாரும் யூகித்தரிய முடியாத சத்தங்கள் நிறைந்திருக்கின்றன..
அவற்றில் குடிகொண்டிருக்கும் நிசப்தங்கள் தரும் விடைகள் யாராலும் விளங்கி கொள்ள முடியாதவை..அவற்றின் மேல் உறைந்திருக்கும் வார்த்தைகள் ஆயுள் மிக்கவை...!!!!எல்லா வண்ணக் கலவைகளின் இறுதியில் ஒளிந்திருக்கும் கருமையின் நிறம் போல நம்முள் உறங்கி கொண்டிருக்கும் மௌனத்தை சுவிகரித்து பாருங்கள்... உங்களுக்குள்ளேயே ஊடுவிச் செல்லும்
சுவாசத்தைக் கூட அறிவீர்கள்...வார்த்தைகளுக்கு வழி இல்லாமல் போகும் மௌனநிலையே உங்குள்ளாக உரையாடிக் கொள்ளும் வாய்ப்பு... இசைக் கோவையை மட்டுமே கேட்டிருந்த செவிகள் என்றாவதொரு நாள் இதய ஓசையை கேட்கட்டும்... கருவறைக்குள் மௌனம் பிரசவத்தில் நம் அழுகை,
எட்டு கால் யாத்திரையின் மௌனம்
மற்றவர் அழுகை...
இவற்றை வாழ்நாட்கள் இடைவெளியிலயே உணரத் தொடங்கினோமானால் ஆனந்த கீற்று உள்ளோடும் ,ஆனந்த கண்ணீர் மட்டும் வரமாகும் தவமே மௌனமாகும்....

நாளொன்றுக்கு சராசரியாக மனிதன் 7000 வார்த்தைகளை உச்சரிக்கின்றானாம்...
வார்த்தைகள் எண்ணங்களின் கருவூலங்கள்..
நல்வார்த்தைகளுக்கு எண்ணங்களை செழுமைப்படுத்த வேண்டும்..வார்த்தைகளற்ற யோக நிலையே கூர்மைப்படுத்தும் ..
வெளியேறிவிட்ட எந்த வார்த்தைகளும் நமக்கு சொந்தமானவை அல்ல...காற்றில் கரைந்த வார்த்தைகள் தரையில் கொட்டிய பாதரசத்தை குழந்தைகள் வெறுங்கையில் அள்ள முயற்சிப்பது போன்றதொரு செயல்... விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண் என்றார் புரட்சியாளர் ஒருவர்..

ஆயிரம் பேச்சுக் குரல்களின் மத்தியில் உங்கள் அமைதியின் அடர்த்தி மற்ற அனைவரையும் கவனிக்க செய்யுமானால் நீங்கள் பேசுவதை கேட்க இரண்டாயிரம் செவிகள் தயாராக இருப்பது திண்ணம்...சப்தங்களின்றி இருப்பது மட்டுமல்ல மௌனம், இரைச்சல்கள் மத்தியிலும் கல் என்பதாகும் ..கல் என்பதன் பொருள் தோண்டுதல் ..
மோன நிலையில் நமது அகங்காரங்களான கர்வம்,பொறாமை, காழ்ப்புணர்வு இவற்றை தோண்டி தூர எறிந்து நல்வினைகளுக்கு பொருத்தமான அன்பு,சகிப்புதன்மை இவற்றை இட்டு நிரப்புதலுக்கு அடிநாதமாக அமைவது மௌன நிலை மட்டுமே...

ஒரு ஜென் குருவிடம் சீடன் ஒருவன் நான் எப்பொழுது விழிப்புணர்வுடையவனாக மாறுவேன் என்று கேட்டதற்கு நாளை முதல் குடிலில் வந்து தங்கு என்றாராம்..காலையில் வழக்கம் போல் குளித்து ,தோட்ட வேலைகள் செய்து,உணவருந்தி விட்டு அமைதியாகவே இருந்தாராம்..அடுத்த நாள்,அதற்கடுத்த நாள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கவும்,எதையாவது சொல்வார் என்று காத்திருந்த சிஷ்யன் கடுப்பாகி குருவே நீங்கள் எனக்கு எதுவும்
கற்றுதரவில்லையே!!!என்றான்..இல்லை நீ தான் கவனிக்க தவறிவிட்டாய் நான் குளிக்கும் பொழுது குளித்தேன், உண்ணும் போது உண்டேன்,தோட்ட வேலையின் போது வேலை செய்தேன்..என்றார் சிஷ்யனுக்கு புரிந்து விட்டது மௌனமாய் இருப்பது செயலற்று இருப்பதன்று..!!மாறாக விழிப்புணர்வுடன் இருப்பது!!!
ஒருநாளேனும் மௌனமாய் இருந்து உள்ளிருக்கும் ஆற்றலை உணர்ந்து பாருங்கள்..

மரங்களின் மௌனம் தென்றல்
மலைகளின் மௌனம் நீர்வீழ்ச்சி
நெருப்பின் மௌனம் தீபம்
ஆழ்கடல் மௌனம் அலை
மௌனங்களுக்கு பின்னால் எல்லாம் அழகும் ,ஆச்சர்யமும் அடங்கியிருக்கின்றன....

No comments:
Post a Comment