எனக்கு 💋 முத்தம் என்றால் கொள்ளைப் ப்ரியம்...முத்தம் கொடுத்தா கலோரியெல்லாம் வீணாகும் என்று அறிவியல் சொல்லுகிறது!!!! நான் எத்தனை லட்சம் கலோரி வேண்டுமானாலும் செலவழிக்க தயாராகவே இருக்கிறேன்..கடந்த இரண்டு வருடமாகவே அவரிடம் முத்தம் பெறுவது எனக்கு மிகவும் சிரத்தையாகவே இருந்தது!!! அந்த முத்தத்திற்கா எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராகவே இருந்தேன்!!!அருணாச்சலமாக மாறி முப்பது நாளில் முப்பது கோடியும் கூட....அவருக்கென்னவோ இந்த முத்தம் தீண்டதகாததாக மாறிவிட்டது போல!!!!நானும் கடந்த இரண்டு நாட்களாக உன் பிறந்த நாளன்றாவது எனக்கு முத்தம் கொடு என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன்..எத்தனையோ முறை முட்டியும் முடியாது என்ற பதிலே வந்தது!!!அந்த நாளும் வந்தது, ஆம் அன்று அவரின் பிறந்த நாள் ...காலையிலயே வாழ்த்துச் சொல்லி எப்படியும் முத்தம் வாங்கிவிடலாம் என்றிருக்க அவரோ, பிறந்தநாளென்று பார்க்கிறேன் இல்லையென்றால் திட்டி விடுவேன் என்று சொல்ல கல்லூரி கிளம்பி வந்துவிட்டேன்!!!! இன்று மாலை எப்படியாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி அவரின் அன்பை பெற்று முத்த சத்தம் பெற்றுவிடலாமென்று முடிவு பண்ணி கல்லூரி வந்துவிட்டேன்!!! மாலையும் வந்தது ,வீட்டில் அவர் ,அவரின் பெற்றோர் எல்லாரும் இருக்க முத்தம் பெற முடியவில்லை!!! அலங்காரம் எல்லாம் பண்ணிவிட்டு பிறகு அவரையும் ,கூடவே துணைக்கு ஒருவரையும் அழைத்துக் கொண்டு பார்வையற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன்..பிறந்த நாள் அன்று கேட்பவர் கொடுப்பது தானே சரியென்று அந்த பெரியவரும் எனக்கு ஆதரவளித்து பேசிக்கொண்டு வந்தார் !! அதற்கு அவர் நீ சின்ன பையன் உனக்கு தெரியாது பேசாம வா என்று கூறிவிட்டார்...பிறகு வீட்டிற்கு வந்து பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து விட்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம்..அவர் தனியறையில் இருந்தார்,கடைசியாக முயற்சித்து பார்க்கலாமென்று முயன்று ஒரே ஒரு முத்தம் என்று கேட்க கார்மேகத்தில் வெட்டிய மின்னல் போல சடாரென்று கன்னத்தில் இச் கொடுத்துவிட்டார்..அந்த முத்தம் இப்போது வரை என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது....
சும்மாவே முத்தம் கொடுக்க மாட்டார்..இப்போது வேறு ஒற்றை இலக்க வயதிலிருந்து பத்து வயதை தொட்டுவிட்டார் என் மாப்பிள்ளை!!!!எனக்கு ஆதரவளித்த ஆறு வயது பெரியவர், என் அண்ணன் மகன்...
முத்தம் எப்போதுமே மகிழ்ச்சியின் சத்தம்
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment